மொபைல் செயலி மூலம் மனநல ஆரோக்கியத்தை அறிதல்
மொபைல் செயலியின் பயன்பாடு
மொபைல் செயலி மூலம் மனிதர்கள் தங்கள் மனநல ஆரோக்கியத்தைச் சுயமாக மதிப்பிட முடியும்.மொபைல் செயலியில், மனச்சோர்வுக்கான திரையிடல், கவலைச் சார்ந்த குறைபாடுகளைக் கண்டறியும் விதமான திரையிடல், மனநிலைச் சார்ந்த பாதிப்புகளுக்கான திரையிடல், மன உளைச்சலுக்குப் பிந்தைய சீர்குலைவுக்கான திரையிடல் என 4 விதமான திரையிடல் பரிசோதனைகள் உள்ளன. இந்தப் பரிசோதனைகளின் மூலம் பெறப்படும் மதிப்பீடுகளைக் கொண்டு, மருத்துவர், குறிப்பிட்ட நபருக்குத் தேவையான பரிந்துரைகளை வழங்குவார். அதன்பின், அவர்கள் சிகிச்சைக்காக, அருகில் உள்ள மனநல மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர்.
செயலியின் அமைப்பு
இன்றைய நிலையில், அனைத்து மொபைல் செயலிகளும், பயனர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக மாறிவிட்டன. ஒரே செயலியில், பல்வேறு பயனர்களின் தரவுகள் பதிவு செய்யப்படும் நிலையில், அவற்றை வேறுபடுத்திக் காட்ட, வெவ்வேறான பயனர்க் கணக்குகள் அவசியமாகின்றன. பல பயனர்களின் மருத்துவத் தரவுகளை நிர்வகிக்கும் வகையிலான செயலியானது,பல்வேறு பயனர்க் கணக்குகள் என்ற சிக்கலைத் தெளிவாகத் தீர்க்கும் வகையில் அமைந்தது. மனநலத் திரையிடல் செயலியானது, பயனர்களின் முழு ஆதரவுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பயனர் உள்நுழைவு உடன் தரவுகளின் பதிவுகள் மற்றும் அதன் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் செயலியில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. செயலியில், பயனர்களின் மனநலம் சார்ந்த தரவுகள் மற்றும் அதன் அறிக்கைகள் சேமிக்கும் வசதி உள்ளது. இதன்காரணமாக, இது சிறந்த செயலியாக விளங்குகிறது. பலதரப்பட்ட பயனர்கள் தங்களுக்கு உரிய சான்றுகளைப் பயன்படுத்தி, செயலியின் உள்நுழைந்து, தங்களுக்கான மருத்துவத் தரவுகளை நிர்வகித்துக் கொள்ள முடியும்.
செயலியில், துல்லியமான இருப்பிட கண்காணிப்பு அம்சம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், பயனர், தான் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சுகாதார மையங்களை எளிதாக அடையாளம் காணமுடியும். அதுமட்டுமல்லாது, மேற்கொள்ள உள்ள பரிசோதனைக் குறித்தும் திட்டமிட முடியும்.
அவசரச் சிகிச்சை உதவி
உடல்நலப் பாதிப்புகள் முன்னறிவிப்பின்றி வரும்.சில அறிகுறிகளை வைத்து வேண்டுமென்றால், நாம் அதைக் கண்டறிய முடியும். இந்தச் செயலியானது, பயனருக்கு அருகில் உள்ள சுகாதாரச் சேவை வழங்கும் நிறுவனத்தைக் கண்டறிய உதவுகிறது. இதன்மூலம், பயனர், சுகாதார வழங்குநருடன் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும். இதன்மூலம், மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைமுறையை விரைந்து துவங்குவதற்கான வழிவகைப் பிறக்கிறது. மனநலத் திரையிடல் செயலியின் முக்கிய அம்சமாக,இது கருதப்படுகிறது.
பல்வேறு திரையிடல் வகைகள்
இந்தச் செயலியில், பல்வேறு நபர்களின் உடல்நலத் திரையிடல் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். மனச்சோர்வு திரையிடல், இருமுனைப் பாதிப்புத் திரையிடல், கவலைச் சார்ந்த பாதிப்புகளின் திரையிடல், P.T.S.D திரையிடல் உள்ளிட்ட அறிகுறிகள் அடிப்படையிலான திரையிடல்களும், இந்தச் செயலியில் மேற்கொள்ள முடியும். செயலியின் இந்தப் பல்வேறு திரையிடல் அம்சங்கள், அதன் போட்டியாளர்களிடையே, தனித்துவமாக இயங்க வைக்கிறது. செயலியின் டெவலப்பர்கள் கணக்கெடுப்புகளின் தரவுகளை ஆய்வு செய்து இந்த அம்சத்தை உருவாக்கினர்.கடினமான உழைப்பின் பயனாக, 100 சதவீதத் தனித்துவமான செயலியை உருவாக்கி உள்ளனர். இது உண்மையான சிகிச்சையைத் தொடர, பயனர்களுக்குப் பேருதவி புரிகிறது.
அநாமதேயத் திரையிடல்
பல்வேறு திரையிடல் அம்சங்களை உள்ளடக்கிய இந்தச் செயலியில், அநாமதேயத் திரையிடல் அம்சமும் உள்ளது. இதைப் பயன்படுத்தி, எந்தவொரு பயனரும், தங்களது உடல்நலப் பாதிப்பு அறிகுறிகளை, செயலியில் திரையிட முடியும். பயனர்கள் தனிப்பட்ட தகவல்கள் இன்றியே உடனடி பரிந்துரைகளைப் பெறலாம்.இது, சிகிச்சைகளின் முடிவுகளை உடனடியாகப் பெறவும், செயல்பாட்டில் உள்ள மருத்துவ நிலையை ஒப்பிடவும், பயனருக்கு உதவுகிறது.
மேலும் வாசிக்க : நல்ல மன ஆரோக்கியத்தைக் கற்பித்தல் நடைமுறைகள்
தொடர் மேம்பாடு
மனநல ஆரோக்கிய திரையிடல் செயலியானது, நிகழ்நேரத் தரவு பகுப்பாய்வின்படி, தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. பயனருக்கான குறிப்பிட்ட கேள்வித்தாள் மூலம் துல்லியமான முடிவுகளைப் பெறுவது அவசியம்.இந்த நவீன யுகத்தில், சுகாதார விழிப்புணர்வானது முக்கியப்பங்கு வகிக்கிறது. பல்வேறு நோய்ப்பாதிப்புகளுக்கு, கடுமையான சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி, நிரந்தரமாகக் குணப்படுத்த இயலும்.
நவநாகரீக உலகில், மொபைல் செயலியின் மூலம் மனநல ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையைச் சாத்தியமாக்க முடியும்.