வயதுமூப்பு காலத்தில் உடற்பயிற்சிக்கான நன்மைகள்
வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியானது பேருதவி புரிகிறது. வயதானவர்களுக்கு, உடற்பயிற்சிப் பழக்கவழக்கமானது, உடல்நலத்திற்கு இன்றியமையாததாக உள்ளது. இது வயதுமூப்பால் வரும் உடல்நலப்பாதிப்புகளைத் தாமதப்படுத்தி, தடுத்தாளுகிறது. வயதானவர்களுக்கு உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை உடல் செயல்பாடு குறைவு மற்றும் இயலாமை அதிகரிப்புடன் தொடர்புடையவை.வயதான காலத்தில் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையானது மிகவும் அவசியமானது ஆகும். உடற்பயிற்சி பழக்கமானது, உடல் சார்ந்த மட்டுமல்லாது மனம் [...]