தொலைமருத்துவத்தில் அணியக்கூடிய சாதனங்களின் பங்கு
மருத்துவத் துறையில் நிகழும் அபரிமிதமான மாற்றங்களைக் கண்டு உலகமே வியந்து நிற்கிறது. முன்னொரு காலத்தில் அதிசயமாகப் பார்க்கப்பட்ட தொழில்நுட்பமானது, தற்போதைய நிலையில், நவீன மருத்துவத்தின் அடிப்படையாக மாறி உள்ளது. தொலைமருத்துவம் மற்றும் தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறைகளில், அணியக்கூடிய சாதனங்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது. தற்போதைய நவீனயுகத்தில், இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட கைக்கடிகாரம் நேரம், இதயத்துடிப்பு, நடைகளின் எண்ணிக்கை மற்றும் உறக்கத்தின் அளவை மதிப்பிடுகிறது.இத்தகைய தொழில்நுட்பம் சார்ந்த [...]