மனநல ஆரோக்கியத்திற்கான சரியான செயலி எது?
இன்றைய இயந்திரக்கதியிலான, அவசர உலகில் பெரும்பாலான செயல்பாடுகளுக்குச் செயலிகள் பேருதவி புரிகின்றன. உதாரணமாக, புதிய மொழிக் கற்றல் மற்றும் கடைசி நிமிடத்தில் பரிசுப்பொருள் வாங்குதல் போன்றவற்றிக்கு இவை உதவுகின்றன. இது இன்னும் ஒருபடி மேலே சென்று, மனநல ஆரோக்கியமும் செயலியின் மூலம் சாத்தியமாகி உள்ளது. நாம் இருக்கும் இடத்தில் இருந்தவாறே, செலவு குறைந்த வகையில், மனநல ஆரோக்கியத்தை முழுமையாகப் பெற, செயலிகள் பேருதவி புரிகின்றன.
மனநல ஆரோக்கியத்திற்கான செயலிகள், சிகிச்சைக்கான சாட்போட்கள், மனநல கண்காணிப்பு சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கவலை, மனச்சோர்வு மற்றும் மனநிலைக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இச்செயலிகள் பெரிதும் உதவுகின்றன. சந்தையில் பல்லாயிரக்கணக்கான செயலிகள் புழக்கத்தில் இருப்பினும், அதில் பலவற்றில் துல்லியத்தன்மை இல்லாததனால் அது இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. சிறந்த வகையிலான செயலிகளைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் சவாலான நிகழ்வாக உள்ளது. அதற்கான வழிமுறைகள் இங்கு வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
மனநல ஆரோக்கியத்திற்கான சிறந்த செயலியைத் தேர்ந்து எடுக்க விரும்புபவர்கள், கீழ்க்கண்ட வழிமுறைகளை அறிந்துகொள்வது அவசியமாகும்.
நம்பகத்தன்மை
ஆராய்ச்சி மற்றும் ஆய்வு முடிவுகளால், முழுமையாகக் காப்புரிமைப் பெறப்பட்ட செயலிகளைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவாலான நிகழ்வு ஆகும். சில செயலிகள், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் செயல்திறன் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டு இருந்தாலும், அவை வணிக நோக்கில் புழக்கத்தில் இல்லை. செயலிகளின் நம்பகத்தன்மையைப் பறைசாற்றும் பொருட்டு, அந்தச் செயலியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு
நீங்கள் மனநல ஆரோக்கியம் சார்ந்த சிறந்த செயலியைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டு இருப்பின், முதலில் கவனிக்க வேண்டியது செயலியின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சத்தைத் தான் ஆகும். நீங்கள் ஒரு செயலியைப் பயன்படுத்துவதற்கு முன்னர், அது எத்தகைய விவரங்களைக் கேட்கிறது?, அது உங்கள் இருப்பிடத்தை அறிந்துகொள்ள விழைகிறதா? நீங்கள் அளிக்கும் தரவுகள் கையாளப்படும் விதம் குறித்தான தனியுரிமைக் கொள்கையை அது வழங்குகிறதா? உள்ளிட்டவைகளை உறுதிசெய்துகொள்வது முக்கியம் ஆகும். நீங்கள் அளிக்கும் தரவுகளைப் பாதுகாப்பாகக் கையாள, சிறந்த தனியுரிமைக் கொள்கைக் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். சில செயலிகள், நீங்கள் வழங்கும் தரவுகளை, எவ்விடத்திலும் சேகரித்து வைப்பதில்லை, இதன்மூலம், உங்கள் தனியுரிமைப் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு முறை இந்தச் செயலியைப் பயன்படுத்தும்போதும், நீங்கள் உங்கள் தரவுகளை வழங்க வேண்டி இருக்கும்.
சிகிச்சையாளரிடம் எதையும் மறைக்காதீர்கள்
மனநல ஆரோக்கியம் தொடர்பான செயலியை நீங்கள் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால், அதுகுறித்த தகவல்களை, உங்கள் மனநல ஆலோசகர் அல்லது சிகிச்சை நிபுணரிடம் கட்டாயமாகத் தெரியப்படுத்த வேண்டும். இதன்மூலம், அவர்கள் உங்களுக்குச் செயலியின் அனுபவத்தை மேம்படுத்துவம் வகையிலான கருத்துகளை வழங்க இயலும்.
