மார்பகக் காந்த அதிர்வுப் படம் என்றால் என்ன, ?
மார்பகக் காந்த அதிர்வுப் படம் (Breast MRI) என்பது மார்பகப் புற்றுநோயின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்ற விரிவான தகவலை மோமோகிராமைப் பயன்படுத்திச் செய்யப்படும் பரிசோதனையை விடக் கூடுதல் தகவலை வழங்கும். அதிக அளவில் புற்றுநோய் ஆபத்து உள்ளவர்களுக்கு மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய மார்பக MRI பரிசோதனைப் பயன்படுகிறது.
மார்பகக் காந்த அதிர்வுப் படம் (MRI-Magnetic Resonance Imaging) காந்த அலைகள் மற்றும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி மார்பகத் திசுக்களின் விரிவான 3D படங்களை உருவாக்குகிறது. பொதுவாக MRI பரிசோதனை முடிக்க 25 முதல் 45 நிமிடங்கள் ஆகும்.
மார்பகத் திசுக்கள் அடர்த்தியாக இருந்தால் மோமோகிராம் மூலம் புற்றுநோயைக் கண்டறிவது கடினம். இத்தகைய சூழ்நிலைகளில் MRI பரிசோதனைப் பயன்படுத்தப்படுகிறது.பொதுவாக மோமோகிராமிற்குப் பதிலாகச் சில கூடுதல் பரிசோதனைகள் செய்ய MRI பரிசோதனைப் பரிந்துரைக்கப்படுகிறது.
விரைவான அல்லது சுருக்கமான MRI என்றால் என்ன?
விரைவான அல்லது சுருக்கமான மார்பகக் காந்த அதிர்வுப் படம் (MRI) என்பது ஒரு துணைப் பரிசோதனையாகும். இது வழக்கமான மார்பக MRI பரிசோதனையிலிருந்து வேறுபட்டது. மார்பகத் திசுக்கள் அடர்த்தியாக இருக்கும் பெண்களுக்கும், வேறு சில காரணிகளால் அதிக அளவில் புற்றுநோய் ஆபத்து உள்ள பெண்களுக்கும் இந்தப் பரிசோதனைச் செய்யப்படுகிறது
இந்தப் பரிசோதனை வழக்கமான MRI சோதனையோடு ஒப்பிடும்போது குறைந்த படங்களே எடுக்கும். மேலும் நேரமும் குறைவு. சுமார் 7முதல் 20 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிந்து விடும்.
சில காப்பீட்டுத் திட்டங்கள் முழு MRI கட்டணத்தை வழங்காததால், மக்கள் குறைந்த செலவுள்ள விரைவான MRI பரிசோதனையைத் தேர்வு செய்கிறார்கள்.ஆனால் இந்த விரைவான மார்பக MRI அனைத்து MRI மையங்களிலும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
மார்பக MRI பரிசோதனையின் நோக்கம்:
மருத்துவர் மார்பக MRI பரிசோதனையைப் பரிந்துரைக்கப் பல காரணங்கள் உள்ளன.
மார்பகப் புற்றுநோயின் அளவைக் கண்டறிய:
மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, மார்பக MRI பரிசோதனைப் புற்றுநோய் கட்டியின் அளவு மற்றும் இருப்பிடத்தைக் கண்டறிவதற்கும், மார்பகங்களில் வேறு ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கும் பயன்படுகிறது. புற்றுநோய் மார்புச் சுவருக்குள் அல்லது அக்குள் நிணநீர் முனைகளுக்குள் பரவியிருக்கிறதா என்பதைக் கண்டறியவும் பயன்படுகிறது.
கீமோதெரபி எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைக் கண்டறிய:
மார்பகப் புற்றுநோய்அறுவைச் சிகிச்சைச் செய்வதற்கு முன் கீமோதெரபி கொடுக்கப்படும். இந்த அணுகுமுறைக்கு “நியோட்ஜுவண்ட் கீமோதெரபி (neoadjuvant chemotherapy)” என்று பெயர். புற்றுநோய் கட்டியைக் கரைக்கக் கீமோதெரபி எவ்வளவு திறனுடன் செயல்படுகிறது என்பதைக் கண்காணிக்க மார்பக MRI பரிசோதனைப் பயன்படுகிறது. கீமோதெரபி சிகிச்சையின் தொடக்கத்தில் ஒரு MRI பரிசோதனையும், பிறகு சிகிச்சையின் நடுவிலோ அல்லது முடிவிலோ ஒரு MRI பரிசோதனையும் செய்யப்படலாம்.
மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய:
பொதுவாக மார்பகப் புற்றுநோய் கண்டறிய மோமோகிராம் பரிசோதனைச் செய்யப்படுகிறது. எனினும், சில சூழ்நிலைகளில் (உயிர் ஆபத்து, அடர்த்தியான மார்பகத் திசுக்கள், 50 வயதிற்கு முன் நோய் கண்டறிதல்) மோமோகிராம் தெளிவான முடிவுகளைத் தர இயலாது.இந்தச் சூழ்நிலைகளில் மார்பக MRI பரிசோதனைச் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மார்பகத்தில் அசாதாரணமாகத் தோன்றும் ஒன்றைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்க:
மோமோகிராம் அல்லது அல்ட்ராசவுண்டு பரிசோதனையில் கண்டறியப்படும் சந்தேகத்திற்கு இடமான பகுதியை மேலும் ஆய்வு செய்வதற்காக மருத்துவர்கள் சில சமயங்களில் மார்பக MRI பரிசோதனைச் செய்யப் பரிந்துரைச் செய்கின்றனர். மேலும் பயாப்ஸி பரிசோதனைத் தேவையா என்பதைத் தீர்மானிக்கவும் மார்பக MRI பரிசோதனை உதவுகிறது.
பயாப்ஸி செயல்முறையின் போது:
மார்பகத்தில் சந்தேகத்திற்குரிய பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பயாப்ஸி மூலமே கண்டறிய முடியும். இதற்கு வழிகாட்டியாக மார்பக MRI பயன்படுகிறது.(குறிப்பு: மருத்துவர்கள் எப்போதும் மார்பக MRI பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட படத்தினைப் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக மார்பக MRI பரிசோதனையைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கு இடமான பகுதி கண்டறியப்பட்டிருந்தால் பயாப்ஸி செயல்முறையின் போது வழிகாட்டியாகச் செயல்பட அல்ட்ராசவுண்ட் பயன்படுகிறது.)
சிலிகான் ஜெல் நிரப்பப்பட்ட மார்பக உள்வைப்புகள் (breast implants) சிதைந்துள்ளதா என்பதைச் சோதனையிட:
ஒருவரின் மார்பகங்களில் சிலிகான் ஜெல் நிரப்பப்பட்ட மார்பக உள்வைப்புகள் பொருத்தப்பட்டிருந்தால், அது சரியாக உள்ளதா அல்லது சிதைவு அடைந்துள்ளதா என்பதைக் கண்காணிப்பதற்காக, மார்பக அல்ட்ராசவுண்ட் அல்லது மார்பகக் காந்த அதிர்வுப் படம் (MRI) போன்ற பரிசோதனைகளைக் குறிப்பிட்டுள்ள கால இடைவெளியில் செய்து கொள்ள அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக (American Food and Drug Administration – FDA) அமைப்பு பரிந்துரைக்கிறது. மார்பக உள்வைப்பு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, ஐந்து முதல் ஆறு வருடங்கள் கழித்து முதல் MRI அல்லது அல்ட்ராசவுண்ட் பரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை எனத் தொடர்ந்து இந்தப் பரிசோதனைச் செய்து கொள்வது அவசியம்.
உள்வைப்பு சிதைவின் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும், அல்ட்ராசவுண்டில் உள்வைப்பின் நிலைத் தெளிவாகத் தெரியவில்லை எனில் மார்பக MRI பரிந்துரைக்கப்படுகிறது.மார்பக உள்வைப்புகளின் நிலைப்பாடு என்ன என்பதைக் கண்டறிய மட்டுமே மார்பக MRI பரிசோதனைச் செய்யப்படுகிறது என்றால் சோதனையின் போது காண்ட்ராஸ்ட் திரவம்(Contrast dye) பயன்படுத்தப்படாது.
உடலின் மற்ற பாகங்களில் MRI பரிசோதனை:
மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, மார்பகம் மட்டுமல்லாது உடலின் மற்ற பாகங்களிலும் MRI பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர் ஒருவருக்குப் பரிந்துரைக்கும் சூழ்நிலைகள் உருவாகலாம்.
