கொழுப்பு தொடர்பான கட்டுக்கதைகளை அறிவோமா?
மனித உடலில் காணப்படும் மெழுகு போன்ற பொருளே, கொழுப்பு ஆகும். இது உடல் முழுவதிலும் உள்ள ரத்த செல்களில் வியாபித்து உள்ளது. கல்லீரலில் உற்பத்தியாகும், இந்தக் கொழுப்பானது, உணவு செரிமான நிகழ்வில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. உடலில் கொழுப்பு அதிகரித்தால், ரத்தக்குழாய்களில் அடைப்புகள் உருவாகி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.உடலில் அதிகக் கொழுப்பு படிதலை நீண்ட நாட்களாகக் கவனிக்காமல் இருக்கும்பட்சத்தில், அது உயிருக்கும் பேராபத்தாக அமைந்து விடுகிறது.
கொழுப்பு குறித்த எதிர்மறையான கருத்துகள் மிக அதிகமாக உள்ள நிலையில், அவை அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதிகக் கொழுப்பு படிவதன் மூலம், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது உண்மைதான் என்றபோதிலும், கொழுப்பு குறித்த கட்டுக்கதைகள் அதிகம் உலாவிவருகின்றன. அதன் உண்மைத்தன்மையை இங்கு ஆராய்வோம்.
கட்டுக்கதை
உணவின் மூலமாகவே, உடலுக்குக் கொழுப்பு கிடைக்கிறது.
உண்மை
கல்லீரலின் குறிப்பிட்ட பகுதியிலேயே, கொழுப்பானது உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தக்கொழுப்பின் உதவியாலேயே, ஹார்மோன்கள் சுரப்பு நடைபெற்று, நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. சிறிய அளவு மட்டுமே, உணவின் மூலம் பெறப்படுகின்றன.
கட்டுக்கதை
உங்களுக்குக் கொழுப்புப் பாதிப்பு வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் தொடரும்.
உண்மை
உடலின் கொழுப்பு அளவைச் சீரிய இடைவெளிகளில் கண்காணித்து வருவது மற்றும் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
கட்டுக்கதை
கொழுப்புப் பாதிப்பிற்கு மருந்துகள் இல்லை, அது தானாகவே சரிசெய்து கொள்ளும்.
உண்மை
நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் கொண்டவர்கள், உடனடியாக அதற்கென உள்ள பயிற்சி பெற்ற நிபுணர்களை அணுகி தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நல்லது. மற்றவர்களின் பேச்சை நம்பி, அபாயகரமான ரிஸ்க்களைத் தவிர்ப்பது நல்லது.
கட்டுக்கதை
கொழுப்பு பாதிப்பு எல்லோருக்கும் பொதுவானது ஆகும்.
உண்மை
இது முற்றிலும் தவறான கருத்து ஆகும். குடும்ப வரலாறு உள்ளவர்கள் கொழுப்பு பாதிப்பு குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.மாதவிடாய் சுழற்சி நடைபெறும் பெண்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கு, அதிகக் கொழுப்பானது வெவ்வேறு விதமான பாதிப்புகளைத் தருவதாக உள்ளது. பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தே, மருத்துவர் அதற்கான சிகிச்சையை முடிவு செய்வார்.
கட்டுக்கதை
அதிகச் சத்துள்ள உணவு வகைகள், போதிய உடற்பயிற்சி இல்லாதது, அதிகக் கொழுப்பு படிதலுக்குக் காரணமாக உள்ளது.
உண்மை
உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது ஆகும்.புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம், கொழுப்புப் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன.
கட்டுக்கதை
40 வயதுக்கு உட்பட்டவர்கள், கொழுப்பு சோதனைச் செய்துகொள்ள வேண்டியது இல்லை.
உண்மை
புகைப்பழக்கம், மதுப்பழக்கம், ஹார்மோன் மாற்றம் உள்ளவர்கள், வயது மற்றும் உடல் நிலை எப்படி இருந்தாலும், அவ்வப்போது கொழுப்பு பரிசோதனைச் செய்வது நல்லது.
கட்டுக்கதை
உடல் பருமன் கொண்டவர்கள் அதிகளவில் கொழுப்புப் பாதிப்பிற்கு
உள்ளாகின்றனர்.
உண்மை
பெரும்பாலானோர் உடல் ஒல்லியாக இருப்பவர்களைக் காட்டிலும், உடல் பருமன் கொண்டவர்களையே, கொழுப்புப் பாதிப்பு அதிகளவில் இருக்கும் என்று நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறான தகவல் ஆகும். அதிகச் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை, புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் கொண்டவர்கள் எந்த வயதினராக இருப்பினும், அவர்களது உடல் எடை எந்த அளவில் இருந்தாலும், கொழுப்புப் பாதிப்பிற்கு உட்படுவர்.
கட்டுக்கதை
ஆண்களுக்கு மட்டுமே அதிகப் பாதிப்பு
உண்மை
வயது, பாலினம், உடல் எடை உள்ளிட்ட வேறுபாடுகளின் இன்றி, அவர்களின் மரபணு மற்றும் தினசரி பழக்கவழக்கங்களைச் சார்ந்து, கொழுப்பு பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் இந்த வகையில் சிறிது அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் மாதவிடாய் சுழற்சி நிலையை அடைந்தவுடன், அவர்களின் உடல் நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இதில் ஹார்மோன் சுரப்பும் அடங்கும். இதன்காரணமாக, அவர்களது உடலில் நல்ல கொழுப்பின் விகிதம் சரிவடைந்து, கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இது ரத்த குழாய்களில் அடைப்பினை ஏற்படுத்தி இதய நோய்கள், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்குக் காரணமாக அமைகின்றன.
மேலும் வாசிக்க : இரத்த அழுத்த அளவுகள் தெரிவிப்பது என்ன?
கட்டுக்கதை
வயதான ஆண்களுக்கு மட்டுமே அதிகப் பாதிப்பு
உண்மை
6 முதல் 19 வயதிற்குட்பட்டவர்களில் 7 சதவீதத்தினருக்கு, உடலில் அதிகக் கொழுப்பு அளவு இருக்கும். ஆரோக்கியமற்ற உணவுமுறை, அதீத உடல் எடை, இதய நோய்ப் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளைக் கொண்ட குடும்ப வரலாறு கொண்டவர்களுக்கு, பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு, 2 வயதில் இருந்தே, கொழுப்புப் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
கொழுப்பு தொடர்பான கட்டுக்கதைகளைப் புறக்கணித்து, சரியான கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றி, நல்வாழ்க்கை வாழ்வோமாக…