சுய மருத்துவம் ஏன் தவிர்க்கப்பட வேண்டும்?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சர்வதேச அளவில் இரண்டாவது அதிக மக்கள்தொகைக் கொண்ட நாடாக விளங்குகிறது. நம் நாட்டில் 1700 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற சூழல் உள்ள நிலையில், மக்களிடையே, சுயமருத்துவம் பரவலாகக் காணப்படுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. சுயமருத்துவத்தை, யாவரும் எளிமையாகச் செய்து முடிவதாலும், அதன்மூலம் உடனடியாக நிவாரணமும் கிடைத்து விடுவதால் பலரும், இந்த மருத்துவமுறைக்கு ஆட்பட்டு விடுகின்றனர். நமது வீட்டில் பாட்டி, அத்தை, மாமாக்கள் [...]