உணவில் அத்தியாவசிய வைட்டமின்கள் இருப்பதன் அவசியம்
இன்றைய இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டினாலும், வைட்டமின்களின் முக்கியத்துவம் குறித்து பெரும்பாலானோர் அறியாதவர்களாக உள்ளனர்.வாழ்க்கைமுறைக் காரணிகள் மற்றும் விருப்பமான உணவுத்தேர்வுகள் உள்ளிட்டவைகளும், ஒருவரின் உணவுமுறையில் இருந்து, வைட்டமின்களை ஒதுக்கி வைக்கக் காரணமாக அமைந்து விடுகின்றன. இதன்காரணமாக, வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புகளில் சிக்குகின்றனர். இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க, நமது உணவுமுறையில், சரியான வைட்டமின்களை உரிய அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வைட்டமின் சப்ளிமெண்ட்களை யார் எடுத்துக் கொள்ள வேண்டும்?
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உணவு உட்கொள்ளலைப் பூர்த்தி செய்வதற்கும், வைட்டமின் சப்ளிமெண்டுகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இது கூடுதல் உணவு என்பதை மனதில் வைத்துக் கொள்வது நல்லது. சப்ளிமெண்டுகள் எனப்படுபவை, நமது உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறையைச் சரிசெய்ய உதவுபவை ஆகும். சீரான உணவுமுறையில் காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், நல்ல கொழுப்புகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கும்.
உங்கள் உடலுக்கு வைட்டமின் சப்ளிமெண்ட்கள் தேவைப்படுவதற்கான அறிகுறிகள்
உங்கள் உடலின் செயல்பாடுகளுக்கு, பல்வேறு வகையான நுண்ணூட்ட சத்துகள் பேருதவி புரிகின்றன. இதில் வைட்டமின் பற்றாக்குறை ஏற்படும் போது, முடி உதிர்தல், எளிதில் உடையக்கூடிய நகங்கள், உடல் பலவீனம்,சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகின்றன. இதற்குத் தகுந்த வைட்டமின் சப்ளிமெண்ட்களைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகிறது.
வைட்டமின் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனைச் சரிசெய்யும் வழிமுறைகளை விரிவாகக் காண்போம்…
முடி உதிர்தல் மற்றும் எளிதில் உடையக்கூடிய நகங்கள்
வைட்டமின் A
கரோட்டினாய்டுகள் மற்றும் ரெட்டினாய்டுகள் போன்றவை, வைட்டமின் Aயின் இரண்டு வடிவங்கள் ஆகும். இவை இரண்டும், கல்லீரலில் ரெட்டினாலாக மாற்றப்படுகின்றன. வைட்டமின் A, தோலின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சியைப் பராமரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
வைட்டமின் B
வைட்டமின் B, முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் என்று பெரும்பாலானோர் அறிந்து உள்ளனர். ஆனால், வைட்டமின் B தோல் பராமரிப்பிலும் முக்கியப்பங்கை வகிப்பது பெரும்பாலானோர் அறிந்திருப்பது இல்லை. முடி உதிர்தல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு, வைட்டமின் B2 எனப்படும் ரைபோஃபிளேவின், வைட்டமின் B7 எனப்படும் பயோட்டின், வைட்டமின் B9 எனப்படும் ஃபோலேட் மற்றும் வைட்டமின் B12 உள்ள்ளிட்டவை, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.
வைட்டமின் C
தோல், முடி, நகங்கள் என உடலின் பல்வேறு பகுதிகளில் வைட்டமின் C காணப்படுகிறது. இந்த அத்தியாவசிய வைட்டமின், உடல் ஆரோக்கியத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிப்பதோடு, கொலாஜன் உற்பத்திக்கும் இன்றியமையாததாக உள்ளது.
செலேனியம்
செலேனியம், உடல் செல்களைப் ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது. இது முடி, தோல், நகங்கள் மந்தநிலை மற்றும் பலவீனம் அடைவதைத் தடுக்கிறது.
அடிக்கடி நோய்வாய்ப்படுதல்
நோய் எதிர்ப்பு நிகழ்வில், பல்வேறு வைட்டமின்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்த வைட்டமின்களின் இருப்பை, நமது உடலில் குறையாமல் பார்த்துக் கொண்டாலே, உடல் ஆரோக்கியத்தைச் சாத்தியமாக்கி விடலாம்.
வைட்டமின் C
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலைக் காப்பதற்கும், வைட்டமின் C பேருதவி புரிகிறது.
வைட்டமின் D
நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டை மேம்படுத்துவதில் இன்றியமையாததாக உள்ள வைட்டமின் D உள்ளது. இந்த வைட்டமின் பற்றாக்குறை நிகழும்போது, அது உடலின் பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துகிறது.
கால்சியம்
உங்கள் தோலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருப்பின், அது மெதுவாகக் குணம் அடைவதாக உணரும்பட்சத்தில், உங்களுக்குக் கால்சியம் சத்து குறைபாடு இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
சோர்வு மற்றும் பலவீனம்
இரும்புச்சத்து
சோர்வு மற்றும் பலவீனம் உள்ளிட்டவை, இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்பட்டதன் முதல் அறிகுறியாகும். உடலில் உள்ள செல்களுக்குப் போதிய அளவிலான ஆக்சிஜன் செல்லாதபோது இந்தச் சோர்வு நிலையானது உணரப்படுகிறது. இந்தச் சோர்வு நிலையைப் போக்குவதில், இரும்புச்சத்து முக்கியப்பங்கு வகிக்கிறது. சைவ உணவினர், மாதவிடாய் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
வைட்டமின் B12
சோர்வாக உணர்தல், உடல் பலவீனம் உள்ளிட்டவை, வைட்டமின் B12 குறைபாட்டின் முதன்மையான அறிகுறிகள் ஆகும். இந்தக் குறைபாடு, இளைஞர்களைக் காட்டிலும், வயதானவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. சைவ உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள், தங்களின் உணவுமுறையோடு, வளர்சிதை மாற்ற வீதத்தைத் துரிதப்படுத்த, வைட்டமின் B12 சபளிமெண்ட்டையும் எடுத்துக்கொள்வது நலம்பயக்கும்.
மேலும் வாசிக்க : உடலில் கொழுப்பு கூடியிருச்சா? – இதை டிரைப் பண்ணுங்க!
உடல் எடையைக் குறைக்கக் கடும்பிரயத்தனம் மேற்கொள்பவர்கள்
வைட்டமின் சப்ளிமெண்ட்களை மட்டும் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம், உடல் எடைக் குறையும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
வைட்டமின் D
வைட்டமின் D குறைபாடானது, தேவையற்ற உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், வைட்டமின் D சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது நலம்பயக்கும்.
கால்சியம்
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு, கால்சியம் முக்கியப்பங்கு வகிக்கிறது. வைட்டமின் D மற்றும் கால்சியம், உடலின் வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்துவது மட்டுமல்லாது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவும். இது உடல் எடைக் குறைப்பிற்கும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
உடல் ஆரோக்கிய நிகழ்விற்கு, வைட்டமின்களின் பங்கு அளப்பரியது ஆகும். வைட்டமின்கள், உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ற வகையிலான சிக்னல்களை வெளிப்படுத்த உதவுவதுடன், அதற்கான சிகிச்சை முறைகளைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவுகிறது. உணவுமுறையுடன் தேவையான வைட்டமின் சப்ளிமெண்ட்களைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
வைட்டமின் குறைபாட்டை, அதற்குரிய சப்ளிமெண்ட்களின் உதவியுடன் கட்டுப்படுத்தி, அதன் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நல்வாழ்க்கை வாழ்வோமாக…