உதாரணமாக, ஒருவருக்கு மெட்டாஸ்டேடிக் மார்பகப் புற்றுநோய்(metastatic breast cancer- உடலின் பிற பகுதிகளுக்குப் பரவிய மார்பகப் புற்றுநோய்)யின் அறிகுறிகள் இருந்தால் அல்லது ஒருவர் மெட்டாஸ்டேடிக் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவர் அவரது மூளை, முதுகு தண்டு அல்லது எலும்புகளின் MRI பரிசோதனைச் செய்யப் பரிந்துரைக்கலாம்
மார்பக MRI பரிசோதனையின் செயல்முறை:
பாரம்பரியமான மார்பக MRI பரிசோதனை மற்றும் விரைவான அல்லது சுருக்கமான மார்பக MRI பரிசோதனை ஆகியவை ஒரே வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன:
முதலில் பரிசோதனைக்கு உட்படுபவர்த் தங்களது உடைகளையும் ஏதேனும் நகைகள் அணிந்திருந்தால் அதையும் களைந்து விட்டு மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு முன்புறம் திறக்கும் அங்கி மற்றும் சிப்பர் (zippers) அல்லாத பான்ட் (pant) கொடுத்திருப்பார்கள், அதனை அணிந்து கொள்ள வேண்டும்.
கை அல்லது கையில் உள்ள நரம்பு வழியாக காண்ட்ராஸ்ட் திரவம் (Contrast dye) செலுத்தப்படும்.
சோதனையின் போது சோதனைச் செய்யப்படுபவரின் முகமும் வயிறும் கீழாக இருக்குமாறு மேடையின் மீது படுத்துக்கொள்ள வேண்டும். இந்த மேடை உங்களது இரண்டு மார்பகங்களும் தனித்தனியாக உள்ளே இறங்குவதற்கான திறப்புகளைக் கொண்டதாக இருக்கும். அதில் அவரது மார்பகங்கள் தொங்கிக்கொண்டிருக்கும், ஆனால் அழுத்தாது. ஒவ்வொரு திறப்பிலும் மார்பகச் சுருள் சூழ்ந்திருக்கும். இந்தக் கருவி MRI இயந்திரத்திலிருந்து வரும் காந்த சமிக்ஞைகளைக் கண்டறியும் ஒரு சமிக்ஞைப் பெறும் கருவி ஆகும்.
ஒரு பெரிய, குழாய் வடிவ MRI இயந்திரத்தின் மையத்தில் மேடைச் சரியத் துவங்கும். இந்த நேரத்தில் பரிசோதனைச் செய்யப்படுபவர் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். அவரால் எதையும் உணர இயலாது, ஆனால் MRI இயந்திரத்திலிருந்து மிகுந்த சத்தம் கேட்கும். அந்தச் சத்தத்தைத் தடுக்க அவருக்கு ஹெட்ஃபோன்கள் வழங்கப்படும். அவர் விரும்பினால் ஹெட்ஃபோன்களில் இசையைக் கேட்கலாம்.
தொழில்நுட்பவியலாளர் அல்லது கதிரியக்க நிபுணர்ப் பரிசோதனைச் செய்யப்படுபவரை வேறொரு அறையில் இருந்து கண்காணித்துக் கொண்டிருப்பார். ஒரு சிறப்பு ஒலிவாங்கியின் மூலம் அவர்கள் அவரிடம் சோதனையின் போது மூச்சைச் சில நொடிகள் விடாமல் இழுத்து வைத்திருக்கும்படி கேட்கலாம்.
மேலும் வாசிக்க : CT ஸ்கேன் vs MRI ஸ்கேன் – வேறுபாடுகள் என்ன?
மார்பக MRI பரிசோதனையின் செயல்முறை?
ஒருவர் MRI பரிசோதனைக்கு முன்பதிவு செய்யும்போதே, MRI பரிசோதனை மைய நிர்வாகிகள் அவர் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவார்கள். பரிசோதனைச் செய்யும் நாளில் உணவு மற்றும் பானங்களை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும், வழக்கம் போல் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா என்ற விவரங்களையெல்லாம் கூறிவிடுவார்கள்.
MRI பரிந்துரைத்த மருத்துவரின் மருந்துச் சீட்டு, தொடர்பு விவரங்கள், மற்றும் நோயாளியின் தகவல்களைப் பரிசோதனை மைய நிர்வாகிகளிடம் கொடுப்பது முக்கியம். இவைச் சோதனை முடிவுகளை மருத்துவர்களுக்கு அனுப்ப உதவும்.
