உணவுத்திட்டமிடல் செயலிகளின் பயன்பாடுகள்
உடல் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு, மக்கள் சமீபகாலமாக அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கத் துவங்கி உள்ளனர். அதேநேரத்தில், உடற்பயிற்சிகள் மீதும் அவர்களது பார்வைத் திரும்பி உள்ளது. உடல் ஆரோக்கிய மேம்பாட்டிற்கும், உடற்பயிற்சிகள் தொடர்பான இலக்குகளை நிறைவேற்றுவதற்கும், ஊட்டச்சத்துக் கொண்ட உணவுமுறையானது முக்கியப் பங்களிப்பதாக உள்ளது.
மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் வல்லுநர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த முன்னணி செயலிகளைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தப் பிரிவில் முன்னணியில் உள்ளது HealthifyMe நிறுவனத்தின் HealthifyMe Smart Plan எனப்படும் உணவுத் திட்டமிடல் நிகழ்வாகும். பல சோதனைகளில் வெற்றிப் பெற்ற இச்செயலி, இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.மேலும் இதன் துல்லியமான உடல் எடைக் குறைப்பு நிகழ்வால், சர்வதேச அளவிலும், இது அங்கீகாரம் பெறத் துவங்கி உள்ளது.
இச்செயலி பயனரின் சுவை மற்றும் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வழிமுறையின் உதவியுடன், தங்களது பயனர்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைய உதவுகிறது.
இந்தச் செயலியானது, செயற்கை நுண்ணறிவு முறையிலான உணவுத்திட்டம் என்று சுருக்கிவிடாமல், பயனர்கள் முழுப்பயனை அடைவதற்கு ஏதுவான செயல்முறைத் திட்டமாக உள்ளது. இது, பயனர்கள், நிபுணர்கள் உடன் உரையாடுவதற்கான வசதியையும் ஏற்படுத்தித் தருகிறது. உணவுமுறைகளைக் கண்காணித்தல், தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல், அதைப் பகிர்வதன் மூலம் கண்காணிக்க இயலும்.
செயலியின் செயல்முறை
HealthifyMe Smart செயலியில், நீங்கள் தேர்வு செய்வதற்காக, பல்வேறு வகையான உணவு வகைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. பயனர்கள், அந்தப் பட்டியலில் இருந்து தங்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் ஏதாவது உணவுக்கட்டுப்பாட்டு முறையைக் கடைப்பிடித்து வந்தாலும், இதை மேற்கொள்ளலாம்.
நீங்கள் தேர்வு செய்யும் உணவு வகைகளைப் பொறுத்து, செயற்கை நுண்ணறிவு முறையானது, தனிப்பட்ட வகையிலான உணவுமுறையைப் பரிந்துரைக்க உதவுகிறது. இது உங்களை ஊட்டச்சத்து அடிப்படையில் மட்டுமல்லாது, உடற்பயிற்சி இலக்குகளை அடையும் நோக்கிலும் பேருதவி புரிகிறது.
நீங்கள் தேர்ந்தெடுத்த உணவு வகைகள், உங்களுக்குப் பிடிக்காமல் போகும்பட்சத்தில், அவற்றை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பினையும் அது உங்களுக்கு வழங்குகிறது.
அடுத்ததாக, உங்களது தற்போதைய உடல்தகுதி நிலைக் கணக்கில் கொள்ளப்படுகிறது. உங்களது தற்போதைய உடற்தகுதி நிலையைப் பொறுத்து, நீங்கள் இருக்கும் இடத்திலேயே 5 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் கால அளவிலான உடற்பயிற்சி முறைகளைப் பரிந்துரைச் செய்கின்றது. பயனர்கள் வைத்திருக்கும் உபகரணங்களைப் பொறுத்து, அவர்களின் உடற்பயிற்சி முறைகள் வகுக்கப்படுகின்றன. இதன்காரணமாகவே, உடற்பயிற்சி இலக்குகள் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படுகின்றன.
HealthifyMe Smart செயலியின் மூலம், 3 மாதங்களில் 12 கிலோ எடையைக் குறைத்த வெர்டிகா, அவரது அனுபவங்களை, நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அவர்க் கூறியதாவது. “உடல் எடையைக் குறைக்கப் பல முயற்சிகளில் தோல்வியுற்று, மனம் சோர்ந்திருந்தபோது HealthifyMe Smart செயலி அறிமுகமானது. இந்தச் செயலியை நிறுவி, பயன்படுத்த துவங்கினேன். என்னுடைய தினசரி நடைமுறை மற்றும் உணவுமுறைக் குறித்த விவரங்களை அதில் பதிவுசெய்தேன். இதன்மூலம், எனது உணவுப்பழக்கவழக்கங்கள் குறித்து நானே கண்காணிக்கப் பெரிதும் உதவியது. ரியா என்ற எனது செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியாளர், எனது தினசரி உணவு பழக்கங்கள் குறித்த தகவல்களை வழங்கியது. நான் தேர்வுசெய்த உணவுவகைகளில், ஆரோக்கியமற்றதை எடுத்துக்காட்டி, அதற்குப்பதிலாக, ஆரோக்கியமான உணவு வகைகளை, எனது உணவுப்பட்டியலில் சேர்த்ததாக” வெர்டிகா கூறினார்.
RIA – செயற்கை நுண்ணறிவு அம்சம்
RIA எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அம்சமானது, பயனர்களின் உணவுப் பழக்கங்களைக் கண்காணிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நீங்கள் உணவுமுறைகள், தினசரி பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளை, இந்த்ச் செயலியில் பதிவேற்றம் செய்யும் போது, அது உங்கள் உடல்நல ஆரோக்கியம் மேம்படத் தேவையான உடற்பயிற்சி முறைகள், உணவுமுறைகள் உள்ளிட்டவைகளைப் பரிந்துரைக்கின்றது.
சாத்தியமான இலக்குகளை நிர்ணயித்தல், முழுமையான உணவுமுறையைப் பரிந்துரைத்தல், மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளின் அளவைக் கண்காணித்தல், சிறந்த உறக்கத்திற்கு வழிவகுத்தல் உள்ளிட்ட சிறப்பம்ச நடவடிக்கைகளை, RIA நுட்பமானது திறம்படக் கையாள்கிறது.
HealthifyMe Smart செயலி, பயனர்களின் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் இலக்கு பூர்த்தியாகும் வரை, அவர்களுக்குத் துணைநிற்கிறது.
மேலும் வாசிக்க : தனிப்பயனாக்கப்பட்ட உணவுப் பரிந்துரைகளின் நன்மைகள்
HealthifyPRO அம்சம்
HealthifyMe நிறுவனத்தின் HealthifyPRO அம்சமானது, தங்களது பயனர்களுக்கு, உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகளை வகுப்பதோடு மட்டுமல்லாது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கண்காணிக்க உதவுகிறது.
உங்கள் உணவு தேர்வுகளின் அடிப்படையில் ரத்த சர்க்கரை மாற்றங்களைக் கண்காணித்து, மொபைல் மூலம் எச்சரிக்கை அனுப்பும்.இதுமட்டுமல்லாது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, மீண்டும் இயல்பான நிலைக்குக் கொண்டுவரும் வழிமுறைகளையும், இந்தச்செயலி வழங்குகின்றது.
உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் பொருட்டு, பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி, அதில் திருப்தி அடையாதவர்கள், இந்தHealthifyMe Smart செயலியைப் பயன்படுத்தி, சிறந்த வகையிலான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றி, அதற்கென வகுத்த இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீராக….