நீரிழிவுப்பாதிப்பு உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவு
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அல்லது குளுக்கோஸ் உடலின் ஆற்றல் மூலமாகப் பயன்படும் நிகழ்வைப் பாதிக்கும் காரணியாக நீரிழிவுப் பாதிப்பு அறியப்படுகிறது. தசைகள் மற்றும் திசுக்களின் உருவாக்கத்தில் செல்களுக்கு, குளுக்கோஸ் சிறந்த ஆற்றல் மூலமாக விளங்குகிறது. மூளையின் சிறந்த எரிபொருள் மூலமாகக் குளுக்கோஸ் விளங்குகிறது.
நீரிழிவு நோய்ப்பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பிட்ட நபர் எந்த வகையான நீரிழிவுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தாலும், அது அவரது உடலின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து இருக்கும். இரத்தத்தில், அதிகப்படியான சர்க்கரை இருக்கும் நிகழ்வு, பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன.
நீரிழிவுப் பாதிப்பின் வகைகள்
முதல் வகை நீரிழிவுப் பாதிப்பு – இந்தப் பாதிப்பில், உடலில் இன்சுலின் உற்பத்தி முற்றிலும் நிறுத்திவிடும்.
இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்பு – கணையம் போதிய அளவிலான இன்சுலினை உற்பத்தி செய்யாத நிலையில், செல்களுக்குத் தேவையான அளவிலான இன்சுலின் கிடைக்காத நிலை ஏற்படும்.
நீரிழிவுப் பாதிப்பிற்கு முந்தைய நிலை – இரத்தத்தில் இயல்பாக இருக்கும் சர்க்கரையின் அளவைவிட அதிகமாக இருக்கும்.
கர்ப்பகால நீரிழிவுப் பாதிப்பு – பெண்களின் கர்ப்ப காலத்தில், இந்த வகை நீரிழிவுப் பாதிப்பானது நிகழ்கிறது.
நீரிழிவுப் பாதிப்பிற்கான அறிகுறிகள்
நீரிழிவுப் பாதிப்பின் வகைகளைப் பொறுத்து, அதன் அறிகுறிகளும் வேறுபடுகின்றன. பொதுவான அறிகுறிகள் இங்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.
அதிகத் தாக உணர்வு
அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
திடீரென்று உடல் எடைக் குறைதல்
அதீத உடல் சோர்வு
மனநிலையில் அடிக்கடி மாற்றங்கள்
பார்வை மங்குதல்
அடிக்கடி நோய்த்தொற்றுகளுக்கு உள்ளாதல் உள்ளிட்டவை ஆகும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை எவ்வாறு கண்காணிப்பது?
கைவிரலில் ஊசி மூலம் குத்தி, அதன்மூலம் வெளியேறும் சில துளி ரத்தத்தை, சோதனைப்பட்டையில் சேகரித்து அதற்கென உள்ள மானிட்டரில் வைத்து பார்க்கும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ளலாம்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவுக்கான சோதனையை எப்போது செய்ய வேண்டும்?
இரத்தத்தில் சர்க்கரையின் அளவுக்கான சோதனையை மேற்கொள்வதற்கு என்று சில வேளைகள் உள்ளன. அந்த நேரங்களில், நாம் சோதனை மேற்கொள்ளும்போது, சிறந்த முடிவுகள் நமக்குக் கிடைக்கும்.
காலையில் எழுந்த உடனே மேற்கொள்ளுதல்
சாப்பிடுவதற்கு மற்றும் அருந்துவதற்கு முன்பு
மதிய உணவுக்கு இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு
உறங்கச் செல்வதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு
நீரிழிவுப் பாதிப்பிற்கு உள்ளானவரின் இயல்பான ரத்த சர்க்கரை அளவு
மதிய உணவிற்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 130 mg/dl
மதிய உணவு சாப்பிட்டு 2 மணிநேரத்திற்குப் பிறகு 180 mg/dl க்கு உள்ளாக இருத்தல் வேண்டும்.
20 வயதுக்கு மேற்பட்டவர்கள்
20 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவிற்கான பரிசோதனையை அடிக்கடி மேற்கொள்வதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள இயலும்.
மேலும் வாசிக்க : துல்லியமற்ற ரத்த சர்க்கரை அளவீடுக்கான காரணிகள்
உணவு சாப்பிடாமல் ரத்த சர்க்கரைச் சோதனைச் செய்தல்
உணவு எதுவும் சாப்பிடாத நிலையில் அல்லது சோதனைக்கு முதல்நாள் இரவு எதுவும் சாப்பிடாமல் இருந்து, சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்டறியும் சோதனையின் போது, ரத்த சர்க்கரை அளவு 100 mg/dlக்கு குறைவாக இருக்க வேண்டும்.
100 mg/dl முதல் 125 mg/dl ஆக இருப்பின், நீரிழிவுப் பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது.
இரத்தத்தில் சர்க்கரை அளவு 125mg/dl க்கு அதிகமாக இருப்பின் நீரிழிவுப் பாதிப்பு இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
உணவு சாப்பிடுவதற்கு முன்
உணவு சாப்பிடுவதற்கு முன்,ரத்த சர்க்கரைச் சோதனைச் செய்வதன் மூலம், கடந்த சில மாத அளவிலான சராசரி ரத்த சர்க்கரை அளவைத் தெரிந்து கொள்ளலாம்.
உணவு சாப்பிடுவதற்கு முன்,ரத்த சர்க்கரைச் சோதனைச் செய்யும்போது கிடைக்கும், ரத்த சர்க்கரை அளவு 80 முதல் 130 mg/dl ஆக இருப்பதே, இயல்பான நிலை ஆகும்.
சாப்பிட்ட பிறகு 1 மணிநேரம் கழித்து
உணவு சாப்பிட்ட பிறகு ஒரு மணிநேரம் கழித்து மேற்கொள்ளப்படும் சோதனையில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும். இந்த நிலைச் சோதனையின் போது கிடைக்கும் ரத்த சர்க்கரை அளவு 180 mg/dlக்கு குறைவாக இருக்க வேண்டும்.
இரவுநேரத்தில்
உறங்கச் செல்வதற்குப் பெரும்பாலானோர்ச் செரிமானத்திற்கு ஏற்ற வகையிலான எளிமையான உணவுகளைச் சாப்பிட விரும்புவர். இந்த நேரத்தில் சோதனை மேற்கொள்ளும்போது, ரத்த சர்க்கரை அளவு 100 முதல் 140 mg/dl என்ற அளவில் இருப்பது நல்லது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சரியான அளவில் பேணிக்காப்பதன் மூலம், பல்வேறு உடல்நலப் பாதிப்புகளின் ஆபத்துகளில் இருந்து காத்து, ஆரோக்கியமான, வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…