A womans hand holding a glucometer checks the blood sugar from the other hand.

நீரிழிவு நிவாரண நிகழ்வில் உறக்கத்தின் தாக்கம்

சர்வதேச அளவில் மிகவும் சவாலான உடல்நலப் பாதிப்பாக நீரிழிவு நோய்ப்பாதிப்பானது விளங்கி வருகிறது. நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2045க்குள் நீரிழிவு நோயாளிகள் 80% அதிகரித்து, உலகளவில் 124 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீரிழிவு நோய்ப்பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், எவ்வித மருத்துவ முறையையும் பின்பற்றாமல், சில வழக்கமான நடைமுறைகளின் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் நிகழ்வையே, நீரிழிவு நிவாரணம் என்று வரையறுக்கிறோம்.

இந்தியாவில் உள்ள நீரிழிவு நோயாளிகளில், 90 சதவீதம் பேருக்கு, இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு உள்ளது. நீரிழிவு நோய்ப்பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? குடும்ப வரலாறு, ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், மன அழுத்த பாதிப்பு, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துதல், மதுப்பழக்கம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்த நிலையிலான வாழ்க்கைமுறை, உடலில் இன்சுலின் சுரப்பில் மாறுபாடுகள் உள்ளிட்ட நிகழ்வுகளால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதேநிலைத் தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், அது நீரிழிவுப்பாதிப்பாக உருவெடுக்கிறது. நீரிழிவு நோய்ப்பாதிப்பிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது உடலின் முக்கிய உறுப்புகளை மட்டுமல்லாது, கண்பார்வையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

உறக்கமின்மைப் பாதிப்பானது, இன்சுலின் ஹார்மோனின் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. போதிய உறக்கம் இல்லாத நிகழ்வானது, நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கச் செய்வதாக அமைந்து விடுகிறது. நீரிழிவு பாதிப்பு நோயாளிகள் மட்டுமல்லாது ஒவ்வொருவரும் இரவில் குறைந்தது 7 மணி நேரம் அவசியம் உறங்க வேண்டும்.

உறக்கம் – நீரிழிவுப் பாதிப்பிற்கு இடையேயான உறவு

இரண்டாம் வகை நீரிழிவு நோய்ப்பாதிப்பானது மிகவும் தனித்துவமானது ஆகும். இந்தப் பாதிப்பு நோயாளிகள், உறக்கம் தொடர்பான சிக்கல்களால் அவதிப்படுகின்றனர். போதிய அளவிலான உறக்கம் இல்லாத நிலையானது, பசி உணர்வில் மாற்றம், உடல் பருமன், சீரற்ற வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. சரியான உறக்கம் இல்லாதது, இன்சுலின் ஹார்மோன் சுரப்பில் மாறுபாடுகளை ஏற்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடுகின்றது.

தரமான உறக்கத்தின் முக்கியத்துவம்

ஒருவர்த் தினமும் 6 மணிநேரம் தான் உறங்குவாராம், ஆனால் அவர் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார். தினமும் 7 மணிநேரத்திற்கும் மேலாக உறங்கும் ஒருவர், அடிக்கடி நோய்ப்பாதிப்பினால் பாதிக்கப்படுகிறார் என்றால், அவர் உறங்குகிறார், ஆனால் தரமான உறக்கம் உறங்கவில்லை என்பதே இதன் பொருளாகும். நீங்கள் தினமும் 8 முதல் 10 மணிநேரம் உறங்கினாலும், நடு நடுவே முழித்துக் கொள்வீர்கள் என்றால், நீங்கள் நீரிழிவு நோய்ப்பாதிப்பால் பாதிக்கப்பட உள்ளீர்கள் என்று அர்த்தம். இதேநிலைத் தொடரும்பட்சத்தில், இன்சுலின் ஹார்மோன் சுரப்பில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் மாறுபாடுகள் உருவாகி, நீரிழிவுப் பாதிப்பாக உருமாறும். எனவே தரமான உறக்கத்தை நிர்வகிப்பது ஒன்றே, நீரிழிவுப்பாதிப்பிற்கான காரணமான இன்சுலின் ஹார்மோன் சுரப்பின் மாறுபாடுகளைத் தவிர்க்கும் வழி ஆகும்.

உறக்கமின்மை மற்றும் இன்சுலின் எதிர்ப்பு நிலை

உறக்கத்தில் மூச்சுத்திணறல் நிகழ்வு (OSA) மற்றும் உறக்க நிகழ்வில் கால்களில் ஏற்படும் அசவுகரிய உணர்வு (RLS) உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள், நீரிழிவு நோயாளிகளுக்கு, உறக்கமின்மையை ஏற்படுத்தும். இதில் வியத்தகு விசயம் என்னவெனில், நீரிழிவுப் பாதிப்பு இல்லாதவர்களுக்கும் உறக்கப் பாதிப்பு பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயாளிகளில் 25 சதவீதத்தினர், ஏதேனும் ஒரு வகையான சுவாசப் பாதிப்பு அல்லது OSA பாதிப்பினாலும், 20 சதவீதத்தினர், RLS அறிகுறிகளைக் கொண்டதாக உள்ளனர். போதிய அல்லது சரியான அளவிலான தரமான உறக்கம் இல்லாத நிலையானது, இன்சுலின் எதிர்ப்பு நிலையை ஏற்படுத்துவதோடு, மேலும் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுப்பதாக அமைகின்றது.

மேலும் வாசிக்க : உறக்க நிகழ்வின் மூலம் உடல் ஆரோக்கிய மேம்பாடு

இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடு மற்றும் உடலியல் கடிகாரம்

சர்காடியன் ரிதம் என்ற உடலியல் கடிகாரம் 24 மணிநேரச் சுழற்சியில் இயங்கும் உடல் மாற்றங்களின் தொகுப்பாகும்.இதன் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது சர்க்கரை வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இன்சுலின் ஹார்மோனின் செயல்பாட்டில் மாற்றம் நிகழும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதன்மூலம், இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பானது உருவாகிறது.

A woman taking an afternoon nap lying on her bed.

உறக்க நிலை மற்றும் ஹார்மோன் சமநிலை

போதுமான அளவிலான உறக்கம் இல்லாத நிகழ்வானது, ஹார்மோன் சுரப்பு நிகழ்வில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கின்றது. சரியான உறக்கம் இல்லாதது, உடல் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கின்றது. உறக்கமின்மைப் பாதிப்பால் அவதிப்படுபவர்கள்,அதிக அளவிலான உணவைச் சாப்பிடுபவர்களாக இருப்பர். இதன்காரணமாக, இன்சுலின் எதிர்ப்பு நிலையும் உருவாகிறது. இந்த நிலை, நீண்ட நாட்கள் நீடிக்கும் பட்சத்தில், அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகிறது. உறக்கமின்மை நிகழ்வானது, இன்சுலின் ஹார்மோனின் சுரப்பைக் குறைத்துவிடும். இதன்காரணமாக, கார்போஹைட்ரேட், குளுக்கோஸாக உடைக்கப்பட்டு, உடலினால் உறிஞ்சப்பட இயலாத சூழல் உருவாகின்றன. இது நீரிழிவு நோய் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன.

உறக்க நிகழ்விற்கும், இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பிற்கும் இடையேயான உறவு சிக்கலானது என்றபோதிலும் மிகவும் முக்கியமானது ஆகும். போதிய உறக்கமின்மை நீரிழிவுக்கு முக்கிய காரணம். உறக்கத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நீரிழிவைச் சிறப்பாக நிர்வகிக்கலாம்.இதன்மூலம், அந்நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்த முடியும்.

சிறந்த உறக்க நிகழ்வை மேம்படுத்தி, நீரிழிவுப் பாதிப்பின் தீவிரத்தைக் குறைத்து ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.