தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறையின் வெற்றிக் கதைகள்
பாரம்பரிய உணவுத்திட்ட முறைகள் பொதுவான தேவைகளுக்கு மட்டுமே பொருந்துகின்றன. இதனால், பயனர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமாகிறது. இந்தப் பாரம்பரிய உணவுமுறையில் உணவு விருப்பங்கள், கலாச்சாரம், வாழ்க்கைமுறைப் போன்றவைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இதனால் பயனர்கள் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து முறையைப் பின்பற்றுவதில் சிரமப்படுகின்றனர். பாரம்பரிய உணவுமுறையில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் பயனர்களிடம் எதிர்மறை உணர்வுகளையும், ஒழுங்கற்ற உணவு பழக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. இதன்காரணமாகவே, தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து முறைப் பிரபலமாகத் துவங்கியது. [...]