மன ஆரோக்கியத்தைப் புரிந்துக் கொள்வோம்…
ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடலில் வாழ்கின்றது என்ற பழமொழிக்கு ஏற்ப, உடல் மற்றும் மன ஆரோக்கியம், பல்வேறு விவகாரங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை ஆகும்.
ஒருவரின் உணர்ச்சி, உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வு உள்ளிட்டவைகளே, நல்ல மனநலம் என்று வரையறுக்கப்படுகின்றது. இது ஒருவர் என்ன நினைக்கின்றார், எவ்வாறுச் செயல்படுகின்றார், ஒரு விசயத்தை எவ்வாறு உணர்கின்றார் என்பவற்றைக் குறிக்கிறது.முக்கியமான தருணங்களில் முடிவெடுக்கும் திறன், மன அழுத்தத்தைக் கையாளும் சூழல், மனதளவில் எவ்வாறு உள்ளனர் உள்ளிட்ட குணாதிசயங்களை இது குறிக்கிறது.
மன ஆரோக்கியம் என்பதைப் பெரும்பாலானோர் மன இறுக்கம், பதட்டம், ஸைசோப்ரினியா உள்ளிட்ட மனநல பாதிப்புகள் என்று அர்த்தம் கொள்கின்றனர்.
உங்களூக்குத் தெரியுமா…..இன்றைய போட்டி உலகில், இளம் தலைமுறையினரில் ஐந்து பேரில் ஒருவர் மன ஆரோக்கியம் சார்ந்தப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 6 சதவீதம் பேருக்கு, மன ஆரோக்கியம் தொடர்பான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. அதேபோன்று, 35 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், உளவியல் சார்ந்தப் பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற நிபுணர்களின் உதவியை நாடுகின்றனர்.
மோசமான மன ஆரோக்கியம் என்றால் என்ன?
ஒரு விசயம் நடைபெறும் போது, அது நல்லதா, நன்றாக நடக்கின்றதா என்பதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த முனையும்போது, அவரது மன ஆரோக்கியம் பாதிப்படைகின்றது.
மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட உடற்பாதிப்புகள் குறித்து அறிந்துள்ள பலரும், மோசமான மன ஆரோக்கியம் குறித்து அறிந்து இருப்பதில்லை என்பதே வேதனைக்குரிய விசயம்.
அறிகுறிகள்
எப்போதும் கவலையுடனோ அல்லது சோகத்துடனோ இருத்தல்
கவனச்சிதறல்கள் அதிகம் ஏற்படுதல்
வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் சமூகத் தொடர்புகளில் இருந்து விடுபடுதல்
உறக்கம் மற்றும் சாப்பிடும் பழக்கங்களில் முக்கிய மாற்றங்கள்’
தற்கொலை எண்ணம் மற்றும் தனிமையின் கொடூரம்
அதீதச் சிந்தனை மற்றும் குற்ற உணர்வு
அடிக்கடி மனநிலை மாற்றம்
யதார்த்த வாழ்க்கையிலிருந்து விடுபடுதல்
வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமை
மக்கள் மற்றும் சந்தர்ப்பங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல்
பாலியல் உறவில் மாற்றங்கள்
அதீதக் கோபம், வன்முறை உணர்வு
மோசமான மன ஆரோக்கியத்தால் ஏற்படும் பாதிப்புகள்
மோசமான மன ஆரோக்கியத்தால் ஏற்படும் பாதிப்புகளை, மன இறுக்கம் சார்ந்தக் குறைபாடுகள், மனநிலைச் சார்ந்தக் குறைபாடுகள், மனச்சிதைவுச் சார்ந்தக் குறைபாடுகள் மற்றும் நரம்பியல் வளர்ச்சிச் சார்ந்தக் குறைபாடுகள் என முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்.
மன இறுக்கம் சார்ந்தக் குறைபாடுகள்
இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட பொருட்கள் அல்லது சூழல்களுடன் தொடர்புடைய பயம் மற்றும் பதட்டம் கொண்டுள்ளனர். அவர்கள் இதை சமாளிக்க கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர்.
மனநிலைச் சார்ந்தக் குறைபாடுகள்
இத்தகையக் குறைபாடுகள், குறிப்பிடத்தக்க மனநிலை மாற்றங்களை உள்ளடக்கியவை. அதீத மகிழ்ச்சி அல்லது அதிக மனச்சோர்வு உள்ளிட்டவைகள் இதில் அடங்கும்.
