MRI ஸ்கேன் – எந்தெந்த நோய்களைக் கண்டறிய முடியும்?
கடுமையான வலி, விவரிக்க இயலாத அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா? இந்த நிலையில், நீங்கள் மருத்துவரிடம் சென்றால், உங்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பின் மூலத்தைக் கண்டறிய அவர்ப் பல்வேறு சோதனைகளுக்குப் பரிந்துரைப்பார். இறுதியில், MRI ஸ்கேன் சோதனைத் தான் தீர்வு என்ற முடிவுக்கு வருவார்.
உங்கள் உடலில் தோன்றும் எல்லாவிதமான பாதிப்புகளையும், அவற்றின் மூலங்களையும் கண்டறிய, MRI ஸ்கேன் சோதனைப் பேருதவி புரிகிறது. எக்ஸ்ரே சோதனை உள்ளிட்ட மற்ற சோதனைகளைக் காட்டிலும், நோய்க் கண்டறிதலில், MRI ஸ்கேன் சோதனையின் பங்கு அளப்பரியது ஆகும்.
MRI ஸ்கேன் சோதனையின் மூலம் கண்டறியப்படும் நோய்ப் பாதிப்புகள் குறித்து விரிவாகக் காண்போம்
மூளை மற்றும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்புகள்
மார்பில் வலி உணர்வு, சுகவீனம், கைகள் மரத்துப்போதல், பேசுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்ட நிலையில், நீங்கள் MRI ஸ்கேன் சோதனையை மேற்கொள்ளும் பட்சத்தில், உங்களுக்குப் பக்கவாத பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும்.
அதேநேரம், உங்களுக்குத் தசைப்பிடிப்பு, விறைப்புத்தன்மை, பலவீனம், பார்வைக் குறைபாடுகள், உணர்வு இல்லாத நிலை அல்லது கூச்ச உணர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்து, MRI ஸ்கேன் சோதனை மேற்கொண்டால், மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ் பாதிப்பு இருப்பதை அறியலாம்.
பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்குக் கடுமையான தலைவலி இருப்பவர்களுக்கு, MRI ஸ்கேன் சோதனை மேற்கொண்டால், மூளையில் கட்டி அல்லது நீர்க்கட்டி இருக்கும்பட்சத்தில், அவர்களுக்குச் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
மூட்டுகளில் உண்டாகும் காயங்கள்
MRI ஸ்கேன் சோதனை, மூட்டுகளில் ஏற்படும் காயங்களைக் கண்டறிய பேருதவியாக உள்ளன. மூட்டுப்பகுதிகளைச் சுற்றி உள்ள மென் திசுப்பகுதிகளான தசைகள், தசைநார்கள், தசைநாண்கள், எலும்புகள், குருத்தெலும்புகள் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டு உள்ள காயங்களை, இந்தச் சோதனையின் மூலம் கண்டறியலாம்.
இதயப் பிரச்சினைகள்
இதயச் செயலிழப்பு முதல் இதயத்தில் ஏற்படும் அழற்சி அல்லது தொற்றுக்கள் உள்ளிட்ட பாதிப்புகளை, MRI ஸ்கேன் சோதனையின் மூலம் கண்டறியலாம். இதுமட்டுமல்லாது, இதய வால்வுகளில் ஏற்பட்டு உள்ள மாற்றங்களையும் இதன்மூலம் அறியலாம்.
உங்கள் இதயத்தின் மேலறைக் குறுநடுக்கம் ( atrial fibrillation ) இருப்பதை மருத்துவர் உணரும்பட்சத்தில், MRI ஸ்கேன் சோதனை மேற்கொண்டால், இதயத்தின் எந்தப் பகுதியில் சீரற்ற இதயத்துடிப்பு இருக்கின்றது என்பதையும், இதயம் விரிவடைந்து உள்ளதா, தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு உள்ளனவா அல்லது இதயத் திசுக்களில் ஏதேனும் வடுக்கள் உள்ளனவா என்பதை அறிய முடியும்.
