ஆரோக்கியம், உணவுமுறையைத் தீர்மானிக்கும் ஜீன்கள்
கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, மருத்துவத்துறையில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊட்டச்சத்து நடைமுறைக்கு, மக்கள் அதிக முக்கியத்துவம் தர துவங்கி உள்ளனர். ஊட்டச்சத்து அறிவியல் என்பது எப்போதுமே சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் துறையாக உள்ளது.புதிய ஆராய்ச்சிகள் மற்றும் மாறும் மருத்துவ நடைமுறைகளுக்கு ஏற்ப, உணவுப் பரிந்துரைகளும் தொடர்ந்து மாற்றம் அடைகின்றன. மரபியல் மற்றும் மரபணுவியலில் சமீபத்தில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றங்களின் பயனாக, ஊட்டச்சத்து முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. [...]