இந்தியாவில் மரபணு ஆலோசனைச் சேவை

மருத்துவத் துறையின் சிறப்புப் பிரிவான மரபணு ஆலோசனை, மருத்துவ நிலைமைகளில், மரபணு பங்களிப்பின் மருத்துவ, உளவியல், குடும்ப மற்றும் இனப்பெருக்கத் தாக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் குறித்த புரிதலை அறிய உதவுகிறது.

மரபணு ஆலோசனைப் பல்வேறு சூழ்நிலைகளில் உதவுகிறது. எடுத்துக்காட்டாக: பிறந்த குழந்தையின் மரபணுக் குறைபாடு, குடும்பத்தில் புற்றுநோய் வரலாறு, டவுன் சிண்ட்ரோம் சோதனை முடிவுகள், மற்றும் மன இறுக்கப் பாதிப்பு கண்டறியப்பட்ட குழந்தைகள்.மருத்துவ அமைப்பில், மரபணு ஆலோசனைச் சிறப்பான சேவைகளை வழங்குவதன் மூலம், விலைமதிப்பு மிக்கதாக விளங்குகிறது.

தனிநபர்களுக்கு, மருத்துவப் பாதிப்பு சூழ்நிலைகளில் ஏற்படும் உணர்ச்சிகள் மற்றும் அறிவியல் சார்ந்தச் சிக்கல்களைக் களையவும், நோயாளிகளின் உடல்நிலைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையிலான முடிவுகளை மேற்கொள்ள மரபணு ஆலோசகர்கள் உதவிபுரிகின்றனர்.

எவ்வாறு தயாராவது?

உடல்நலக் குறைபாட்டிற்காக, வழக்கமான மருத்துவரைச் சந்திக்கும் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது, மரபணு ஆலோசனைமுறையானது சற்று வித்தியாசமானது ஆகும். இந்த ஆலோசனை நிகழ்வானது, 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் கால அளவு கொண்டதாக இருக்கும். இந்த நிகழ்வின்போது, நமக்கு எழும் சந்தேகங்களை, மருத்துவரிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வதற்கு இது வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. குடும்ப வரலாறு குறித்து முன்னரே நீங்கள் அறிந்திருக்கும்பட்சத்தில், மரபணு ஆலோசகருடனான சந்திப்பின் போது, கூடுதல் விசயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலும்.

மருத்துவம் சார்ந்தப் பதிவேடுகள்

மருத்துவம் சார்ந்தப் பதிவேடுகளில், மருத்துவர்கள் அளிக்கும் குறிப்புகள் மற்றும் நோய்ப் பாதிப்புகள் தொடர்பான அறிக்கைகள் இடம்பெறும். நோய்க்கண்டறிதலை உறுதிப்படுத்த மற்றும் சந்தேகத்திற்கு உரிய நோய்க்கண்டறிதலை, நிராகரிக்க இந்தப் பதிவேடுகள் உதவுகின்றன. மரபணு மதிப்பீடு அல்லது மரபணுச் சோதனைக்கு மருத்துவப் பதிவேடுகள் பேருதவி புரிகின்றன.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் உடல்நலம்

நோய்க்கண்டறிதல் அல்லது இறப்பு நிகழ்வில் குறிப்பிட்ட நபரின் வயது, இறப்பிற்கான காரணம் உள்ளிட்டவைக் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்தப் பட்டியலில், நோயாளியின் குடும்பத்தின் இருபுறமும் ரத்த சொந்தத்தினர் மட்டுமே இடம்பெற வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களிடையே காணப்படும் முக்கிய நோய்ப்பாதிப்புகள்

இதய நோய், மனநிலைப் பாதிப்பு, ஏதாவது ஒரு வகைப் புற்றுநோய், அறிந்து கொள்ளப்பட்ட மரபணுக் குறைபாடுகள், பிறப்புக் குறைபாடுகள், மனநிலைச் சீர்குலைவு, திடீர் மரணங்கள், கருச்சிதைவு அல்லது குழந்தைப் பிறத்தலில் பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பின், இதுகுறித்த முழுமையான விவரங்களை, மருத்துவர்ச் சந்திப்பிற்கு முன் தயார்ச் செய்துக்கொள்வது நல்லது.

