இலக்குகளை அடைய சரியான ஃபிட்னெஸ் செயலிகள்
இன்றைய இளம்தலைமுறையினர், உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அதிகச் சிரத்தைக் காட்டி வருகின்றனர். தாங்கள் சரியான ஃபிட்னெஸ் இலக்குகளை அடைய விரும்புகின்றனர். அதற்கான செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த டிஜிட்டல் யுகத்தில், பல்வேறு வகையான ஃபிட்னெஸ் செயலிகள் புழக்கத்தில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட நபர்களின் உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றன. சந்தையில் பல்வேறுவிதமான ஃபிட்னெஸ் செயலிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அதில் எது நமது உடற்பயிற்சி இலக்குகளை எட்ட உதவும் என்பதைக் கண்டுபிடிப்பதே, முக்கிய நிகழ்வாக உள்ளது.
சிறந்த ஃபிட்னெஸ் செயலிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்
உங்களின் தனிப்பட்ட குறிக்கோள்களுக்கு ஏற்ப, பயனுள்ள ஃபிட்னெஸ் செயலிகளைத் தேர்வு செய்ய, கீழ்க்கண்ட பரிந்துரைகளைப் பரிசீலனைச் செய்வதன் மூலம், நீங்கள் இலக்குகளை எட்ட இயலும்.
ஃபிட்னெஸ் இலக்குகளை நிறுவ வேண்டும்
ஃபிட்னெஸ் இலக்குகளை அடைவதற்கான சிறந்த செயலிகளைத் தேர்ந்தெடுக்க உதவும் முதல்படி, குறிக்கோள்களை நிறுவுவது ஆகும். இதன்படி, நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினாலோ அல்லது தசைகளின் வலிமையை அதிகரிக்க விரும்பினாலோ அல்லது உடல்ரீதியாகச் சுறுசுறுப்பாக இருக்க விரும்பினாலோ, அதற்கேற்ற வகையிலான ஃபிட்னெஸ் செயலிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போதைய ஃபிட்னெஸ் அளவை மதிப்பீடு செய்யவும்
உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை அடைய உதவும் வகையிலான ஃபிட்னெஸ் செயலிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் தற்போதைய உடற்பயிற்சி அளவைக் குறித்துக் கொள்ளவும். சில செயலிகள், துவக்க நிலைக்கு ஏற்றவாறும், சில செயலிகள் மேம்பட்ட பயனர்களுக்கு ஏற்றவாறும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதில் உங்களுக்கு எது தேவையானது என்பதைக் கண்டறிந்து அதனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தேவையற்ற காயங்கள் மற்றும் மன விரக்தியைத் தடுக்க முடியும்.
பயனர்களின் மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
நீங்கள் உங்கள் உடற்பயிற்சி இலக்குகள் மற்றும் நிலைகளை நிர்ணயம் செய்தபிறகு, அதுதொடர்பான ஃபிட்னெஸ் செயலிகளின் பயனர் மதிப்புரைகளைக் கவனமாகப் படித்து உங்கள் நடவடிக்கைகளைத் துவக்கவும். செயலிகளைப் பயன்படுத்திய மற்ற பயனர்களிடமிருந்து வரும் பின்னூட்டங்கள், அந்தச் செயலியின் செயல்திறன், அதனைக் கையாளும் திறன், தரம் உள்ளிட்ட அதுதொடர்பான நுண்ணறிவுகளை வழங்கக்கூடும்.
செயலிகளில் உள்ள அம்சங்கள்
ஃபிட்னெஸ் செயலிகள் ஒவ்வொன்றிலும், அதற்கே உரித்தான அம்சங்கள் மற்றும் திறன்கள் உள்ளன. இவை, உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை விரைவில் எட்ட உதவுகின்றன. செயலியில் உள்ள அம்சங்களை முதலில் புரிந்து கொள்ளுங்கள். சில பிரபலமான செயலிகளில் உடற்பயிற்சி நடைமுறைகள், உணவு கண்காணிப்பு முறைகள், ஃபிட்னெஸ் டிராக்கர்கள், அணியக்கூடிய சாதனங்களின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.
