குழந்தைகளில் காணப்படும் ஹைபர்டென்சன் பாதிப்பு
உயர் ரத்த அழுத்த பாதிப்பே, ஹைபர்டென்சன் என மருத்துவ நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பாதிப்பு, பெரும்பாலும் பெரியவர்களிடத்தே அதிகமாகக் காணப்பட்டு வருகிறது. ஆனால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்தப் பாதிப்பானது குழந்தைகளிடையேயும் காணப்படுவது தெரியவந்துள்ளது. இதன்மூலம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கான சாத்தியம் இருப்பது ஊர்ஜிதமாகி உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பை நிர்வகிக்க, ஆரம்பகால நோயறிதல் மற்றும் [...]