Rear view of a young woman sitting on a chair in a room making her workout schedule in a notebook and a water bottle kept near her.

தனிப்பட்ட உடற்பயிற்சித் திட்டத்தை உருவாக்குவோமா?

ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிக முக்கியமானது. தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, சரியான உடற்பயிற்சி திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாக அமைகிறது. சீரான உடற்பயிற்சி முறையானது, நம்மை எப்போதும் இளமையுடனும், மிகுந்த சுறுசுறுப்பு உணர்வுடனும் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சி பழக்கம், நமக்குச் சரியான உறக்கப் பழக்கத்தை வழங்கி, செயல்திறனை அதிகரிக்கச் செய்து, நம்மை எப்போதும் ஃபிட் ஆக வைத்திருக்க உதவுகிறது.

உடல்நலம் மற்றும் அதன் ஆரோக்கியம் குறித்த மக்களின் ஆர்வம், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள், நாளின் பெரும்பாலான நேரங்களை, ஜிம்மிலேயே கழித்து வந்தனர்.கொரோனா பெருந்தொற்று, அவர்களின் ஆர்வத்திற்குத் தடையாக அமைந்தது. இதனையடுத்து, மக்களிடையே தனிப்பட்ட உடற்பயிற்சித் திட்டம் பிரபலமாகத் துவங்கியது.

தனிப்பட்ட உடற்பயிற்சித் திட்டம் உள்ளிட்ட எந்தவொரு உடற்பயிற்சித் திட்டமாக இருந்தாலும், அதற்கென ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். உடல் ஆரோக்கியம், உடல் எடையைக் குறைத்தல், தசைகளின் வலிமையை அதிகரித்தல் என்ற ஏதேனும் ஒரு இலக்கை நிர்ணயிப்பது அவசியம் ஆகும். உதாரணமாக, நீங்கள் இதய நலன் பெற விரும்பினால் ஓட்ட பயிற்சியையும், உடல் எடையைக் குறைக்க முடிவு செய்திருப்பின் சைக்கிளிங் செய்வது, தசைகளின் வளர்ச்சிக்கு, வலிமைப் பயிற்சிகள் உள்ளிட்டவை சிறந்தப் பயிற்சிகளாகவும், நீங்கள் விரும்பிய பலனை அடையவும் உதவும்.

வயது காரணிக்கு ஏற்ற வகையிலான பயிற்சிகள்

உடற்பயிற்சிகள் மேற்கொள்வதின் மூலம், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுதல் என்பது ஒருநாள் நிகழ்வு அல்ல. அது வாழ்நாள்ப் பயணம் ஆகும். உங்களின் வயதைப் பொறுத்து, நீங்கள் எந்த வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

குழந்தைகள் மற்றும் விடலைப்பருவத்தினர் (6 முதல் 17 வயதிற்குட்பட்டோர்)

இந்த வயதினர் நீச்சல், சைக்கிளிங் உள்ளிட்ட பயிற்சிகளிலேயே, அதிகக் கவனம் செலுத்த வேண்டும். உடல் எடையைச் சரியான அளவிற்குக் கொண்டு வரும் பொருட்டு, இந்தப் பயிற்சிகளோடு சேர்த்து, அந்தந்த வயதிற்கு உரிய வலிமைப் பயிற்சிகளையும் மேற்கொண்டால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள்

இந்த வயதினர், இதய நலனுக்காக, நடைப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையான தசைகளைப் பெறும் பொருட்டு, வலிமைப் பயிற்சிகள்

இயக்க நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு யோகா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

மூத்த குடிமக்கள் ( 65 வயதிற்கு மேற்பட்டவர்கள்)

நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்ற குறைந்த அளவிலான தாக்கங்களை அளிக்கவல்லப் பயிற்சிகள்

தசைகள் வலுப்பெற, தங்களால் தூக்க முடியும் அளவிலான குறைந்த எடைக் கொண்ட வலிமைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

உடலிற்குச் சமநிலையை வழங்கும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், நிலைதடுமாறி விழுவதிலிருந்து காக்கலாம்.

உடற்பயிற்சி நிகழ்வின் போது தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

உடற்பயிற்சி செய்யும் போது, சிற்சில விபத்துகள் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்ற போதிலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், காயங்கள் உள்ளிட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளிடமிருந்து தப்பிக்கலாம்.

மருத்துவரிடம் ஆலோசனை

எந்தவொரு புதிய உடற்பயிற்சி பழக்கத்தைத் துவங்கும்போது, உங்களது உடல்நிலை அதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமா என்பதை அறிய மருத்துவர் அல்லது உடற்பயிற்சி நிபுணரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

உடலைத் தயார்படுத்துதல் மற்றும் சாந்தப்படுத்துதல்

எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்வதற்கு முன்னதாக, அதற்கேற்ப உடலைத் தயார்செய்து கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சிக்குப் பின், இதயத்துடிப்பு சீராகி தசை வலி நீங்கும் வரை ஓய்வெடுக்கவும்.

