வாழ்க்கை முறை மதிப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
மனிதர்களின் உடல் ஆரோக்கியம் எப்போது எல்லாம் பாதிப்பு அடைகின்றதோ, அப்போது எல்லாம், ஃலைப்ஸ்டைல் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வாழ்க்கைமுறை என்ற வார்த்தை அதிகமாகப் பிரயோகிக்கப்படுகிறது. எந்த வகையான உணவுகளை உட்கொள்கின்றோம், உறங்கும் நிலை, உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி பழக்கங்கள், குடி மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா உள்ளிட்ட காரணிகள் தான், நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.
வாழ்க்கைமுறை என்பது மனித உடல் ஆரோக்கியம் மேம்படுதலை, இலக்காகக் கொண்ட நிகழ்வு ஆகும். அதாவது, ஒருவர் எவ்வித உடல்நலக் குறைவு, நோய் உள்ளிட்டவை இல்லாமல், மகிழ்ச்சியாக வாழ்வதை, இது குறிக்கின்றது. உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அதற்கேற்ற மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு, மீண்டும் பூரண உடல்நலம் பெற்று சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதே, இதன் பொருள் ஆகும். மனிதனின் ஆரோக்கியத்திற்கு, வாழ்க்கை முறைக் காரணிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்பது இதன்மூலம் புலனாகிறது.
வாழ்க்கை முறை மதிப்பீட்டின் நன்மைகள்
ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் போது, அதன் பாதிப்பு தீவிரமாகும்வரை, அந்நபர், அவரது வாழ்க்கை முறை நடவடிக்கைகளை மாற்றி அமைத்துக் கொள்வது இல்லை என்று வாழ்க்கை முறை மதிப்பீடு தொடர்பாக, 1981ஆம் ஆண்டில் ஆராய்ச்சி மேற்கொண்ட லிங்க் மற்றும் ஹாரல் குறிப்பிட்டு உள்ளனர்.
உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவ நிபுணர்கள், மக்களுக்கு, அதன் அபாயங்கள் குறித்து விளக்கி வருகின்றனர். இதன்மூலம், மக்களுக்கு வாழ்க்கை முறைக் காரணிகளின் பயன்கள் அதிகரிக்கின்றன. உடல் தீங்கு ஏற்படுத்தும் சூழல்கள் குறித்து அறிந்த நபர், அத்தகைய சூழல்களை நிச்சயம் தவிர்த்துவிடுவார்.
உடல்நல அபாயங்களை அடையாளம் காணுதல்
நாம் பணிபுரியும் இடத்தில் நிகழும் காயங்கள், நோய், அதன்காரணமாக இயல்பாகச் செயல்பட முடியாத நிலை உள்ளிட்டவை, உடல்நல அபாயங்களாக வரையறுக்கப்படுகின்றன. சில அபாயங்கள், பணியிடங்களிலேயே எளிதாக அடையாளம் காணப்படுகின்றன. உதாரணமாக, உயரமான இடத்தில் வேலைச் செய்யும் தொழிலாளர், எதிர்பாராதவிதமாக, மேலிருந்து கீழே விழும்போது ஏற்படும் காயங்கள் உள்ளிட்டவை ஆகும். வாழ்க்கை முறை, மதிப்பீடு, பணியிடங்கள் மட்டுமல்லாது மற்ற இடங்களிலும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிட உதவுகிறது. இது சுகாதாரக் கல்வி மற்றும் மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில் சாத்தியமாகிறது. தொழிலாளர்களுக்கு, இந்த அபாயங்கள் குறித்த அறிவுரையை, நாம் முன்கூட்டியே வழங்கிவிட்டால், அவர்கள், அதற்கு உரித்தான வாழ்க்கை முறை மற்றும் பணிவாய்ப்பு விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். இந்த அறிவுரையின் மூலம், நமது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு உண்டாவதில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
மருத்துவ மதிப்பீட்டு முறையில், நாள்பட்ட நோய்களுக்கான காரணிகளை அடையாளம் காண்பதற்கு, குறிப்பிட்ட வயது, பாலினம் உள்ளிட்ட தரவுகளுடன் பெறப்பட்ட முடிவுகளை ஒப்பிடுவது அவசியமாகிறது. இது ஒத்த வயது மற்றும் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் முடிவுகளுடன் ஒப்பிடுவதற்கான செயல்முறை, தொடர்பு இடர் மதிப்பீடு என்று குறிப்பிடப்படுகிறது. உயர் ரத்த கொழுப்பு மற்றும் நுரையீரல் செயல்பாடுகளில், பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய காரணிகளின் இருப்பை முன்கூட்டியே அறியும்பட்சத்தில், அந்தப் பாதிப்புகளை, அதன் துவக்கத்திலேயே தடுத்துவிட முடியும். ஒரு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டபிறகு, மேற்கொள்ளும் சிகிச்சையைவிட, அதை வராமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள், செலவு குறைந்தது மட்டுமல்லாமல், அனைவராலும் விரும்பத்தக்கது ஆகும். பணியிடங்களுக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ள அபாயங்களை அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாது, அதை அவ்விடத்திலிருந்து அகற்றுவது இன்றியமையாததாகும்.
