மருந்து பின்பற்றுதலின் முக்கியத்துவம் அறிவோமா?
மருத்துவ நிலைமைகளைத் திறம்பட நிர்வகிப்பதில் மட்டுமல்லாது, உடல்நல ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில், மருந்து பின்பற்றுதல் முறை முக்கியப்பங்கு வகிக்கின்றது. ஆய்வுமுடிவுகளின்படி, நோயாளிகள் மருத்துவர்களின் மருந்து விதிமுறைகளைப் பின்பற்ற கடும் முயற்சி செய்கின்றனர்.
இந்தக் கட்டுரையில் மருந்து பின்பற்றுதலின் முக்கியத்துவத்தை உணர்த்தி, நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சிகிச்சையின் முழுப்பலன்களை அடையும் வழிகளை ஆராய்வோம்.
மருந்து பின்பற்றுதல் முறையின் தாக்கம்
உடல்நலக் குறைபாடுள்ளவர்கள் மருத்துவரின் மருந்து நடைமுறைகளைப் பின்பற்றுவது மிக முக்கியம். சரியான நேரத்தில் மருந்து எடுப்பதால் சிகிச்சை பலனளிக்கிறது.இதன்முலம், நோய்ப்பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு, உடல்நலம் மேம்படுகிறது.
இதற்கு நேர்மாறாக, மருந்து நடைமுறையைப் பின்பற்றாதவர்களுக்கு, அவர்கள் மேற்கொள்ளும் சிகிச்சைப் பலனளிக்காத நிலையில், நோயின் பாதிப்பு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த ஆரோக்கியக் குறைவிற்கும் காரணமாக அமைகின்றது.
சிகிச்சையின் மேம்பட்ட செயற்திறன்:
உடல்நலக் குறைபாட்டைப் போக்கும் வகையில், மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்து விதிமுறைகளைப் பின்பற்றும் போது, அது மேற்கொள்ளும் சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. மருந்துப் பின்பற்றுதலை அட்டவணைப்படி, சரியாக மேற்கொள்ளும் போது, அறிகுறிகளைக் குறைப்பதோடு மட்டுமல்லாது, நோய்ப் பாதிப்பையும் கட்டுப்படுத்த முடியும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் குறைவு
மருந்து முறைகளைச் சரிவரப் பின்பற்றுவதன் மூலம், நோய்ப்பாதிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் கட்டுப்படுத்தப்படுவதால், உடல்நல ஆரோக்கியம் மேம்படுகிறது. மருந்து நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்றால், அது நோயின் பாதிப்பை அதிகரித்துவிடுகின்றன. இதனையடுத்து நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், அதிகச் செலவு ஏற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தி விடுகிறது.
சிறந்த நோய் மேலாண்மை
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்ப்பாதிப்புகளுக்கு, சரியான மருந்து நடைமுறைகளைப் பின்பற்றும் போது, நோயைக் கட்டுப்படுத்தலில் முக்கியப்பங்கு வகிக்கின்றது. இந்தக் குறைபாடுகளின் போது மேற்கொள்ளப்படும் மருந்து நடைமுறையானது, ரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் இதன் பாதிப்புகளைக் குறைக்க உதவுகிறது.
சிகிச்சையின் தோல்விகளைத் தடுக்கிறது
ஆண்ட்டிபயாட்டிக் மற்றும் வைரல் பாதிப்பைத் தடுக்க உதவும் மருந்து நடைமுறைகள், உடலுக்கு நோய்ப்பாதிப்பை உண்டாக்கும் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, நுண்ணுயிரிகளின் தொற்றுப் பாதிப்பு மீண்டும் வரவிடாமல் தடுக்கின்றது. இதன்காரணமாக, சிகிச்சைத் தோல்வியடையும் நிகழ்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது
வாழ்க்கையின் தரம் மேம்படுவதற்கு, மருந்து நடைமுறையானது முக்கியப்பங்கு வகிக்கிறது. இது நோய்ப்பாதிப்பின் அறிகுறிகளைச் சிறந்த முறையில் நிர்வகிப்பதோடு, உடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது.
