உணவுத்திட்டமிடல் செயலிகளின் நன்மைகள்
நம் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், எலெக்ட்ரானிக்ஸ் துறையின் முன்னணி நிறுவனமான சாம்சங், ‘Food’ எனும் செயற்கை நுண்ணறிவு உணவுத்திட்டமிடல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உணவுத்திட்டமிடல் செயலியின் முக்கிய நோக்கம் யாதெனில், தனிப்பயனாக்கப்பட்ட சமையலறை உதவியாளராகப் பணியாற்றுவதே ஆகும். இது பயனர்கள், புதிய உணவு வகைகளைக் கண்டறியவும், வடிவமைக்கப்பட்ட உணவுத்திட்டங்களை உருவாக்கவும், சமையலுக்குத் தேவையான பொருட்களை, ஆன்லைன் வழியாக எளிதாக ஆர்டர்ச் செய்யவும் உதவுகிறது. [...]