ஊட்டச்சத்து இடைவெளி- அடையாளம் காண்பது எப்படி?
நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்கள் செயல்படுவதற்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் உள்ளிட்ட மற்ற ஊட்டச்சத்துகள் கிடைக்காத நிலையையே, ஊட்டச்சத்துக் குறைபாடு என்கிறோம். இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினை, மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது குறிப்பாக இளம்குழந்தைகளிடையே அதிகம் காணப்படுகிறது. இக்குறைபாடே இளம் குழந்தைகள் மரணத்திற்கு முக்கிய காரணமாகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினைக்குத் தீர்வு காண, அரசும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், போதிய [...]