உடற்பயிற்சி எந்தளவிற்கு முக்கியமானது – அறிவோமா?
உடல் ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சி நிகழ்வானது சிறந்த வழிமுறையாகச் செயல்படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், மக்களின் சோம்பேறித்தனத்தின் காரணமாக, அவர்கள் உடற்பயிற்சி நிகழ்வைத் தவிர்ப்பதால், பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இளம் வயதினர் வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியும், 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.உடற்பயிற்சி பழக்கமானது உடலுக்கு மட்டுமல்லாது மன ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சிகளைத் தவறாது மேற்கொள்வதன் மூலம் [...]