MRI பரிசோதனையால் செய்ய முடியாததை CT ஸ்கேன் என்ன செய்ய முடியும்?
CT ஸ்கேன்:
கணினி வழிக் கதிரியக்கத் துழாவல் (Computed Tomography (CT Scan)) பரிசோதனை எக்ஸ்-கதிர்ப் பரிசோதனைச் செய்யும் அதே கொள்கையுடன் செயல்படுகிறது. பரிசோதனையின் போது எக்ஸ்-கதிர்களை உடல் முழுவதும் ஒரு வட்ட வடிவில் செலுத்தப்படுகிறது. எக்ஸ்-கதிர்கள் அதிக மின்னழுத்தத்தால் (ஆயிரக்கணக்கான வோல்ட்கள்) உமிழப்படும் ஃபோட்டான்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் அவற்றால் உடலின் பல திசுக்களைக் கடக்க முடியும். திசுக்கள் ஃபோட்டான்களை உமிழ்ந்து அதனை மறுபுறத்தில் வெளியிடுகின்றன. சில ஃபோட்டான்கள் மறுபக்கத்திற்கு வராது. ஏனெனில் எலும்புகள் ஃபோட்டான்களை உமிழாது. அதாவது எலும்புகள் படத்தில் வெண்மை நிறத்தில் தோன்றும். எலும்பு முறிவுகள் மற்றும் தலை, முதுகுத்தண்டு, மார்பு, வயிறு ஆகியவற்றில் ஏற்படும் காயங்களைக் கண்டறிவதிலும் CT ஸ்கேன் சிறந்தவை. மேலும் கட்டிகளின் சரியான இடத்தையும் சுட்டிக்காட்டும்.
காந்த அதிர்வு படம் (MRI):
காந்த அதிர்வு படம் (MRI-Magnetic Resonance Imaging) அல்லது MRI, உடலின் உள்ளே எலும்புகள் மற்றும் மென்மையான கட்டமைப்புகளின் விரிவான மற்றும் உயர்த் தெளிவுத்திறன் கொண்ட குறுக்குவெட்டுப் படங்களை உருவாக்கச் சக்திவாய்ந்த காந்தம் மற்றும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி, திசுக்களின் விரிவான 3D படங்களை உருவாக்குகிறது.
மேலும் வாசிக்க : MRI மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியுமா?
MRI பரிசோதனையால் செய்ய முடியாததை CT ஸ்கேன் என்ன செய்ய முடியும்?
உலோகத் துண்டுகள், உள்வைப்புகள், துணுக்குகள், கோக்லியர் உள்வைப்புகள் மற்றும் அறுவைச் சிகிச்சைக் கிளிப்புகள் போன்ற மருத்துவ சாதனங்கள் அல்லது மற்ற நிரந்தர உலோகப் பொருள்கள் உடலில் பொருத்தப்பட்டிருந்தால், MRI பரிசோதனைக்குப் பதிலாக CT ஸ்கேன் பரிந்துரைக்கப்படலாம். ஏனெனில் MRI இயந்திரத்தின் வலுவான காந்தப்புலம் உடலில் பொருத்தப்பட்டுள்ள உலோகங்களைப் பழுதாக்கும் அபாயம் உள்ளது.
மென்மையான திசு திரையிடலுக்கு CT எப்போதும் பொருத்தமானதல்ல. புற்றுநோயைக் கண்டறிவதற்காக MRI பரிசோதனை அல்லது CT ஸ்கேன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது, மருத்துவ நிபுணர்களிடம் பேசுவது முக்கியம். ஏனெனில் புற்றுநோய் என்பது ஒரு சிக்கலான உடல்நலப் பிரச்சினையாகும், இதை முன்கூட்டியே கண்டறிவது அவசியம். ஒவ்வொரு பரிசோதனை வகைக்கும் சில வரம்புகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளன.
MRI பரிசோதனையின் காந்தப்புலத்தால் உலோகப் பொருள்கள் பாதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் CT ஸ்கேன்கள் எக்ஸ்-கதிர்கள் வடிவில் அயனியாக்கும் கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்றன, அவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் தீங்கு விளைவிக்கும்.
உடலின் எலும்பு பகுதிகளைப் பரிசோதனைச் செய்ய CT சிறப்பாகச் செயல்படும். உடலில் உள்ள பல்வேறு திசுக்களின் சிறந்த வரையறையைப் பெற MRI சிறப்பாகச் செயல்படும்..