Blurred image of a woman sleeping on her bed at the backgroundwith sleep tracker running on the mobile phone on her bedside.

உறக்கத்தைக் கண்காணிக்கும் வகையிலான சாதனங்கள்

மனிதனின் வாழ்க்கைக்கு உணவும், தண்ணீரும் எவ்வளவு அவசியமோ, உறக்கமும் அந்த அளவிற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. உணவு சாப்பிட மற்றும் தண்ணீர் அருந்த எவ்வாறு நேரத்தை ஒதுக்குகிறோமோ, அதுபோல, இனிமையான அதேநேரம் அமைதியான, ஆழ்ந்த உறக்கத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். ஒருவருக்குச் சரியான அளவிலான உறக்கம் இல்லையெனில், அவர்களை மனதளவில் மட்டுமல்லாது, உடல் அளவிலும் மிகப்பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடும்.

நல்ல, ஆழ்ந்த உறக்கத்தின் மூலமாகவே, மூளைப் புத்துணர்ச்சி அடைகின்றது. நாள்முழுவதும் நாம் விழித்திருக்கும் போது, மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளால், உண்டாகும் நச்சுக்கள் உடலிலேயே சேகரமாகின்றன. இந்த நச்சுப் பொருட்கள், நாம் இரவில் உறங்கும் போது வெளியேறுவதாக, ஆய்வுமுடிவுகளில் தெரிய வந்துள்ளது. நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும், நாம் உறக்க நிலையில் இருக்கும்போது தான் சீரமைக்கப்படுகின்றன.

இன்றைய போட்டி உலகில், அனைத்துத் தரப்பினரும் உறக்கமின்மையால் அவதிப்படுகின்றனர்.இந்த உறக்கமின்மைக் குறைபாடு, அவர்களின் உடல்நலத்தில் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

இளம்தலைமுறையினர், இந்த உடல்நலக்குறைபாடுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு, தொழில்நுட்பச் சாதனங்களின் உதவியை நாடத் துவங்கி உள்ளனர்.

இதயத்துடிப்பை மதிப்பிடுதல், உறக்கத்தைக் கண்காணித்தல் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் இன்றியமையாத நடவடிக்கைகளைக் கண்காணிக்க எனப் பல்வேறு தொழில்நுட்பச் சாதனங்கள் புழக்கத்தில் உள்ளன.இந்தச் சாதனங்களில் சிலவற்றை, இங்கு விரிவாகக் காண்போம்.

உறக்கத்தைக் கண்காணிக்கும் சாதனங்கள்:

1. Fitbit Inspire 3

உடல்நல ஆரோக்கியம் காப்பதில் Fitbit நிறுவனத்தின் புதிய தயாரிப்பே, Fitbit Inspire 3 ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இது மனதளவிலான ஆரோக்கிய நிகழ்வுகளையும் கண்காணிக்க உதவுகிறது. உறக்க அளவைத் துல்லியமாக அளவிடுவதோடு, மன அழுத்த மாறுபாட்டையும் கண்காணிக்கின்றது. இரத்தத்தில் ஆக்சிஜனின் அளவையும் கண்டறிய உதவுகிறது. ஒருமுறைச் சார்ஜ் செய்தால், இதன் பேட்டரியின் சார்ஜ் 10 நாட்கள் வரை நீடிக்கும். இதன் விலை ரு. 8,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

2. Apple Watch SE

ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை வாட்ச் வெர்ஷனாக வெளியாகி உள்ளது Apple Watch SE. உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் வகையிலான இந்த உபகரணம், உங்களது அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றது, உறக்க நிலைகளை வரையறுக்கின்றது. இதயத்துடிப்பை அளவிடுகின்றது. அவசரகால உதவிகளை ஒருங்கிணைக்கிறது. இதன் ரெட்டினா டிஸ்பிளே மற்றும் நீர்புகாத் தன்மை, உங்களை, இந்த ஸ்மார்ட் வாட்ச் நாள்முழுவதும் அணிய வழிவகைச் செய்கின்றது. ஐபோனுடன் ஜிபிஎஸ் மூலம் இணைவதால், உடல்நல ஆரோக்கியத்தைப் பேணுவதில், இந்தியாவிலேயே, முதன்மையான ஸ்மார்ட்வாட்ச் ஆக இது திகழ்கின்றது. இதன் விலை ரு. 32,900 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

3. Samsung Galaxy Fit3

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விழைபவர்களுக்கு, சரியானதொரு தேர்வாக, சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy Fit3 ஸ்மார்ட் வாட்ச் விளங்குகிறது. உங்களின் தினசரி செயல்பாடுகள், உறக்க நிலைகள், மன அழுத்த அளவைக் கண்காணிக்க உதவுகிறது. ஒருமுறைச் சார்ஜ் செய்தால், 13 நாட்கள் வரைச் சார்ஜ் நீடிக்கின்றது. இதன் விலை ரு. 4.999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Close-up image of a female's hand with a smart watch and mobile phone both showing heart beat rate.

