மூட்டு ஆரோக்கியத்தில் உடல் எடையின் தாக்கம்
உடல் பருமன் பாதிப்பு அதிகப்படியான கொழுப்பினால் ஏற்படுகிறது. இது மாரடைப்பு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளை உருவாக்குகிறது. உடல் பருமன் கொண்ட மக்களில் பெரும்பாலானோர், மூட்டு வலி மற்றும் கீல்வாத பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிக உடல் எடை மற்றும் மூட்டு வலி ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. மூட்டுப்பகுதிகளில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக ஏற்படும் மாறுபாடானது, நாள்பட்ட மூட்டு வலியை ஏற்படுத்தும். அதிக எடைக் [...]