நோயாளிகளின் நோயறிதலில் AI செயலிகளின் பங்கு
சமீபகாலமாக, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவானது, அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. மருத்துவத்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சுகாதாரச் செயலிகள் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இவை நோயாளிகளின் தேவைக்கான மருத்துவச் சேவைகளுடன் சிறப்பாகத் தொடர்புகொள்கின்றன. இது நோய்ப்பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறிவதால், நோயாளிகளுக்கு ஏற்றவகையிலான தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைத் திட்டங்களை வடிவமைக்க உதவுகின்றன. இந்தச் செயலிகள், நோயாளிகளின் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதிலும், சுகாதார விநியோகத்தைச் சீராக்குவதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. [...]