மனநல விழிப்புணர்வு – சரியா அல்லது தவறா?
மன ஆரோக்கியம் என்பது யாதெனில், உணர்ச்சிகள், உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வை உள்ளடக்கிய நிகழ்வு ஆகும். இது நாம் என்ன நினைக்கிறோம், என்ன உணர்கிறோம், எப்படிச் செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது. மன ஆரோக்கியம் நமது உறவுகள், தேர்வுகள் மற்றும் மன அழுத்தத்தைக் கையாளும் விதத்தை நிர்ணயிக்கிறது.வயது, பாலினம், இனம், வருமான நிலை உள்ளிட்ட காரணிகளின் சார்பின்றி, மனநலப் பாதிப்புகளானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மனநலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதான களங்கத்தை [...]