தொலை மருத்துவ சேவைகளின் வகைகளை அறிவோமா?
மருத்துவச் சேவைகளை மேம்படுத்துவதற்கும், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், மருத்துவச் சேவைகளைக் கிடைக்கும் வண்ணம் உதவும் தொழில்நுட்பமே, டெலிமெடிசின் எனப்படும் தொலை மருத்துவம் ஆகும். துவக்கக் காலத்தில், மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப்புற மற்றும் மலைப்பகுதி மக்களுக்கு மருத்துவச் சேவைகள் வழங்க இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் 65 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், கிராமப்பகுதிகளிலேயே வசிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைக் குணப்படுத்துவதற்குப் போதுமான அளவிலான மருத்துவ வசதிகள் இல்லாத நிலை [...]