நோய்ப்பாதிப்பைத் தடுக்க உதவும் மரபணுச் சோதனைகள்
டி.என்.ஏ.வில் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மையால் உடலில் உண்டாகும் பாதிப்பே மரபணுக் குறைபாடு ஆகும்.பெற்றோரிடம் காணப்படும் பண்புகள் மட்டுமல்லாது, அவர்களிடையே காணப்படும் நோய்ப் பாதிப்புகளும், அவர்களது சந்ததிக்குக் கடத்தப்படலாம். மரபணுக் குறைபாடுகளைக் குணப்படுத்த இயலாது என்றபோதிலும், அதனைக் குறிப்பிட்ட வழிமுறைகளின் உதவியால், கட்டுப்படுத்த இயலும். மரபணுக் குறைபாடுகள், சிறு குழந்தைகளின் இறப்பு நிகழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவில், மரபணுக் குறைபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்து வருகிறது. தனியார் [...]