பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை எட்ட உதவும் குறிப்புகள்
நல்ல பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை என்பது நம் சூழலுக்கு ஏற்ற, பாதிப்பற்ற தீர்வைக் கண்டறிவதாகும். இச்சமநிலையைப் பேணுவதில், உங்கள் முன்னுரிமைகளை மதிப்பிடும் திறனே முக்கியமானது. உங்கள் வாழ்க்கை, எப்போதும் வேலைப்பளு உடன் இருப்பதாக நினைக்கின்றீர்களா? அப்படி என்றால், நீங்கள் மட்டும் அந்த மனநிலையில் இல்லை. இந்தியாவில் 80 சதவீதத்தினர், அத்தகைய மனநிலையில் தான் இருப்பதாக, வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். பணிச்சூழலுக்கும், வீட்டிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வரும் நிலையில், [...]