மேலும் பரிசோதனைக்கு உட்படுபவர் மருத்துவரிடமும், பரிசோதனை மைய நிர்வாகிகளுடமும் கூற வேண்டியது:
ஒருவரது உடலில் ஏற்கனவே ஏதேனும் மருத்துவ சாதனங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் (மார்பகத்திசு விரிவாக்கிகள் உட்பட) பொருத்தி சிகிச்சை மேற்கொண்டிருந்தால் அதனைப் பற்றிய விவரங்களைக் கட்டாயமாக மருத்துவரிடமும், பரிசோதனை மைய நிர்வாகிகளுடமும் தெரிவித்து விட வேண்டும், (ஏனெனில் MRI பரிசோதனையின் போது வெளிப்படும் காந்தபுலத்தால் உடலில் பொருத்தபட்டிருக்கும் சாதனங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. ஒருவர்ப் பாதுகாப்பாக MRI பரிசோதனைச் செய்ய இது அவசியம்.)
பெருமபாலான MRI பரிசோதனையின் போது காண்ட்ராஸ்ட் திரவம் உடலில் செலுத்துவார்கள். ஒருவருக்குச் சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது அவர் ஏற்கனவே காண்ட்ராஸ்ட் திரவம் செலுத்துவதால் ஒவ்வாமை எதிர்வினையை எதிர்கொண்டிருந்தாலோ அதனையும் அவர் மருத்துவரிடமும், பரிசோதனை மைய நிர்வாகிகளுடமும் தெரிவித்து விட வேண்டும்.
பரிசோதனைக்கு உட்படுபவர்ப் பரிசோதனைச் செய்யும் அறைப் பற்றிய சிந்தனையில் பதட்டம் இருந்தாலோ அல்லது மார்பகங்களைக் கீழாக வைத்து படுத்துக்கொள்வதில் சிரமங்கள் இருந்தாலோ மருத்துவரிடம் தெரிவித்து விடலாம். அவர்ப் பரிந்துரைச் செய்யப்பட்ட மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை வழங்குவார். இந்த மருந்து மயக்கத்தைத் தரலாம், அதனால் பரிசோதனை முடிந்ததும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குத் துணைக்கு ஒருவர் இருப்பது அவசியம்.
பொதுவாக MRI பரிசோதனைக் கர்ப்ப காலத்தில் (குறிப்பாக முதல் மூன்று மாதங்களில்) காண்ட்ராஸ்ட் திரவம் கருவுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற எண்ணத்தின் காரணமாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை.
முன்பு மார்பக MRI-க்குப் பிறகு தாய்ப்பாலை நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய ஆய்வுகள் இது அவசியமில்லை என்கின்றன, ஏனெனில் காண்ட்ராஸ்ட் திரவம் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. எனினும், பரிசோதனைக்குப் பிறகு பாலை வெளியேற்ற வேண்டுமா என மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
முடிவுரை:
ஒரு கதிரியக்க நிபுணர் (மருத்துவப் படங்களை விளக்குவதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்) மார்பக MRI பரிசோதனையிலிந்து பெறப்பட்ட படங்களை ஆய்வு செய்து, பரிசோதனையின் முடிவுகளை அறிக்கையாக எழுதி, பரிசோதனைக்கு உத்தரவிட்ட மருத்துவருக்கு அனுப்புவார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சோதனைக்கு உத்தரவிட்ட மருத்துவர் MRI பரிசோதனையிலிந்து பெறப்பட்ட படங்களை ஆய்வு செய்து, முடிவுகளைப் பற்றிப் பரிசோதனைச் செய்து கொண்டவரிடம் பகிர்ந்துகொள்வார்.
பரிசோதனைச் செய்தவர் அறிக்கையை அஞ்சல் மூலமாகவும் அல்லது மருத்துவமனையின் நோயாளி தகவல் இணையத்தின் மூலமாகவும் பெறலாம். படங்களின் நகல் வேண்டுமெனில் அவற்றை ஒரு சிடியில் தருமாறு கேட்கலாம்.
கதிரியக்க வல்லுநர்கள் மார்பக MRI, மோமோகிராம் அல்லது அல்ட்ராசவுண்டில் கண்டறிவதை அறிக்கையாகப் பதிவு செய்ய மார்பகப் பரிசோதனை அறிக்கை ( Breast Imaging Reporting) மற்றும் தரவுத்தள மேலாண்மை முறைமை (Database System) அல்லது BI-RADS போன்ற அமைப்பைப் பயன்படுத்துகின்றனர். மருத்துவத் துறை அல்லாதவற்கு அறிக்கைப் பற்றி முழுவதுமாகத் தெரிய வாய்ப்பில்லை, ஆனால் கதிரியக்க வல்லுநர்களால் மருத்துவருக்கு அனுப்பப்படும் மார்பக MRI முடிவுகளின் எழுத்துப்பூர்வ அறிக்கை அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கியது.