நல்வாழ்க்கையை ஊக்குவித்தல்
வாழ்க்கை முறை மதிப்பீடு என்பது, ஒருவரின் உடல்நல ஆரோக்கியத்தைப் பாதிக்கவல்லப் பாதிப்புக் காரணிகள் மற்றும் அவரின் சுகாதார நடத்தைகள் குறித்த விரிவான பார்வை ஆகும். இது பாதிப்பு அபாயங்களை அடையாளம் காணவும் உடல்நலத்தை மேம்படுத்தி நல்வாழ்வை அமைப்பதற்கான வழிவகைகளில் போதிய கவனம் செலுத்துவதற்கு, கட்டமைக்கப்பட்ட வழியாக இது கருதப்படுகிறது. உடல்நலத்தைப் பாதிக்கும் காரணிகள் மற்றும் தனிநபர் விருப்பங்கள் உள்ளிட்டவையை, வாழ்க்கை முறை மதிப்பீடு எடுத்துக்காட்டுகிறது.
வாழ்க்கை முறை மதிப்பீட்டின் முதன்மையான நோக்கம் யாதெனில், மனிதர்களின் தினசரி நடவடிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் எவ்வாறு அவர்களின் உடல் நலத்தைப் பாதிக்கின்றன என்பது குறித்த விழிப்புணர்வை, அவர்களிடத்தே ஏற்படுத்துவது மட்டுமல்லாது, வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் சில மாற்றங்களால், உடல்நல ஆரோக்கியம் மேம்படுவதை எடுத்துரைப்பதும் ஆகும். உடல்நலப் பாதிப்பிற்குக் காரணமாக அமையும் காரணிகளை அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்த்து, நல்வாழ்க்கை வாழ முற்படுவதே, வாழ்க்கை முறை மதிப்பீட்டின் இலக்கு ஆகும்.
நல்வாழ்க்கை என்பது, ஒரு நேர்மறையான நிலையாக வரையறுக்கப்படுகிறது. இது உடல்நலன், உணர்ச்சி, அறிவுசார், சமூக ஆரோக்கியத்தின் கலவையான சமநிலையாகக் குறிப்பிடப்படுகிறது. மக்கள், தங்களது உடல்நல ஆரோக்கியத்தின் மதிப்பைப் புரிந்து கொள்வதன் மூலம், அவர்கள் உயர்வான வாழ்க்கை வாழத் துணைபுரியும். தனிப்பட்ட வாழ்க்கைமுறையில், பல்வேறு மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், தனிநபர் மற்றும் ஒரு சமூகத்தின் நல்வாழ்வையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் வாசிக்க : MRI பரிசோதனையால் செய்ய முடியாததை CT ஸ்கேன் என்ன செய்ய முடியும்?
வாழ்க்கைமுறையில் மாற்றங்களை மேற்கொள்ளுதல்
ஒருவர்த் தனது வாழ்க்கை முறையில், சில மாற்றங்களை மேற்கொள்ள விரும்பினால், அது மிகவும் கடினமான நடைமுறை என்பதை அவர் அறிந்திருப்பது அவசியமாகும். ஒருவர்த் தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், உடல்ரீதியாகக் கடும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இது அந்த நபருக்கு மிகுந்த சவாலாக இருக்கும் என்பதே திண்ணம். அதேபோல், நமது நடத்தைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்வது என்பது இலகுவான காரியம் அல்ல.
வாழ்க்கை முறையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக் கொள்வதே, இதன் முதல் படி ஆகும். இதில் மாற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்களுக்கான செலவு மற்றும் அதனால் நிகழக்கூடிய நன்மைகளின் மதிப்பீடும் இதில் அடங்கும். உதாரணமாக, ஒருவர்ப் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முற்பட்டால், சிகரெட்களுக்கு ஆகும் செலவு உடனடியாகக் குறையத் துவங்குகிறது. நீண்டகால நன்மை வேண்டுமெனில், சிகரெட் பயன்பாட்டின் அளவை, படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வரவேண்டும். குறுகிய கால அளவிலான இலக்கு, இந்தக் காலக்கட்டத்தில் அதிகப் பலன் அளிப்பவையாகத் திகழும்.
ஒருவர்த் தனது வாராந்திர உடற்பயிற்சியின் கால அளவை அதிகரிக்க நினைத்தால், தினமும் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியின் கால அளவை, முதலில் 5 நிமிடங்கள் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு படிப்படியாக முன்னேறினால் தான், வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்க முடியும்.