உடல் சொல்வதைக் கேளுங்கள்

நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உங்கள் உடலில் ஏதேனும் வலி உள்ளிட்ட அசவுகரிய நிகழ்வுகள் தோன்றினால், உடனடியாக, அந்தப் பயிற்சியை நிறுத்தி விடவும்.

உடலின் நீரேற்றத்தைக் கண்காணிக்க வேண்டும்

உடற்பயிற்சி செய்வதற்கு முன் மற்றும் பின், உடலில் தேவையான நீர்ச்சத்து உள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் ஏற்படும் ஆற்றல் இழப்பைச் சரிசெய்ய, சரிவிகித உணவுமுறையை மேற்கொள்வது நன்மைபயக்கும்.

உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்தல்

நமது தேவைகளுக்கு ஏற்ப, உடற்பயிற்சிகளைச் சரியாகத் தேர்ந்தெடுத்துச்செய்து வந்தால், நாம் விரும்பும் பலனை எளிதாக அடைய முடியும்.

எந்தெந்த உடல் பாதிப்புகளுக்கு என்ன வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரிவாகக் காண்போம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்

ஓட்ட பயிற்சி மற்றும் உயர்த் தீவிரமான இடைவெளிப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இதய நலன் காக்க விரும்புவர்கள்

விறுவிறுப்பான நடைப் பயிற்சி, சைக்கிளிங் மற்றும் நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

தசைகள் வலுப்பெற

பளு தூக்குதல் மற்றும் எதிர்ப்புப் பயிற்சிகள்

உடல் வலிமைக்கு

உடல் எடையை அதிகரிக்கும் வகையிலான புஷ் அப், ஸ்குவாட் பயிற்சிகள் மற்றும் செயல்பாட்டுப் பயிற்சிகள்

உடலுக்கு நெகிழ்வுத்தன்மை அளிக்கவல்லப் பயிற்சிகள்

இயக்கச் செயல்பாடுகளை அதிகரிக்க

யோகாப் பயிற்சி மற்றும் சேர்ப் போன்ற ஏதாவதொரு உபகரணத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படும் பைலேட்ஸ் பயிற்சி

மனம் சாந்தமடைய

டை சி மற்றும் உடற்பாகங்களை அசதியில் இருந்து விடுவிக்கும் வகையிலான பயிற்சிகள்

உடலின் சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவும் பயிற்சிகள்

மூத்த குடிமக்கள்

டை சி மற்றும் குறிப்பிட்ட வகையிலான உடல் சமநிலைப் பயிற்சிகள்

மேலும் வாசிக்க : போதிய உடற்பயிற்சிகள் இல்லாததால் ஏற்படும் நோய்கள்

அனைவருக்குமான பயிற்சிகள்

உடலுக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கும் பந்து உடற்பயிற்சிகள், சமநிலையை ஏற்படுத்தும் பயிற்சிகள்

உடலின் ஒட்டுமொத்த நலனுக்கும் உகந்த வகையிலான செயல்பாட்டுப் பயிற்சி வகைகளை மேற்கொள்ளலாம்.

நடனப் பயிற்சி

மனதிற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான இசையுடன் கூடிய நடனப் பயிற்சியானது, உங்களின் இதயத்திற்கு இரட்டிப்பு நன்மைகளை வழங்குகிறது. நடனப் பயிற்சியானது, உடலில் உள்ள கலோரிகளை விரைவாக எரிக்க உதவுகிறது.

சலிப்பான உணர்வை அளிக்கும் உடற்பயிற்சிகளிலிருந்து விடுதலை

நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி வகைகள், உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, மனச்சோர்வையும் ஏற்படுத்தி இருந்தால், அதிலிருந்து மீளும் வகையிலான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். டிராம்போலைன் சாதனத்தை வீட்டில் பொருத்தி, டிவியில் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்த்தபடி அல்லது மனதிற்குப் பிடித்த இசையைக் கேட்டபடியே உடற்பயிற்சி செய்து மகிழலாம்.

உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் நடவடிக்கைக்கு, உடற்பயிற்சிப் பழக்கம் இன்றியமையாததாகிறது. உங்களது வயது, உடற்பயிற்சி இலக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணிகளைக் கொண்டு, நமக்கு ஏற்ற உடற்பயிற்சி முறைகளைத் தேர்ந்தெடுக்க முடியும். எந்த உடற்பயிற்சி முறை என்றாலும், அதைச் சில நாட்கள் தொடர்ந்து மேற்கொள்வது அவசியமானதாகும்.

உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி முறைகளைத் தேர்ந்தெடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நல்வாழ்க்கை வாழ்வீராக….

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.