செலவினங்களைக் குறைக்கிறது
மருந்து நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றாவிட்டால், நோயின் தீவிரம் அதிகரிக்கும். இதனால் மருத்துவமனை அனுமதி, அவசரச் சிகிச்சை போன்ற கூடுதல் செலவுகள் ஏற்படும்.இதற்குப்பதிலாக, மருந்து நடைமுறையை நாம் சரிவரப் பின்பற்றினால், நம் உடல்நலன் மேம்படுவதோடு, பொருளாதார இக்கட்டிலிருந்தும் தப்பிக்க முடியும்.
மருந்து நடைமுறையைப் பின்பற்றாமைக்கான காரணங்கள்
ஞாபக மறதி, மருந்துகளை அணுகுவதில் சிரமம், சிக்கலான நடைமுறைகள் ஆகியவை மருந்து எடுக்காமல் விடுவதற்கான முக்கிய காரணங்கள்.மேலும், மருந்துகள் பற்றிய தவறான கருத்துகள், பக்கவிளைவுகளுக்கான பயம், மருந்துகளின் செயல்திறன் மீதான சந்தேகம் ஆகியவையும் காரணங்களாகின்றன. மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான குறைவான உரையாடல், மருந்து நடைமுறைகள் பற்றிய புரிதலின்மைக்கு காரணமாகிறது.
பொதுவான காரணங்கள்
புரிதல் இன்மை
நோயாளிகளுக்கு உடல்நலக் குறைவின் தீவிரம், ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த அறிவு இல்லாமல் இருக்கலாம். இதன்காரணமாக, அவற்றிற்கு அளிக்கப்படக்கூடிய மருந்துகள் குறித்த புரிதலும் இல்லாமல் இருக்கலாம். இதனால், அவர்கள் மருந்து நடைமுறையைப் பின்பற்ற முடியாத நிலைக்கு உள்ளாகலாம்.
பக்க விளைவுகள்
பெரும்பாலான மருந்துகள், குறிப்பிட்ட அளவிலான பக்கவிளைவுகள் ஏற்படுத்துவதை யாராலும் மறுக்க இயலாது. இந்தப் பக்கவிளைவுகளைத் தவிர்ப்பதற்காக, நோயாளிகள் மருந்துகளின் அளவைக் குறைக்கின்றனர் அல்லது அத்தகைய மருந்துகளை உட்கொள்வதையே நிறுத்திவிடுகின்றனர்.
மறதி உணர்வு
நோயாளிகள், மறதி நிலையின் காரணமாக, மருந்துகளை உட்கொள்ளத் தவறுவது, மருந்து நடைமுறையைப் பின்பற்றாமையின் பொதுவான காரணமாகும். பிஸியான வாழ்க்கைமுறை அறிவாற்றல் குறைபாடுகள் மற்றும் பழக்கமின்மையின் காரணமாகவும் மருந்து நடைமுறைப் பின்பற்றாமை நிலை ஏற்படுகிறது
பய உணர்வு
சில வகை மருந்துகள், நோயாளிகளை அதற்கு அடிமைப்படுத்திவிடும் என்ற சிலரின் கருத்துகள், பெரும்பாலான நோயாளிகளுக்குப் பய உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும் மருந்துகள் தொடர்பான தனிப்பட்ட நம்பிக்கைகளும், மருந்து நடைமுறைப் பின்பற்றாமை நிலை ஏற்படுத்துகின்றன.
அறிகுறிகளில் முன்னேற்றமின்மை
நோயாளிகள், மருந்து நடைமுறையைப் பின்பற்றி வரும் நிலையில், நோய்ப்பாதிப்பின் அறிகுறிகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அவர்களுக்கு, மருந்துகளின் செயற்திறன் குறித்த கேள்வி எழ வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து, அவர்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்காமலேயே, மருந்து நடைமுறையைப் பின்பற்ற இயலாத சூழல் ஏற்படலாம்.
