உடற்பயிற்சித் திட்டங்களில் ஓய்வின் முக்கியத்துவம்
உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் சத்தான உணவு ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றன.நீங்கள் விளையாட்டு ஆர்வலராக இருந்தால், உங்கள் உடலின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு, தேவையான உடற்பயிற்சிகளைச் செய்தபின், போதுமான அளவிற்கு ஓய்வில் ( உடற்பயிற்சி செய்யாதிருத்தல் நிலை) இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருக்கும் நிலை மட்டுமே ஓய்வு நாள் என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலில் உண்டாகும் மன [...]