கற்றல் குறைபாடுகளை நிர்வகிக்கும் முறைகள்
குழந்தைகளிடையே ஏற்படும் கற்றல் குறைபாடுகள், அவர்களின் கல்விப்பாதையில் குறிப்பிடத்தக்கத் தடைக்கற்களை வைக்கின்றன. இந்தக் குறைபாட்டை, சரியான புரிதல், அணுகுமுறையுடன் நிர்வகித்து, சமாளிக்க இயலும். கற்றல் குறைபாடுகள் என்றால் என்ன, அது எவ்வாறு அவர்களின் கற்றல் அனுபவங்களைப் பாதிக்கின்றன என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் மட்டுமே பாதிப்பிற்கான சிகிச்சை நடைமுறையைத் துவங்க முடியும். கற்றல் குறைபாடுகள் குழந்தைகள் கற்றலுக்குத் தேவையான திறன்களைப் பெற இயலாத நிலையே கற்றல் குறைபாடு [...]