புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம்
சர்வதேச அளவில், அதிக மரணங்களை விளைவிக்கும் நோய்ப் பாதிப்பாக, புற்றுநோய் விளங்கி வருகிறது. புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளித்தால், மரண விகிதத்தைக் குறைக்கலாம்.ஆரம்ப நிலையில் புற்றுநோயைக் கண்டறிந்தால், சிகிச்சை எளிதாகி, நோய் பரவுவதையும் தடுக்கலாம். புற்றுநோய்ப் பாதிப்பு, துவக்க நிலையிலேயே இருப்பவர்களுக்கு, மிதமான அளவிலான சிகிச்சையே போதுமானது ஆகும். நோயின் பாதிப்பு 3 அல்லது நான்காம் நிலைகளை அடையும் போதுதான், அறுவைச் சிகிச்சை அல்லது கதிரியக்கச் சிகிச்சை முறையானது அவசியமாகிறது. [...]