அன்றாட வாழ்க்கையில் முதுகெலும்பு ஆரோக்கியம் மேம்பட
நம் உடலின் அடிப்படைக் கட்டமைப்பாக விளங்கும் முதுகெலும்பின் ஆரோக்கியம், நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அன்றாட வாழ்க்கை முறையில் நாம் மேற்கொள்ளும் நடத்தல், உட்காருதல், படுத்தல் போன்ற உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முதுகெலும்பின் நிலையைச் சார்ந்தே உள்ளன. ஆரோக்கியமான முதுகெலும்பு நம் உடல் அசைவுகளுக்கு வலிமையையும் நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது. அதே நேரம், முதுகெலும்புப் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள், நம் அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. [...]