நீரிழிவுப் பாதிப்பை வென்றவர்களின் வெற்றிக் கதைகள்
நீரிழிவு நோயானது வாழ்க்கைத்தரத்தை மிகவும் பாதிக்கக்கூடியது. இந்நோய் வயது மற்றும் பாலினம் பாராமல் அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.நீரிழிவு நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு மிகவும் அவசியம் ஆகும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும் எனும் நம்பிக்கைதான், அதற்கான திறவுகோல் ஆகும். இந்த நம்பிக்கைதான், உங்களை நீரிழிவு நோய் பாதிப்பில் இருந்து முழுவதுமாக நிவாரணம் அளிக்கும்.
நீரிழிவு நோய் என்ற அரக்கனிடம் சிக்கியிருந்த நிலையில், தகுந்த மருத்துவம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாண்டு, அந்தப் பாதிப்பிலிருந்து மீண்ட மூன்று பேரின் வெற்றிக் கதைகளை இங்கு காண்போம்..
ஸ்னேகா ரோங்தா, 34 வயது
குர்கான் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஸ்னேகா ரோங்தா பட்டயக் கணக்காளராக உள்ளார்.2019ஆம் ஆண்டில் இவர் மேற்கொண்ட சோதனையின் போது, இவருக்கு, நீரிழிவுப் பாதிப்பிற்கு முந்தைய நிலை இருப்பது தெரியவந்தது. இருந்தபோதிலும், அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உணவுமுறையிலும் எவ்வித மாற்றமும் செய்துகொள்ளவில்லை. 2022ஆம் ஆண்டில் அம்மா வீட்டிற்குச் சென்றபோது, அதிகமான இனிப்பு பதார்த்தங்களைச் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, HbA1C சோதனையை மேற்கொண்டார். சோதனை முடிவுகள், அவருக்குப் பேரதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. HbA1C அளவானது 8.8 சதவீதம் என்ற அளவிலும், லிபிட் புரோபைலின் அளவும் அதிகரித்துக் காணப்பட்டது. மருத்துவர், ஸ்னேகாவிற்கு, இரண்டாம் வகை நீரிழிவு நோய்ப் பாதிப்பு இருப்பதை உறுதிசெய்தார்.
விழித்துக்கொண்ட ஸ்னேகா, நீரிழிவுப் பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உறுதிபூண்டு, அதற்கான நடவடிக்கைகளில் களமிறங்கினார். மருத்துவரின் பரிந்துரையை ஏற்று, ஃபிட்டர்பிளைத் திட்டத்தில் இணைந்தார்.
ஸ்னேகாவின் பணிச்சூழலைக் கண்காணித்த அவரின் பயிற்சியாளர், பணிச்சமநிலை, உடல் ஆரோக்கியம், தனிப்பட்ட வேலைகள் உள்ளிட்டவைகளை, ஸ்னேகா சரிவர செய்ய முடியாததைக் கவனித்தார். இதன்காரணமாக, அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளதும், இதனால் அவரால் இரவுநேரத்தில் சரியாக உறக்கம் இல்லாத நிலையையும் கண்டார்.
ஸ்னேகாவை உடல்பரிசோதனை மேற்கொண்ட போது, HbA1C யின் அளவு 8.8 சதவீதமாக இருந்தது தெரியவந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடற்று இருப்பதை உணர்த்தியது. இதுமட்டுமல்லாது லிபிட் புரோபைலின் அளவும் அதிகரித்துக் காணப்பட்டது. இது இதய நோய்ப்பாதிப்பு வருவத்ற்குக் காரணமாக அமைகின்றன.
ஸ்னேகாவிற்கு உறக்கக் குறைபாடு, உடல் பலவீனம், உடல் வலி, மார்பு வலி போன்ற நீரிழிவு அறிகுறிகள் இருந்தன.
போதிய அளவிலான உறக்கம் இல்லாததால், அவர் எப்போதும் சோர்வாகக் காணப்பட்டார். இதன்காரணமாக, உற்பத்திதிறன் பாதிக்கப்பட்டது. சோதனையின் முடிவுகளும் அவரை மனதளவில் மிகவும் பாதித்து இருந்தன.
இதனையடுத்து, ஸ்னேகாவின் பயிற்சியாளர், சில பரிந்துரைகளை அவருக்கு வழங்கினார்.
ஸ்னேகாவிற்குப் பணிச்சமநிலை இல்லாததன் காரணமாக, அவரால் சரியான நேரத்திற்குச் சாப்பிட இயலவில்லை என்பதை உணர்ந்த பயிற்சியாளர் அவருக்கு என்று தனியானதொரு உணவு அட்டவணையை உருவாக்கினார்.
அதன்படி, காலை 7-8 மணிக்குள் காலை உணவை முடிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அதிகரிப்பால், காலை உணவில் பழங்கள் தவிர்க்கப்பட்டன. நண்பகல் வேளையில் சில வகைக் கொட்டைகளுடன் சிற்றுண்டி சாப்பிட வேண்டும்.
மதிய வேளையில், புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்துகள் கொண்ட சரிவிகித உணவு
மாலை 5 மணியளவில், அதிகளவிலான புரதம் கொண்ட சிற்றுண்டி. இதன்மூலம், அதீதப்பசி உணர்வானது கட்டுப்படுத்தப்படும்.
இரவு உணவை, 8.30 மணிக்கு உள்ளாக முடித்துவிட வேண்டும். இரவு உணவில் கிச்சடி, காய்கறிகள், தயிர், பனீர்ப் புலாவ் உள்ளிட்டவை இடம்பெறலாம்.