குடும்ப வரலாற்றுப் பின்னணியும் இங்கு அவசியமான ஒன்றாக அமைந்து உள்ளது. இந்த விவகாரத்தில், மரபணு ஆலோசகர்கள், தங்களுக்குக் கிடைக்கக்கூடிய தகவல்களைக் கொண்டு, சோதனையில் கிடைக்கும் முடிவுகள், நோயாளி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தில் ஏற்படும் அபாய வாய்ப்புகள், அதன் தாக்கங்கள் குறித்து உணர இயலும்.

பயன்பாடுகள்

மரபணு கலந்தாய்வானது, மக்களின் பல்வேறு நிலைகளில், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதுதொடர்பான தெளிவைப் பெற உதவுகிறது.

திருமணத்திற்கு முந்தைய நிலை

குடும்ப உறுப்பினர்களிடையே, மரபணுக் குறைபாடு இருப்பதற்கான சூழல்

சொந்த, பந்தங்களிலேயே திருமணத்தை முடித்துக் கொள்ளுதல்

வயது முதிர்வு நிலையில் ஏற்படும் ஹண்டிங்டன், மயோடோனிக் டிஸ்டிராபி உள்ளிட்ட மரபணுக் குறைபாடுகள்

மரபணு நிலைகளைக் கண்டறிவதற்கான முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள்.

கருவுறுதலுக்கு முந்தைய நிலை

அசாதாரணமான வளர்ச்சி, இதய முரண்பாடுகளுடனான குழந்தைப் பிறப்பு, கருவிலேயே குழந்தை இறப்பு

வளர்சிதை மாற்ற பிரச்சினைகள், நரம்பியல் சார்ந்தப் பிரச்சினைகள்

தலசீமியா, குரோமோசோம் மறுசீரமைப்பு, குடும்ப உறுப்பினர்களிடையே மரபணுப் பாதிப்பு இருத்தல்

மீண்டும் மீண்டும் கர்ப்பம் இழப்பு உள்ளிட்ட மகப்பேறு சார்ந்த குறைபாடுகள்

Close up view of a doctor or psychiatrist holding the hands of a stressful pregnant woman sitting on a sofa.

பிரசவத்திற்கு முந்தைய நிலை

குடும்ப உறுப்பினர்களிடையே கண்டறியப்பட்ட அல்லது கண்டறியப்படாத மரபணுக் குறைபாடுகள்

கருவிலேயே குழந்தை இறப்பு

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சோதனைகளில் முரண்பாடுகள் கண்டறிதல்

மேலும் வாசிக்க : நோய்ப்பாதிப்பைத் தடுக்க உதவும் மரபணுச் சோதனைகள்

குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்கான நலன்

குரோமோசோம் எண்ணிக்கைகளில் நிகழும் அசாதாரணமான நிலை, வளர்சிதை மாற்ற குறைபாடுகள், வளர்ச்சி நிகழ்வுகளில் தாமதம்

எலும்பு அமைப்பில் அசாதாரணம்

ஆட்டிசம் குறைபாடு

அறிவுசார்க் குறைபாடுகள்

நரம்பியல் குறைபாடுகளுடனான குழந்தைகள் பிறப்பு

மரபணு ஆலோசகர்கள், நோயாளிகளின் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, மரபணுத் தகவல்தொடர்பு சேவைகளையும் வழங்கி வருகின்றனர். இந்தியாவில் மரபணு ஆலோசனைகளின் தேவை, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இவர்கள் மரபணு அறிவியலின் விழிப்புணர்விற்கு உதவுவதோடு மட்டுமல்லாது, சமூகத்தில், மரபணு அணுகுமுறையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கும் உரிய பங்களிப்பையும் மேற்கொள்ள இயலும்.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.