மனநலம் சார்ந்தக் காரணிகள்
பதட்டம் , மனச்சோர்வு உள்ளிட்ட மனநலக் காரணிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, மருந்து நடைமுறைகளைப் பின்பற்றுவது என்பது சவாலான விசயம் ஆகும்.
மொழி மற்றும் கலாச்சாரத் தடைகள்
நோயாளிகளுக்கு, மருந்து அறிவுறுத்தல்களை அறிந்துகொள்ள அவர்களுக்கு மொழி முக்கியமானதாக உள்ளது. இந்த அடிப்படைக் காரணியிலேயே தடை ஏற்படும் போது, அவர்களால், மருந்து நடைமுறைகளைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்படுகின்றன. அதேபோன்று, சில கலாச்சாரம் சார்ந்த நம்பிக்கைகளும்,இந்த நிலையை ஏற்படுத்துகின்றன.
மேம்படுத்தும் நடவடிக்கைகள்
திறந்த வகையிலான தொடர்புமுறை
நோயாளிகள், தங்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள மருத்துவ நிபுணருடன் சுமூகமான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உடல்நலம் குறித்த சந்தேகங்கள், கேள்விகளைக் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். மருந்துகள் விவகாரத்தில் தெளிவு அவசியம், கவலைகள், பய உணர்வு ஏதேனும் இருந்தால், அதைக் களைவது அவசியம் ஆகும்.
அறிவுரைகளைப் புரிந்து கொள்ளுதல்
மருந்து முறைகள், அதன் அளவு, எண்ணிக்கைகள், ஏதேனும் சிறப்பு அறிவுறுத்தல்கள் உள்ளிட்டவைகள் இருப்பின் , அதுகுறித்த சந்தேகங்களை மருத்துவ நிபுணரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். நிபுணர்கள் அளிக்கும் அறிவுரைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்றப்படி நடக்க வேண்டும்.
வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் மருந்து அட்டவணையை, தினசரி உருவாக்கிக் கொண்டால், மருந்துகளை, சரியான நேரங்களில் எடுத்துக் கொள்ள உதவும்.
மருந்து இருப்பு நினைவூட்டல்கள்
அத்தியாவசிய மருந்துகள் தீர்ந்துப் போவதைத் தவிர்க்கும் வகையில், மருந்து இருப்பு நினைவூட்டல்களை வகுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.
மேலும் வாசிக்க : முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனைகள் நல்லதா?
எளிதான விதிமுறைகள்
மருந்து நடைமுறை விதிமுறைகள் குழப்பமானதாக இருந்தால், அதை எளிமையான மற்றும் வீரிய அளவிலான அட்டவணைகளாக உருவாக்கினால், மருந்து நடைமுறைப் பின்பற்றலுக்கு வழிவகுக்கும்.
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு
மருந்து நடைமுறைப் பின்பற்றல் நிகழ்விற்கு, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் ஆதரவு மிகவும் அவசியமானதாக உள்ளது. ஏனெனில், இது நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் மற்றும் அது தேவையான உதவிகளைப் பெறவும் உதவும்.
நன்மைகள்
மருந்து நடைமுறைகள் பின்பற்றுதல் நிகழ்வை மேம்படுத்துவதன் மூலம், சிகிச்சைகள் வெற்றிப் பெறும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. நோய் தொடர்பான சிக்கல்களின் ஆபத்தைக் குறைக்கிறது. நோய் தொடர்பான செலவினங்களைக் குறைக்கின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மருந்து நடைமுறைகள் பின்பற்றுதல் நிகழ்வைச் சிறப்பாக மேற்கொண்டு, நோய் நொடி இன்றி நல்வாழ்க்கை வாழ்வீராக…