அடுத்ததாக, அவர் உடற்பயிற்சி பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
உடல் வலிமை, இதய ஆரோக்கியம், நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் பயிற்சிகள் பரிந்துரைக்கப்பட்டன.
பணிச்சூழலிலும் அவர் இருக்கையில் அமர்ந்தவாறே, செய்யக்கூடிய பயிற்சிகளும் அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம், அவர்ப் பணிநேரங்களிலும் இந்தப் பயிற்சியினை மேற்கொண்டு, ஆக்டிவ் ஆக இருக்க இயலும்.
இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டதன் மூலம்
உடலின் மேற்புற வலிமை 67.86 சதவீதம் அதிகரிக்கின்றது
உடலின் கீழ்புற வலிமை, முன்பைவிட 10 மடங்கு அளவிற்கு அதிகரித்து இருந்தது.
உடலின் நெகிழ்வுத்தன்மை 1.5 மடங்கு அதிகரித்து உள்ளது.
இதய ஆரோக்கியம் 15 சதவீதம் அளவிற்கு மேம்பட்டு உள்ளது.
ஃபிட்டர்பிளைத் திட்ட பயிற்சியாளரின் பரிந்துரையை, ஸ்னேகா தீவிரமாக மேற்கொண்டதால்
HbA1C அளவு 8.8 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகக் குறைந்தது
உடல் எடை 78 கிலோவில் இருந்து 67 கிலோவாகக் குறைந்தது.
BMI அளவு 30லிருந்து 25.9 ஆக குறைந்தது.
FBS மதிப்பு 204mg/dl என்ற அளவில் இருந்து 94 mg/dl ஆக சரிந்தது.
உடலின் கொழுப்பு அளவானது 230mg/dl என்ற அளவில் இருந்து 78mg/dl ஆக் குறைந்தது.
நீரிழிவுப் பாதிப்பில் இருந்து விடுபட்ட ஸ்னேகா, இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண் ஆக உணர்வதாகக் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் வாசிக்க : இந்தியாவில் ஆன்லைன் சிகிச்சையைத் தொடங்க தயாரா?
12 ஆண்டுகால பாதிப்பை வென்ற விஷால் கபூர்
48 வயதான விஷால் கபூர், 12 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். பல்வேறு சிகிச்சைமுறைகளை மேற்கொண்டபோதிலும், இவருக்கு எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.
விஷால் கபூருக்கு, HbA1C அளவு 12.4 என்ற அளவில் இருந்த நிலையில், அவர் உடனடியாக ஃபிட்டர்பிளைத் திட்டத்தில் இணைந்தார். அங்கு அவருக்கு என்று பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளரின் பரிந்துரையிலான நடவடிக்கைகளைக் கவனமுடன் மேற்கொண்டார். தீவிரப் பயிற்சிக்குப் பின் அவருக்குக் கிடைத்த பலன்கள் அளப்பரியதாக இருந்தன.
HbA1C அளவு 12.4 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகக் குறைந்தது
உடல் எடை 55 கிலோவில் இருந்து 52.5 கிலோ ஆகக் குறைந்தது
BMI மதிப்பு 24.5 லிருந்து 23.4 ஆக சரிவு
கலோரி எடுத்துக்கொள்ளல் 1492 கிலோகலோரியில் இருந்து 1192 கிலோகலோரியாகச் சரிவு
உடலின் மையவலிமை 20லிருந்து 35 ஆக உயர்வு
உறக்க நிலையானது சாதாரண நிலையில் இருந்து நல்ல உறக்க நிலைக்குத் தரம் உயர்வு
நீரிழிவுப் பாதிப்பை வென்ற 52 வயது பிரின்ஸ்
52 வயதான மொய்னுதீன் சயீத் என்ற பிரின்ஸ், உடல்நலக் குறைவு காரணமாக, சமீபத்தில் அறுவைசிகிச்சை மேற்கொண்டு இருந்தார். இதன்காரணமாக, அவருக்கு நீரிழிவுப் பாதிப்பானது ஏற்பட்டது. உடல் எடை 113 ஆக அதிகரித்து உள்ளது. HbA1C அளவு 11.3 சதவீதமாக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் ஃபிட்டர்பிளைத் திட்டத்தில் இணைந்தார். அங்கு பயிற்சியாளர் அளித்த பரிந்துரைகளைக் கவனமுடன் மேற்கொண்டார்.
HbA1C அளவு 11.3 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாகக் குறைந்தது
உடல் எடை 103 கிலோவில் இருந்து 80 கிலோ ஆகக் குறைந்தது
BMI மதிப்பு 32.9 லிருந்து 25.5 ஆக சரிவு
கலோரி எடுத்துக்கொள்ளல் அளவு 1770 கிலோகலோரியில் இருந்து 965 கிலோகலோரியாகச் சரிவு
உடலின் மையவலிமை 25லிருந்து 31 ஆக உயர்வு
மன அழுத்த அளவானது 2.2 என்ற அளவில் இருந்து 1 ஆக சரிவு.
நீரிழிவுப்பாதிப்பு உள்ளவர்க்ள், பாதிப்பு இருப்பதாகச் சந்தேகம் உள்ளவர்கள், இந்த மூன்று பேரின் அனுபவங்களை வழிகாட்டியாகக் கொண்டு, நீரிழிவுப் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவோம் என்ற நம்பிக்கையை மனதில் விதைத்துக் கொண்டு, அதற்கென உள்ள உரிய வழிமுறைகளை மேற்கொண்டு, நீரிழிவு என்ற அரக்கனை வென்று, நல்வாழ்க்கை வாழ்வீராக….