எந்த வயதினருக்கு மேமோகிராம் சோதனைக் கட்டாயம்?
சர்வதேச நாடுகளில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பெண்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் மேமோகிராம் சோதனையைச் செய்து கொள்வது என்பது, கிட்டத்தட்ட ஒரு தேர்வு எழுதுவது போன்ற மனநிலைத் தான் ஆகும். இந்தச் சோதனை, பெரும்பாலும் குறைவான வலியையே உண்டாக்கும் என்றாலும், இந்தச் சோதனையை மேற்கொள்ளப் பெரும்பாலான பெண்கள் பெரும் தயக்கத்திலேயே இருந்து வருகின்றனர்.
நீங்கள் 40 வயதை நெருங்கும் பெண்களா…
40 மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள், மேமோகிராம் போன்ற சோதனைகளை ஆண்டிறகு ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, 45 முதல் 49 வயதிற்கு உட்பட்ட பெண்கள், வருடாந்திர மார்பகப் புற்றுநோய் பரிசோதனைச் செய்து கொள்வது கட்டாயம் என்று அமெரிக்கப் புற்றுநோய் சொசைட்டி பரிந்துரைச் செய்து உள்ளது.
40 முதல் 49 வயது வரையிலான பெண்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மேமோகிராம் சோதனையைச் செய்து கொள்வது நல்லது என்று, அமெரிக்க மருந்தாளுநர்கள் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் வாசிக்க : மேமோகிராம் – அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை..
யாருக்கு அதிகப் பாதிப்பு?
50 முதல் 54 வயதிற்கு உட்பட்ட பெண்கள், ஆண்டிற்கு ஒரு முறையும் 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மேமோகிராம் சோதனையைச் செய்து கொள்ள அமெரிக்க முன்னணி மருத்துவத் துறை நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. 70 முதல் 74 வயது வரையிலான பெண்களுக்கு, மேமோகிராம் சோதனைப் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 40 வயது (அதற்குக் குறைவானவர்கள் அல்ல) மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள், பரிசோதனையைத் துவக்க வேண்டும்.
- மேமோகிராம் சோதனை மட்டுமல்லாது, எம் ஆர் ஐ ஸ்கேனும் எடுக்க வேண்டும்.
வருடாந்திரச் சோதனை மேற்கொள்வது நல்லது- உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவ்வப்போது மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இந்த மேமோகிராம் சோதனையை ஆண்டிற்கு ஒருமுறைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவர்கள், வருடாந்திர மேமோகிராம் சோதனை உடன் எம் ஆர் ஐ ஸ்கேனையும் எடுப்பது நல்லது. பெற்றோர்களில் யாராவது ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருந்தாலோ, அவர்களது குழந்தைகளுக்கும் அதிகப் பாதிப்பு இருக்கும் வாய்ப்பு கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.