remote-monitoring-in-healthcare

தொலைநிலை நோயாளிக்கண்காணிப்பின் எதிர்காலம்

நடப்பு 21ஆம் நூற்றாண்டில், மருத்துவத் துறையில் தொழில்நுட்பத் தலையீடின்றி இந்தளவு வளர்ச்சி சாத்தியமாகியிருக்காது. மருத்துவத்துறையில், தற்போது காணப்படும் பல்வேறுவகை முன்னேற்றங்களில், தொலைநிலை நோயாளி கண்காணிப்பு (RPM) என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலமானது, மருத்துவத்துறையில் தொலைநிலைக் கண்காணிப்பு சேவைகளை, மருத்துவத்துறையின் முன்னணிச் சேவைகளாக மாற்றிவிட்டன. பாரம்பரிய முறைகளுடன் ஒப்பிடுகையில், இம்முறைப் பல சவால்களைத் தகர்த்து, குறைந்த செலவு மற்றும் பராமரிப்புடன் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொலைநிலைக் கண்காணிப்பின் வளர்ச்சி

சமீபத்தில் அறிமுகமான தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறைக் குறுகிய காலத்தில் எலும்பு நலம் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கும் விரிவாக்கப்பட்டது. இது உடல் எடை, நுரையீரல் கொள்ளளவு, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரைப் போன்ற முதன்மை அறிகுறிகளைக் கண்காணிக்க உதவுகிறது.

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் பாதிப்பு நோயாளிகள் உடனடியாக நேரடி சிகிச்சை முறைகளில் இருந்து மெய்நிகர் முறையிலான சிகிச்சை முறைக்கு மாற்றப்பட்டனர். இதன்மூலம், அவர்களின் மருத்துவ நிலைமைகள் உடனுக்குடன் மருத்துவ நிபுணர்களால் கண்காணிக்கப்பட்டது. இது நோய்ப்பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உதவியது மட்டுமல்லாமல், மருத்துவமனையின் பயன்பாட்டையும், மருத்துவர்களின் காலவிரயத்தையும் பெருமளவில் குறைத்தது.

மொபைல் போன் மூலமான தொலைநிலை நோயாளி கண்காணிப்பு (mRPM)

மொபைல் போன் மூலமான தொலைநிலை நோயாளி கண்காணிப்பு ( mRPM), தொலைநிலைக் கண்காணிப்பு முறையில் வியத்தகு முன்னேற்றமாகவே கருதப்படுகிறது. இது மொபைல் செயலிகள் மூலம் நோயாளி-மருத்துவர் உறவை வலுப்படுத்துகிறது. பயனர்கள் முக்கிய மருத்துவ தரவுகளை உள்ளிட இது தூண்டுகிறது. இந்த உடனடி பரிமாற்றம் தகவல்தொடர்பை மேம்படுத்துகிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்த இம்முறை, நெருக்கடி காலத்தில் மேலும் பிரபலமடைந்தது. செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து, இது பிழைகளைக் குறைத்து, மருத்துவர்-நோயாளி தொடர்பை மேம்படுத்துகிறது.

நாள்பட்ட நோய்களே உலகளாவிய இறப்புகளுக்கு முக்கிய காரணம் என அமெரிக்க மருத்துவ சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. 2028க்குள் உலகத் தொலைநிலைக் கண்காணிப்புச் சந்தை 41.7 பில்லியன் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 இறுதிக்குள் 30 மில்லியன் அமெரிக்கர்கள் இம்முறையைப் பின்பற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.தொலைநிலைக் கண்காணிப்பின் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், 2027ஆம் ஆண்டிற்குள், இதன் திட்டமிடப்பட்ட மதிப்பீடு 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சாதாரண கையடக்க வகையிலான ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் வகையில் துவங்கிய தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறையானது, தற்போது அனைத்து வகையான மருத்துவ நிலைமைகளையும் கண்டறியும் நோக்கிலான டிஜிட்டல் சிம்பொனியாக உருவெடுத்து உள்ளது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தொடர்ச்சியாகக் கண்டறியும் கருவிகள் மூலம், நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடிகிறது.இதன்மூலம், விரல்களை ஊசி மூலம் குத்தும் நிகழ்வுகள் தவிர்க்கப்படுகின்றன. இரத்தத்தில் சர்க்கரைக் கண்காணிப்பு மட்டுமல்லாது, அரித்மியா, காயம் பராமரிப்பு உள்ளிட்டவைகளின் கண்காணிப்பிற்கு, ECG சென்சார்கள் கொண்ட ஸ்மார்ட் வாட்சுகள், வயர்லெஸ் டிரான்ஸ்மீட்டர்கள் கொண்ட எலெக்ட்ரானிக் தோல் திட்டுகள் போன்றவைப் பேருதவி புரிகின்றன.

புளூடூத் தொழில்நுட்பமானது, தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறையினை மேலும் எளிமையானதாக மாற்றி உள்ளது. ஆஸ்துமா மற்றும் COPD பாதிப்பு நிர்வாக மேம்பாட்டிற்கு உதவுகிறது.

தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறையில், Bluetooth Low Energy (BLE) செயலி மேம்பாடானது, சரியான தீர்வை வழங்குகிறது. நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், மருத்துவச் செலவினங்களைக் குறைப்பதற்கும் உதவுகிறது.

An enlarged bluetooth logo kept over a laptop keyboard.

BLE செயலியின் நன்மைகள்

தொலைநிலை நோயாளிக் கண்காணிப்பு நடைமுறையில், BLE செயலியானது அளப்பரிய நன்மைகளை வழங்கி வருகிறது. அவற்றை இங்கு விரிவாகக் காண்போம்,

நோயாளியின் முன்னேற்றத்தை மேம்படுத்துகிறது

BLE செயலி நோயாளியின் மருத்துவ தரவுகளைக் கண்காணிக்கவும், நோய்ப்பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியவும் உதவுகிறது. நோயாளிகளின் தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத் தரவுகள் மற்றும் மருந்துகளை உட்கொள்வதற்கான நினைவூட்டல்களை இது வழங்குகிறது. இதன்மூலம், நோயாளிகள், தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவும், இந்த விசயத்தில் சிறந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தையும் வழங்குகின்றன.

மேலும் வாசிக்க : உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் செயலிகள்

மேம்பட்ட பராமரிப்பு

நோயாளிகள், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, உயர்தரச் சிகிச்சைகளைப் பெற BLE செயலியானது உதவுகிறது. கிராமப்புற பகுதிகள் மற்றும் மலைக்கிராமங்கள் உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் தொடர்ச்சியான கண்காணிப்புகளை மேற்கொண்டு, அவர்களின் உடல் ஆரோக்கிய பராமரிப்பையும் மேம்படுத்துகிறது.

குறைந்த செலவினங்கள்

சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லுதல், அங்கு அனுமதிக்கப்படுதல் உள்ளிட்ட தேவைகள், BLE செயலியின் உதவியால் குறைக்கப்படுவதனால், நோயாளிகளுக்குக் குறைந்த செலவே ஆகிறது. தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறையினால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. இதனைத் துவக்கத்தில் இருந்தே மேற்கொண்டால், நாள்பட்ட மருத்துவ பாதிப்புகளிலும் முன்னேற்றத்தைக் கண்டறியவும், அவசரச் சிகிச்சை மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் செலவுகளைக் குறைக்கவும் உதவுகின்றன.

தொலைநிலை நோயாளிக் கண்காணிப்பு நடைமுறையை முறையாகப் பின்பற்றி, நோய்ப்பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, தடுப்பு முறைகளின் உதவியுடன் தடுத்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீராக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.