நரம்பியல் குறைபாடுகள் – அறிந்ததும் அறியாததும்!
நரம்பியல் குறைபாடு அல்லது நரம்பியல் பாதிப்பு என்பது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலங்களைப் பாதிக்கும் மருத்துவ நிலைமையாகும். மூளை, முதுகெலும்பு மற்றும் நரம்புகளின் உட்கட்டமைப்பில் ஏற்படும் உயிர்வேதியியல் மாற்றங்களின் மூலமாகவே, நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மருத்துவ நிலைமைகளின் காரணம் மற்றும் அதன் தோற்றத்தைப் பொறுத்து, நரம்பியல் பாதிப்புகள் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. நரம்பியல் பாதிப்புகள் ஆண், பெண் பாகுபாடின்றி அனைத்து வயதினரையும் பாதிக்கும். உரிய சிகிச்சை இல்லாவிட்டால், இவை [...]