ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆயுளை நீட்டிக்குமா?
நாம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுவது மட்டுமல்லாது, நமது ஆயுட்காலமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, பிரிட்டிஷ் மருத்துவ ஜெர்னலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாமை, போதிய அளவிலான உறக்கம், ஆரோக்கியமான உணவுமுறை, வழக்கமான உடல் செயல்பாடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளின் மூலம், நாம் நமக்குச் சாதகமான வாழ்க்கைமுறையைச் சாத்தியமாக்கிக் கொள்ள முடியும். மனிதர்களின் ஆயுட்காலத்தைப் பாதிக்கும் காரணிகளாக மரபணுக்கள் மற்றும் வாழ்க்கைமுறை உள்ள [...]