4. Noise Pulse 3 Max Smart Watch

உங்களின் உறக்க நிலைகளைக் கண்காணித்து, இரவுநேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கின்றது. இதயத்துடிப்பைச் சரியாக அளவீட்டு, இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. ஒருமுறைச் சார்ஜ் செய்தால், 10 நாட்கள் வரைப் பேட்டரி சார்ஜ் நீடிக்கின்றது.

5. Fire-Boltt Talk 2 Pro Ultra

உறக்கத்தின் தரத்தைக் கண்காணித்து, அதுகுறித்த விரிவான விளக்கத்தை அளிக்கின்றது. இதயத்துடிப்பைத் துல்லியமாகக் கண்டறிந்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. ஹேண்ட்-ப்ரீ கண்ட்ரோலுக்கு உதவும் வகையில், வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதி உள்ளது.

6. Titan Zeal Premium Fashion Smartwatch

மன அழுத்தத்தைக் கண்காணிக்கவும், இதயத் துடிப்பை அளவிடவும், உறக்கத்தின் தரத்தை மதிப்பிடவும் உதவுகிறது. இதுமட்டுமல்லாது, Titan Zeal Premium Fashion Smartwatch, பெண்களுக்கு நிகழும் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிக்கவும்,சுவாசத்திற்கான உடற்பயிற்சிகளை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது. ஒருமுறைச் சார்ஜ் செய்தால், 5 நாட்கள் வரைப் பேட்டரி சார்ஜ் நீடிக்கின்றது.

7. Fastrack Active Pro Rugged Smartwatch

இரத்தத்தில் ஆக்சிஜனின் அளவைக் கணக்கிடவும், இதயத்துடிப்பை அளவிட்டு, இதய நோய்ப்பாதிப்பை முன்கூட்டியே கண்டறியவும், மன அழுத்த அளவைக் கண்காணிக்கவும், உறக்கம் மற்றும் பெண்களின் உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்த Fastrack Active Pro Rugged Smartwatch உதவுகிறது. ஒருமுறைச் சார்ஜ் செய்தால், 7 நாட்கள் வரைப் பேட்டரி சார்ஜ் நீடிக்கின்றது.

மேலும் வாசிக்க : வாழ்க்கைமுறை நோய்களைத் தடுப்பது எப்படி?

8. CrossBeats Nexus 2.01 Super AMOLED Display Smartwatch

முழுவதுமான தொடுதிரை வசதியுடனான இந்த ஸ்மார்ட் வாட்ச், ஓபன் AI வசதியையும் தன்னகத்தே கொண்டு உள்ளது. அதுமட்டுமல்லாது, மேம்படுத்தப்பட்ட வாய்ஸ் ரெககனீசன் வசதியும் இதில் உள்ளது. ஒருமுறைச் சார்ஜ் செய்தால், 6 நாட்கள் வரைப் பேட்டரி சார்ஜ் நீடிக்கின்றது. உறக்கத்தின் தரத்தை மட்டுமல்லாது, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு உள்ளிட்டவைகளை அளவிடப் பயன்படுகிறது.

9. AGPTEK IP68 Waterproof Smartwatch

உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரியின் அளவு, நீங்கள் கடக்கும் தொலைவு, இதயத்துடிப்பின் அளவு, உறக்க நிலையைக் கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் துல்லியமாக மேற்கொள்ள இந்த AGPTEK IP68 Waterproof Smartwatch உதவுகிறது. ஒருமுறைச் சார்ஜ் செய்தால், 7 முதல் 10 நாட்கள் வரைப் பேட்டரி சார்ஜ் நீடிக்கின்றது.

10. Fire-Boltt Diamond Luxury Stainless Steel Smartwatch

இதயத் துடிப்புகளை அளவிடவும், உறக்க நிலைகளைக் கண்காணிக்கவும், Fire-Boltt Diamond Luxury Stainless Steel Smartwatch உதவுகிறது. பெண்களின் உடல்நல ஆரோக்கியத்திற்கு முக்கியப் பங்காற்றும் வகையில், இந்த ஸ்மார்ட் வாட்ச் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒருமுறைச் சார்ஜ் செய்தால், 4 நாட்கள் வரைப் பேட்டரி சார்ஜ் நீடிக்கின்றது.

நம் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான தொழில்நுட்பம் சார்ந்த அணியக்கூடிய சாதனங்களைத் தேர்வு செய்து பயன்படுத்தி, உடல் ஆரோக்கியம் பேணுவீராக….

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.