செலவினங்கள் மற்றும் சேவைகள்
மனநல ஆரோக்கியம் சார்ந்த செயலிகள், அவற்றின் விலைகள் மற்றும் சலுகைகளைப் பொறுத்து மக்களிடம் வரவேற்பு பெறுகின்றன. பெரும்பாலான செயலிகள், அதன் அடிப்படைச் சேவைகளைப் பயன்படுத்த எந்தவொரு கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. மேம்படுத்தப்பட்ட சேவைகளைப் பெற விரும்பினால் மட்டுமே, கட்டணம் செலுத்தினால் போதுமானது.
சாத்தியமான இலக்குகளை நிர்ணயிக்கவும்
மனநல ஆரோக்கியத்திற்கான சரியான செயலியைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல்படி, உங்கள் தேவை என்ன என்பதை அறிந்துகொள்வது தான் ஆகும். நீங்கள் உங்கள் மனநிலையைக் கண்காணிக்க விரும்புகிறீர்கள் என்றால், அதற்கான உணர்வு அட்டவணையைக் கொண்டு இருக்கிறீர்களா, இதுதொடர்பாக யாருடனாவது பேசுகிறீர்களா உள்ளிட்டவற்றிற்கு எதிர்வினையாற்றும் வகையில் உங்களைச் சிந்திக்கச் செய்யும் வகையிலான சாத்தியமான விருப்பங்களைத் தேர்வு செய்வது அவசியமாகும்.
நன்மைகளைக் கண்டறியவும்
மனநல ஆரோக்கியத்திற்கான செயலிகள் விலைக் குறைந்தது மற்றும் எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது என அதன் நன்மைகளைப் பட்டியலிட முடியும். இது பயனர்களுக்கு அளவில்லாத சேவைகளை வழங்குவது மட்டுமல்லாது. பல்வேறு சிக்கல்களையும் தன்னடகத்தே கொண்டு உள்ளது. செயலிகள் வழங்கும் சேவைகளைப் பார்த்து, உங்களுக்கு அதில் எது தேவையானதோ அதைச் சரிபார்த்து, தேர்வு செய்துகொள்வது உங்கள் கடமை ஆகும்.
பயனர் அனுபவங்கள்
இது செயலியைப் பயன்படுத்துவதற்கான ஒட்டுமொத்த அனுபவம் என்று வரையறுக்கப்படுகிறது. இது UX என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது. நீங்கள் செயலியைச் சுவாரஸ்யமாகப் பயன்படுத்தும் போதிலும் மற்றும் மீண்டும் மீண்டும் செயலியை ஈடுபாட்டுடன் பயன்படுத்தும் விதத்தை, இது குறிக்கிறது. இதற்கு முன்னர் இந்தச் செயலியைப் பயன்படுத்தியவர்களின் கருத்துகளையும்,அவர்கள் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். இதன்மூலம் செயலியின் செயல்திறனை நாம் அறிய இயலும். இதன்மூலம்,நாம் விரும்பும் சேவை அதில் இருப்பின்,அதை நாம் சரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
மேலும் வாசிக்க : உணவில் அத்தியாவசிய வைட்டமின்கள் இருப்பதன் அவசியம்
இது அனைவருக்கும் ஒரே பலனைத் தருவதில்லை
மனநல ஆரோக்கியம் சார்ந்த செயலிகள் சிறந்தவை என்றபோதிலும், அவை அனைவருக்கும் ஒரேமாதிரியான பலனைத் தருவது இல்லை. சிகிச்சைமுறைகளைப் போன்று, இது நபருக்கு நபர் வேறுபடுகின்றன.
செயலிகள் தொழில்முறைச் சிகிச்சைக்கு மாற்று அல்ல
செயலிகள் என்பவை, நீங்கள் டைப் செய்தோ அல்லது உரையாடியோ கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலான கணினிமயமாக்கப்பட்ட சாதனம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. செயலி பயன்படுத்துதல் என்பது, தனிமனிதனின் தொடுதலுக்கு ஒருகாலத்திலும் ஈடு ஆக முடியாது.
தொழில்முறைச் சிகிச்சையுடன் இணைந்து செயல்பட வேண்டும்
செயலிகள், சுய உதவி நடவடிக்கைகளுக்காகப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இது உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. பெரும்பாலான தொழில் வல்லுநர்கள், தங்களின் சிகிச்சைக்குத் துணையாக, செயலிகளையும் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட விசயங்களைக் கவனத்தில் கொண்டு, மனநல ஆரோக்கியத்திற்கான சரியான செயலியைத் தேர்ந்தெடுத்து, மனநல ஆரோக்கியம் பெற்று, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீராக…