இந்தியாவில் காணப்படும் மனநலம் சார்ந்தப் பிரச்சினைகள்
மனிதர்களின் சமூக நல்வாழ்க்கை, உணர்ச்சி மற்றும் உளவியல் அம்சங்களை உள்ளடக்கியதே, மன ஆரோக்கியம் என்று வரையறுக்கப்படுகிறது. மன ஆரோக்கிய நிகழ்வானது, ஒருவர் மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுகின்றார். மற்றவர்களுடனான அவரது உறவுநிலை, அவரின் தேர்வுகள் எந்தவிதத்தில் உள்ளன என்பதைத் தீர்மானிக்கின்றது. தனிப்பட்ட உளவியல் காரணிகள், உணர்வுகள் உள்ளிட்டவை, மக்களை மனரீதியாகப் பாதிப்படைய வைக்கும் காரணிகளாக வரையறுக்கப்படுகிறது.
புள்ளிவிபரங்களின்படி, உலகளவில் ஐந்தில் ஒருவர் மனநலப் பாதிப்பால் அவதிப்படுகிறார்.14 வயதில் 50 சதவீத அளவில் இருக்கும் இந்த மனநலக் குறைபாடுகள், 24ஆம் வயதில், 75 சதவீதத்தை அடைந்து விடுகின்றன. உலக அளவில், 970 மில்லியன் அளவிலான மக்கள், ஏதாவதொரு மனநல பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் 14.3 சதவீதம் அதாவது 8 மில்லியன் மக்கள், மனநலப் பாதிப்பால் மரணம் அடைந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று, இந்த நிலைமையை மேலும் மோசமானதாக ஆக்கியது. மனப்பதட்டம், மன இறுக்கம் சார்ந்தக் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கைப் பலமடங்கு அதிகரித்தது. மன இறுக்க அறிகுறிகள் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 193 மில்லியன் என்ற அளவில் இருந்து 28 சதவீதம் அதிகரித்து 246 மில்லியன் என்ற அளவிலும், மனச்சோர்வு அல்லது மனப்பதட்ட பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 298 மில்லியன் என்ற அளவிலிருந்து 25 சதவீதம் அதிகரித்து 374 மில்லியன் என்ற அளவை எட்டியுள்ளது.
இந்தியாவில் சுமார் 60-70 மில்லியன் மக்கள் மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் ஆண்டுதோறும் 2.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர்த் தற்கொலைச் செய்துக் வருவதனால், சர்வதேச அளவில் தற்கொலைகளின் தலைநகரமாக, விளங்கி வருகிறது. இந்தியாவில், 1 லட்சம் மக்களுக்கு 10.9 சதவீத மக்கள், தற்கொலை செய்துக் கொள்வதாக, உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் வாசிக்க : தனிப்பட்ட உடற்பயிற்சித் திட்டத்தை உருவாக்குவோமா?
மனநலக் குறைபாடுகளின் வகைகள்
மனக்கவலைகள் சார்ந்தக் குறைபாடுகள்
மன இறுக்கம்
மன உளைச்சலுக்குப் பிந்தையச் சீர்கேடு
மனச்சிதைவு பாதிப்பு
உணவுமுறையில் ஏற்படும் சிக்கல்கள்
நடத்தைகளில் ஏற்படும் சீர்குலைவு
நரம்பியல் சார்ந்தக் குறைபாடுகள்
உள்ளிட்டவை, மனநலக் குறைபாடுகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தக் குறைபாட்டைக் குணப்படுத்தவல்ல மருத்துவர்களின் எண்ணிக்கைப் போதுமான அளவில் இல்லை என்பதே கசப்பான உண்மை.
இந்தியாவில் மனநலப் பாதிப்புகளை எதிர்கொள்வதில் உள்ள தடங்கல்கள்
இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 0.3% உளவியல் நிபுணர்கள், 0.07% உடல் செயலியல் நிபுணர்கள், மற்றும் 0.07% சமூகப் பணியாளர்கள் உள்ளனர்.வளர்ச்சி அடைந்த நாடுகளில், 1 லட்சம் மக்களுக்கு 6.6 சதவீத அளவிற்கு உளவியல் நிபுணர்கள் உள்ளனர். அதேபோன்று 1 லட்சம் மக்களுக்குச் சர்வதேச அளவில் 0.04 சதவீத அளவிற்கு மனநல சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள் உள்ள நிலையில், இந்தியாவில் 0.004 சதவீத அளவிற்கே உள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில், மனநலப் பாதிப்புகளை எதிர்கொள்வதில் நிறைய தடங்கல்கள் உள்ளன. மனநோய்ப் பாதிப்பை நிவர்த்தி செய்வதில் முக்கியத் தடைகளாக, அந்த நோய்ப் பாதித்தவரை, களங்கப்படுத்துதல் நிகழ்வு உள்ளது. இது தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. சிகிச்சைப் பெறுவதைத் தாமதப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவர்களை, சமூகத்திலிருந்து அவர்களை விலக்களித்து, அவர்களைத் தனிமைப்படுத்தலுக்கு உதவுகிறது.
மனநலக் குறைபாடுகளுக்கான சிகிச்சைகளுக்கு, நிதி விவகாரமே, மிகப்பெரிய சவாலாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மனநலம் சார்ந்த நிபுணர்கள் மற்றும் சேவைகள் இல்லாதது, மிகப்பெரிய சவாலாக உள்ளது. மனநல சிகிச்சையின் செயல்திறனைச் சந்தேகிக்கச் செய்வதோடு, இந்தச் சிகிச்சையானது பலன் அளிக்குமா என்ற நிச்சயத்தன்மை அற்ற நிலை நிலவுகிறது.
மனநலப்பாதிப்புகள் மற்றும் அதுதொடர்பான நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாத போது, அது நம் உறவுகளை மட்டுமல்லாது, அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் கடுமையாகப் பாதிக்கின்றன.
மனநலப் பாதிப்புகளுக்கான சிறந்தச் சேவைகளை, நாம் ஒவ்வொருவரும் பெறவும், இவ்வகைப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு இருக்கும் பாதிப்பைக் கொண்டு பாகுபாடு காட்டப்படக் கூடாது. மனநலப் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கும், மற்ற மனிதர்களைப் போல, மருத்துவ பராமரிப்புகளைப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது.
மனநலப் பாதிப்புகளுக்கு உரிய மருத்துவம் மேற்கொள்ளும் நிபுணர்களும், அவர்களுக்கு உரிய காலத்தில் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
மனநலப் பாதிப்பிற்கு உள்ளானவர்களும் மனிதர்கள் தான் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை, தேவையான நேரத்தில் வழங்கி இந்தியாவை, மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லாத நாடாக மாற்ற உறுதி ஏற்போமாக….