நரம்பியல் பாதிப்புகள் வாழ்க்கையை எங்ஙனம் பாதிக்கிறது?
நரம்பியல் பாதிப்பு என்பது மூளை, முதுகெலும்பு மற்றும் புற நரம்பு வரையிலான பகுதிகளைப் பாதிக்கும் நிகழ்வாகும். நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் நினைவாற்றல் இழப்பு, உணர்ச்சி சவால்கள் உள்ளிட்ட இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். சமீபத்திய அறிக்கைகளின்படி, சர்வதேச அளவில் நிகழும் மரணங்களில், 6.8 மில்லியன் அளவிலான மரணங்கள், நரம்பியல் பாதிப்புகளின் மூலமாகவே ஏற்படுகின்றன. இந்த நரம்பியல் பாதிப்புகள், அன்றாட வாழ்க்கையைக் கணிசமான அளவிற்குப் பாதிக்கின்றன. நரம்பியல் பாதிப்புகள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான உத்திகள் [...]