நாம் நிர்ணயித்த இலக்கை, செயலாக மாற்றுவதே, அடுத்தபடி ஆகும். இந்த நிகழ்வு, பெரும்பாலானோருக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கும். நம் நடத்தையில் மாற்றம் ஏற்படும்பட்சத்தில், அதை நாம் கண்காணிப்பது என்பது முக்கியமானது ஆகும். இந்த மாற்றங்களைக் கண்காணித்து, நாம் முன்பு டயரி உள்ளிட்டவையில் குறித்து வைத்துக் கொண்டு இருந்தோம். இந்த நவீன யுகத்தில், இதற்கும் மொபைல் செயலிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.
நடைமுறைக்குச் சாத்தியமான இலக்குகளை நிர்ணயித்தல்
வெற்றிகரமான வாழ்க்கை முறை மாற்றத்திற்கு, நடைமுறைக்குச் சாத்தியமான அதாவது யதார்த்தமான இலக்குகளை நிர்ணயிப்பது அவசியமாகும். ஒரு குறிக்கோள் அற்ற இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம், நாம் மாற்றங்களை நிகழ்த்திவிட இயலாது. மெற்கொண்டம் இலக்குகளில் வெற்றிப் பெற, பல நாள்கள் மற்றும் வாரங்கள் பொறுமைக் காக்க வேண்டும். முதலில் குறுகிய கால அளவிலான இலக்குகளை நிர்ணயித்து அதில் வெற்றிப் பெற்றபிறகு, நீண்டகால அளவிலான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.
நீங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தால், இந்த மாற்றத்தை விரைவில் அடைய, வாரத்திற்கு 4 நாள்கள் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வேன் என்று நடத்தையிலும் மாற்றம் மேற்கொள்வது முக்கியமானது ஆகும்.
ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்குதல்
ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்கும் நடைமுறை, 3 படிகள் கொண்டதாக உள்ளது. செயல்படுவதற்கான துவக்கமே முதல்படி ஆகும். செயல்படுதல் இரண்டாவது நிலை ஆகும். எவ்விதத் தூண்டுதலும் இன்றி, அதைத் தொடர்ச்சியாக செய்வது மூன்றாவது நிலை ஆகும். பழக்கவழக்கங்கள், ஒருவரின் நடத்தையுடன் பின்னிப் பிணைந்துவிட்டதால், அதில் மாற்றம் மேற்கொள்ள விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பு தேவைப்படுகிறது.
வாழ்க்கை முறையில் பயன்பாட்டில் உள்ள கெட்ட பழக்கங்களை மாற்றி, நல்ல பழக்கவழக்கங்களாக மாற்றுவது கடினமான காரியம், இந்த மாற்றத்திற்கு நீண்ட கால அளவு தேவைப்படும். நேர்மறையான சிந்தனை, சுய ஊக்கம், அதிக உறுதி உள்ளிட்டவைகளைத் தொடர்ந்து பேணிவந்தால், வாழ்க்கைமுறையில் மாற்றங்களை, எளிதாக நிகழ்த்திவிட இயலும். மாற்றங்களை மேற்கொள்ள நாம், முதலில் மனதளவில் ஆயத்தமாகிக் கொள்வது அவசியம் ஆகும்.
மாற்றப்பட வேண்டிய பழக்கவழக்கத்தை முதலில் அடையாளம் கண்டு, அதற்கான உந்துதல்களாக விளங்குபவைகளை இனம் கண்டறிய வேண்டும். அந்தப் பழக்கத்தின் தேவைகளை நிறைவேற்ற வெவ்வேறு முறைகளைக் கண்டறிய வேண்டும். இதிலிருந்து, ஒரு புதிய முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம், வெற்றிக்கான வாய்ப்புகள் வலுப்பெறுகின்றன.
நிபுணர்களின் வழிகாட்டல்
வாழ்க்கை முறையில் மாற்றங்கள் மேற்கொள்வதில் வெற்றிப் பெற, ஊட்டச்சத்து நிபுணர்கள், உடற்பயிற்சி வல்லுநர்கள், பிசியோதெரபிஸ்ட், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இவர்களை நாடுவதன் மூலம், நம்மால் இந்த மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா என்ற ஐயம் களைவதுடன், காலம் மற்றும் பொருள் விரயமும் தவிர்க்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டாகிறது. இந்த விவகாரத்தில், சுய ஈடுபாடு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இது, நிபுணர்களின் அறிவுரைகளுக்கு ஏற்ப நடக்க வைப்பதுடன், அதுதொடர்பான மருத்துவ சிகிச்சைகளுடன் ஒன்றிணைய வைக்கிறது. உடல்நல ஆரோக்கியத்திற்கும் மற்றும் நல்வாழ்க்கை வாழவும், துறைச் சார்ந்த நிபுணர்களின் அறிவுரை மற்றும் ஆலோசனை, சிறந்த முதலீடாக விளங்குகிறது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
இத்தகைய வழிமுறைகளை மேற்கொண்டு, நீங்களும் உங்களது வாழ்க்கை முறையில் மாற்றங்களை மேற்கொண்டு, சீரிய மற்றும் சிறப்பான வாழ்க்கையை வாழ்வீராக……