காந்த அதிர்வுப் பட (MRI) பரிசோதனைச் செய்யும் முன்பு உணவு உண்ணலாமா?
காந்த அதிர்வுப் படம் (MRI) என்பது மருத்துவ படிமத் தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இந்தப் பயனுள்ள, பாதுகாப்பான மற்றும் துல்லியமான நோயறிதல் முறையானது, சிக்கலான நோய்க்குறியீடுகளில் உள்ள நோயாளிகளுக்கு நிபுணத்துவம் வழங்குவதற்குத் தற்போது முதன்மையாகப் பரிந்துரைச் செய்யப்படுகிறது. காந்த அதிர்வுப் படம் (MRI) மிகவும் துல்லியமான மற்றும் தெளிவான படங்களைக் கொடுக்க, நோயாளிகளைத் தயார்படுத்துவது அவசியமாகும்.
காந்த அதிர்வுப் படம் (MRI) அவசியமா?
காந்த அதிர்வுப் படம் (MRI) ஹைட்ரஜன் அணுக்கருவின் மின்காந்த செயல்பாட்டைக் கட்டுப்படுத்த வலுவான காந்தப்புலம் (Bo) மற்றும் துடிப்புள்ள ரேடியோ அலைவரிசை அமைப்பைப் பயன்படுத்துகிறது. இங்கே, ஹைட்ரஜன் அணுக்கருக்கள் (உடல் திசுக்களிலுள்ள நீரில் ஏராளமாக உள்ளன) ரேடியோ அலைகள் மற்றும் (Bo) காந்தப்புலம் ஆகியவற்றின் செல்வாக்கின் கீழ் ரேடியோ அதிர்வெண் சமிக்ஞைகள் வடிவில் ஆற்றலைக் கதிர்வீச்சு செய்யும். இந்தச் சமிக்ஞைகள் படத் தரவை உருவாக்கும் கணினியால் பெறப்பட்டு, படத்தை உருவாக்கும்.
MRI நுட்பத்தின் சிறந்த நன்மை என்னவென்றால், அது கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை, ஆதலால் அது கதிர்வீச்சை ஏற்படுத்தவும் செய்யாது. எனவே இது நோயாளிகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. இனி அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் MRI இயந்திரத்திலிந்து ஒலி உருவாகாது, எனவே அது நோயாளிகளை மிகவும் வசதியாக உணர வைக்கும். மேலும் MRI இயந்திரம் மூலம் கண்டறியும் படங்கள் நல்ல தெளிவுத்திறன், மல்டி-பல்ஸ், மல்டி-ப்ளேன், 3D புனரமைப்பு, மற்றும் பெரும்பாலான உடல் பாகங்களுக்குப் பொருந்தும் வகையில் இருக்கும்.
தற்போது, மேலே உள்ள நன்மைகளுடன், காந்த அதிர்வுப் படம் (MRI), முதுகுத் தண்டு நரம்பு பாதிப்பு, கிரானியோசெர்விகல் நோய்கள், முதுகுத் தண்டு மற்றும் தசை நோய்கள், மார்பகப் புற்றுநோய், இதய நோய் போன்ற பல உடல் நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும், கல்லீரல், பித்தநீர்ப் பாதை, சிறுநீரகம், அட்ரீனல் சுரப்பி, கணையம், இரைப்பைக் குடல், கருப்பை மற்றும் சூலகம் போன்ற உள்-வயிற்று உறுப்புகளின் கட்டிகள், கருவில் பிரச்சனை (கரு MRI), கட்டி பரிசோதனை, சிஸ்டமிக் மெட்டாஸ்டேஸஸ் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றைக் கண்காணிப்பதிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது:
காந்த அதிர்வுப் பட(MRI) முறைப் பொதுவாக வலியற்றது. எனினும் அதன் படப்பிடிப்பு நேரம் சுமார் 12 முதல் 45 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்பதால் அத்தனை நேரம் அசையாமல் இருப்பது ஒரு சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். பரிசோதனை முடிந்ததும் மருத்துவர் முடிவுகளை ஆய்வு செய்து, நோயாளியின் தற்போதைய உடல்நிலை என்ன என்பதை விளக்கமாக எடுத்துரைத்து, அவருக்கு வேண்டிய சரியான சிகிச்சை முறைப் பற்றிய ஆலோசனையை வழங்குவார்.
மேலும் வாசிக்க : எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் MRI பரிசோதனைக்கு இடையேயான வித்தியாசம் என்ன?
காந்த அதிர்வுப் பட (MRI) பரிசோதனைச் செய்யும் முன்பு உணவு உண்ணலாமா?
MRI பரிசோதனைச் செய்யும் முன்பு உணவு உண்ணாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை. மண்டை ஓடு-மூளை-ரத்த குழாய் பாதையில் ஏற்படும் பிரச்சனைகள், வட்டு குடலிறக்கம் அல்லது பொதுவான தசைக்கூட்டு நோய்கள் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் எந்த வித உணவுக் கட்டுப்பாடும் இன்றிச் சாதாரணமாகப் பரிசோதனைச் செய்து முடிப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்குக் காண்ட்ராஸ்ட் திரவம் தேவைப்படும் சூழ்நிலை உருவாகும், அந்த நிலையில் நோயாளிகள், திரவத்தை உட்செலுத்துவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே சிற்றுண்டி சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். கட்டித் திசு பரிசோதனையில் காந்த மாறுபாட்டைப்(magnetic contrast) பயன்படுத்த வேண்டும்.
எவ்வாறாயினும், நோயாளிகள் பின்வரும் சந்தர்ப்பங்களில் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்;
நோயாளிகளுக்கு மயக்க மருந்து தேவைப்படும்போதும், கான்ட்ராஸ்ட்டை உட்செலுத்த வேண்டியிருக்கும் போதும் அவர்கள் பரிசோதனைச் செய்வதற்கு முன் 4 முதல் 6 மணி நேரம் உணவு உண்ணாமல் இருக்க வேண்டும்.