கல்லீரல் மற்றும் வயிற்றுப் பகுதியில் நோய்ப் பாதிப்பு
செரிமான பிரச்சினையின் காரணமாக, நீங்கள் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் MRI ஸ்கேன் சோதனை மேற்கொண்டு இருந்தால், கட்டிகள், கல்லீரலில் ஈரல் அழற்சி, குடல் அழற்சி நிலைகளான க்ரோன்ஸ் நோய், அல்சரேட்டிவ் பெருங்குடல் பாதிப்பு அல்லது டைவர்டிகுலிஸ் நிலைகளைக் கண்டறிய உதவுகிறது. சிறுநீரகங்கள், மண்ணீரல், கணையம் மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிய முடியும். ஆண்களில், இடுப்பு பகுதி MRI ஸ்கேன் சோதனை, புராஸ்டேட் மற்றும் டெஸ்டிகுலார்ப் பகுதியில் உண்டாகும் புற்றுநோய் பாதிப்பை அறிய உதவுகிறது
இடுப்பு வலி மற்றும் யோனிப்பகுதியில் அசாதாரண ரத்தப்போக்கு
உங்களுக்குத் தாங்க முடியாத இடுப்பு வலி இருந்து, நீங்கள் மருத்துவரை அணுகும்பட்சத்தில், அவர் உங்களை MRI ஸ்கேன் சோதனைச் செய்து கொள்ளப் பரிந்துரைச் செய்வார். MRI ஸ்கேன் சோதனையின் முடிவில், இது சாதாரண வெறும் வலிதானா அல்லது அசாதாரண ரத்தப்போக்குக் காரணமா என்பதையும், இடுப்பு வலிக்கான மூலத்தையும் அவர்க் கண்டறிந்து விடுவார்.
MRI ஸ்கேன் சோதனை முடிவுகள், எண்டோமெட்ரியாசிஸ் மட்டுமல்லாது, நார்த்திசுக் கட்டிகளையும் கண்டறிய உதவுகிறது. இந்த நார்த்திசுக்கட்டிகள், பெரிய திராட்சைப் பழம் அளவிற்கு வளரக்கூடியது. இனப்பெருக்கப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளான எண்டோமெட்ரியல், கருப்பை அல்லது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மட்டுமல்லாது சிறுநீர்ப்பைப் புற்றுநோய் பாதிப்புகளையும் கண்டறிய உதவுகிறது.
மேலும் வாசிக்க : தலை மற்றும் மூளைப் பகுதியின் MRI ஸ்கேன் – அறிவது என்ன?
நரம்பமைவு சார்ந்த அசாதாரண மாற்றங்கள்
பக்கவாத பாதிப்பிற்கு வழிவகுக்கும் வாஸ்குலார்ச் சிக்கல்களைக் கண்டறிவதோடு மட்டுமல்லாது, அதிர்ச்சிகரமான நிகழ்வின் போது மூளைக்கு ஏற்படும் காயங்களையும் கண்டறிய MRI ஸ்கேன் சோதனை உதவுகின்றது.
முதுகெலும்பு டிஸ்க்குகளில் ஏற்படும் பிரச்சினைகள்
நீங்கள் கடுமையான முதுகுவலி அல்லது தாங்க முடியாத கால் வலியால் அவதிப்பட்டால், அதற்குத் தீர்வு காணும் பொருட்டு, MRI ஸ்கேன் சோதனையை மேற்கொண்டு இருந்தால், உங்களுக்குக் குடலிறக்க வட்டு, வட்டுக்கள் வீங்கிப்போதல், வட்டுக்கள் சுருங்குதல், ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறியலாம்.
இதுபோன்ற பாதிப்புகளைக் கண்டறிய, MRI ஸ்கேன் சோதனைப் பேருதவியாக உள்ளது. முன்னணி மருத்துவ நிறுவனங்கள், இந்த ஸ்கேன் சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.