ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயலிகளின் நன்மைகள்
மனிதனின் புலனுறுப்புகளில் ஒன்றாக மொபைல் போன் மாறிவிட்டது என்றே நாம் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு, மக்களின் வாழ்க்கையில், மொபைல் போன் நீக்கமற நிறைந்துவிட்டது. உலக அளவில் 83 சதவீதப் பேரிடம், ஸ்மார்ட்போன்கள் உள்ளதாக, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளில் தெரியவந்து உள்ளது. இந்த நவீன உலகில், ஸ்மார்ட் போன்கள் தொலைதொடர்பு வசதிக்கு மட்டுமல்லாமல், உடல்நல ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் பயன்படுகின்றன. உடல்நல ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் வகையிலான செயலிகளை ஸ்மார்ட்போன்களில் நிறுவுவதால், நமது [...]