பயனர் நட்பு இடைமுகம்
ஃபிட்னெஸ் செயலிகளில் பயனர் நட்பு என்பது மிக முக்கியமான நிகழ்வாகும். மொபைல் செயலிகளின் மேம்பாட்டுச் சேவைகள், நடைமுறைப் பயனர் இடைமுகங்களை உருவாக்க உதவுகின்றன.
சாதனங்களுடன் இணக்கத்தன்மை
நீங்கள் தேர்வு செய்த ஃபிட்னெஸ் செயலி, மொபைல் சாதனங்களில் உள்ள ஆண்ட்ராய்ட் அல்லது ஐஓஎஸ் இயங்குதளத்துடன் இணக்கமாக இருப்பதை உறுதி செய்வது அவசியம் ஆகும். மொபைல் சாதனங்களில், ஃபிட்னெஸ் குறித்த எல்லாத் தரவுகளையும் எளிதாக அணுகும் வகையில் இருப்பது அவசியமாகும்.
இலவசம் மற்றும் கட்டணச் செயலிகள்
ஃபிட்னெஸ் செயலிகள், இலவசம் மற்றும் கட்டணப் பதிப்புகளில் உள்ளன. இந்த இரண்டு பதிப்புகளும், தங்களுக்கே உரித்தான அம்சங்களைக் கொண்டு உள்ளன. கட்டணச் செயலிகள், நீங்கள் விரும்பிய அம்சங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதாக உள்ளது.
தனிப்பயனாக்கப்பட்ட ஃபிட்னெஸ் நடைமுறைகள்
தனிப்பயனாக்கப்பட்ட ஃபிட்னெஸ் நடைமுறைகளைக் கொண்டு உள்ள ஃபிட்னெஸ் செயலிகள், உங்கள் உணவுத்திட்டங்களை எளிமைப்படுத்துகின்றன. இதன்காரணமாக, உங்கள் இலக்குகள் விரைவாக எட்டப்படுகின்றன. தனிப்பயனாக்கப்பட்ட ஃபிட்னெஸ் நடைமுறைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க, பயனர்களின் வயது, எடை, உயரம் உள்ளிட்ட தரவுகளை உள்ளீடு செய்யும் வகையிலான செயலிகளைக் கண்டறிவது அவசியமாகும்.
மேலும் வாசிக்க : நோயாளி பராமரிப்பில் மொபைல் செயலிகளின் தாக்கம்
சிறந்த செயலியைத் தேர்ந்தெடுக்கக் கவனத்தில் கொள்ள வேண்டியவை
ஃபிட்னெஸ் இலக்குகள்
ஃபிட்னெஸ் செயலிகளின் மூலம், எந்தவகையான இலக்குகளை அடையப் போகிறோம் என்பதில் முழுத்தெளிவு இருக்க வேண்டும். செயலியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், பின்வரும் இலக்குகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதைக் கண்டறியவும்:
- உடல் எடைக் குறைப்பு
- தசைகளின் கட்டமைப்பு
- இதய நலன் சார்ந்த உடற்பயிற்சிகள்
- யோகா
தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு
ஃபிட்னெஸ் செயலிகள், தரவுகளின் உணர்திறன் அடிப்படையில் செயல்படுபவைகள் ஆகும். இதன்காரணமாக, செயலிகளில் உள்ளீடு செய்யப்படும் தரவுகளின் தனியுரிமை, பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கவனமாக மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பயனர்களின் உடல்நலம் சார்ந்த தரவுகள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன, அவை எங்கு சேமிக்கப்படுகின்றன, எவ்வாறு பகிரப்படுகின்றன, அதில் தரவுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை, அதில் உள்ள தனியுரிமைக் கொள்கைகளில் விளக்கப்பட்டு உள்ளன. அதன்படி நடந்துகொள்வதன் மூலம், தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய இயலும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் உடல்நலம் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஃபிட்னெஸ் செயலியைத் தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…