நீரிழிவு மேலாண்மைக்கான வாழ்க்கைமுறை மாற்றங்கள்
நீரிழிவுப் பாதிப்பு என்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் ஏற்படும் நாள்பட்ட நோய்ப்பாதிப்பு ஆகும். இந்நோய் ரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், இதயம் மற்றும் பிற உறுப்புகளுக்குக் கடும் சேதம் விளைவிக்கிறது.இன்சுலின் ஹார்மோன் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோன் சுரக்காத அல்லது போதிய அளவு சுரக்காத நிலையே நீரிழிவு நோய்க்குக் காரணமாகிறது. சர்வதேச அளவில் 420 மில்லியனுக்கும் மேற்பட்டோர்,இந்த நீரிழிவு நோய்ப்பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ள உலகச் [...]