மனச்சிதைவுச் சார்ந்தக் குறைபாடுகள் (Schizophrenia)
மனச்சிதைவுச் சார்ந்தக் குறைபாடுகள் , நேர்மறை மற்றும் எதிர்மறை அறிகுறிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில், சிந்தனைக் குறைபாடுகள் பிரம்மை உணர்வு போன்றவை நேர்மறை அறிகுறிகளாகவும், ஈடுபாடு இல்லாதது, அடிக்கடி மனநிலை மாற்றம் உள்ளிட்டவை, எதிர்மறை அறிகுறிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
அறிகுறிகள்
மகிழ்ச்சியான நடவடிக்கைகளைத் தவிர்த்தல்
உறக்கம் மற்றும் சாப்பிடும் முறைகளில் மாற்றம்
நம்பிக்கை இழப்பு
எதிர்மறை உணர்வுகளை வெளிக்காட்டுதல்
குழப்பமான மனநிலை
அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சுணக்கம்
நரம்பியல் வளர்ச்சிச் சார்ந்தக் குறைபாடுகள்
இத்தகையக் குறைபாடுகள், மொழி, இயக்கம், சமூகம் மற்றும் அறிவுசார்ச் செயல்பாடுகளில் இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றன. ஆட்டிஸம் குறைபாடு, இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க : உங்களின் உடற்தகுதியை நீங்களே கண்காணிக்கத் தயாரா?
மன ஆரோக்கியம் ஏன் முக்கியம்?
சிந்தனைகள், நடத்தைகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு, மன ஆரோக்கியம் முக்கியக் காரணமாக விளங்குகின்றது. ஆரோக்கியமான மனநிலைக் கொண்டவர்களால் மட்டுமே, வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை, திறம்பட மேற்கொள்ள முடியும். சமூகத் தொடர்புகள், உறவுகள் மற்றும் வாழும் சூழலுக்கு ஏற்பதன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கு, மன ஆரோக்கியம் இன்றியமையாததாகிறது.
மன ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது?
உணர்வுகள் ரீதியாகவும், மனரீதியாகவும் தன்னை மாற்றி அமைத்துக் கொள்ள முடிந்த நபர்களால் மட்டுமே, கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்கவும், நேர்மறைப் பார்வையைப் பேணிக் காக்கவும் முடியும். சிறுசிறு விஷயங்கள் கூட, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதலில் முக்கியப் பங்காற்றுகின்றன.
மன ஆரோக்கியம் மேம்பட உதவும் வழிமுறைகள்
சமூகத் தொடர்புகளுக்கு முன்னுரிமை அளியுங்கள்
தினமும் 30 நிமிடங்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும்
மூளையை ஆரோக்கியமாக இயங்க உதவும் சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்
ஓய்வு நேரம் அவசியம்
பிறருக்கு நன்றிக் கூற மறவாதீர்கள்
தினமும் இரவு 7 முதல் 9 மணிநேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம்
எதையும் மிகைப்படுத்தாத சிந்தனை மற்றும் சுயப் பாராட்டை அனுமதியுங்கள்.
ஒரு செயலைச் செய்யத் தேவையான உந்துதலை அளிக்கும் நோக்கத்தைக் கண்டறிய வேண்டும்.
மன ஆரோக்கிய நிகழ்வு, ஒவ்வொரு நபர்களையும் வெவ்வேறான வழிகளில் பாதிக்கின்றது. ஒருவர், மகிழ்ச்சி மற்றும் உறவுகளில் மாற்றங்களைக் காணத் துவங்கும் போது, அதற்குத் தேவையான ஆதரவைப் பெற, அவருக்கு நேர்மறையான வழிகளே, ஆதரவுக்கரம் நீட்டுகின்றன.
வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான ஆதரவை வழங்கக்கூடிய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடவும்.
மன ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம் ஆகும்.
உளவியல் நிபுணர் அல்லது மனநல ஆலோசகரைச் சந்தித்து, உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணலாம்.
மன ஆரோக்கியம் குறித்து முழுமையாக அறிந்து கொண்ட நீங்கள், உங்களிடம் இந்தக் குறைபாடுகள் தொடர்பான அறிகுறிகள் இருந்தால், அதை உடனடியாக அகற்றி, சிறந்த மனிதராக விளங்கி, இந்த விவகாரத்தில், மற்றவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழுங்கள்.