குறைபாடு நோய்கள் : அறிந்ததும் அறியாததும்
சர்வதேச அளவில், பொதுவான மற்றும் புறக்கணிக்கப்பட்ட மருத்துவ பாதிப்புகளில் முதன்மையானதாக, குறைபாடு நோய்கள் விளங்குகின்றன. அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் போதிய அளவு கிடைக்காததால் குறைபாடு நோய்கள் ஏற்படுகின்றன. இதில் வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவை அடங்கும். இந்த நோய்ப்பாதிப்பு தொடர்பான சரியான விழிப்புணர்வு இல்லாதது மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களினால், இந்தப் பாதிப்பு தற்போது பரந்து விரிந்து காணப்படுகிறது.
வைட்டமின் D, வைட்டமின் B12, வைட்டமின் B9 உள்ளிட்டவற்றின் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்களே, பெருமளவில் உள்ளன. இந்தியாவில் சுமார் 75 சதவீதம் பேரும், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 92 சதவீதம் மக்கள், வைட்டமின் குறைபாடு பாதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியர்களில் சுமார் 80 சதவீதத்தினர் வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்ப்பிணிகளில். இதன் அளவு 84 சதவீதமாக உள்ளது. 21 சதவீதம் பேர் வைட்டமின் B12 குறைபாட்டிற்கும், 15 சதவீதத்தினர் வைட்டமின் B9 குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறைபாடு என்றால் என்ன?
உடல் செல்களின் வளர்ச்சிக்குப் பல்வேறு சத்துக்கள் தேவைப்படுகின்றன. வைட்டமின்கள், தாது உப்புகள், புரதங்கள், கார்போஹைட்ரேட் போன்றவைப் போதுமான அளவு கிடைக்காத போது, உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.அத்தியாவசிய சத்துகளின் பற்றாக்குறைக் காரணமாகவே, இந்தக் குறைபாடு நோய்ப்பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்தக் குறைபாடு நோய்கள்,லேசான பாதிப்பு முதல் கடுமையான பாதிப்புகள் வரை ஏற்படுத்துகின்றன. நிரந்தரப் பார்வை இழப்பு, இதய நோய், உறுப்புகள் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள், குறைபாடு நோய்களாக வரையறுக்கப்படுகின்றன.
வைட்டமின் குறைபாடு நோய்கள்
உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாததாக விளங்கும் வைட்டமின்கள் போதிய அளவு கிடைக்காததனால், வைட்டமின் குறைபாட்டு நோய்ப்பாதிப்புகள் உருவாகின்றன.
மாலைக்கண் நோய் மற்றும் கெரோடாமலாசியா
வைட்டமின் A அல்லது ரெட்டினால் பற்றாக்குறையினால் ஏற்படுகின்றன.
அறிகுறிகள்
- மங்கலான பார்வை
- தோல் கறுத்துப்போதல்
- இரவுப்பார்வையில் தெளிவின்மை
பெரி பெரி நோய்
வைட்டமின் B1 அல்லது தையமின் பற்றாக்குறையினால் ஏற்படுகின்றன.
அறிகுறிகள்:
உடல் எடைக்குறைப்பு
காது கேட்கும் திறன் பாதிப்பு
கை, கால்களில் வலி உணர்வு
பலவீனம்
இரத்த சோகை மற்றும் கோண சிறு அழற்சி
வைட்டமின் B2 அல்லது ரிபோஃப்ளேவின் பற்றாக்குறையினால் ஏற்படுகின்றன.
அறிகுறிகள்:
- வாய்ப்பகுதியின் ஓரங்களில் அழற்சி
- உதடுகளில் வெடிப்புகள்
- தலைச்சுற்றல் உணர்வு
- தோல் வெளிறிப்போதல்
- பலவீனம்
பெல்லாக்ரா நோய்
வைட்டமின் B3 அல்லது நியாசின் பற்றாக்குறையினால் உண்டாகிறது.
அறிகுறிகள்:
தோல் அழற்சி
வயிற்றுப்போக்கு
டிமென்ஷியா
சிறுநீரக நோய்கள்
வைட்டமின் B6 பற்றாக்குறையினால் ஏற்படுகின்றன
அனீமியா மனச்சோர்வு
டெர்மாடைடிஸ் எனப்படும் தோல் அழற்சி
தீங்கு விளைவிக்கும் வகையிலான ரத்த சோகை, மெத்தில்மலோனிகேனீமியா
வைட்டமின் B12 பற்றாக்குறையினால் ஏற்படுகின்றன.
அறிகுறிகள்:
- தலைச்சுற்றல்
- தோல் வெளிறிப்போதல்
- பலவீனம்
- சோர்ந்து போதல்
ஸ்கர்வி நோய்
வைட்டமின் C அல்லது அஸ்கார்பிக் அமிலம் பற்றாக்குறையினால் ஏற்படுகின்றன.
அறிகுறிகள்:
- பல் ஈறுகளில் ரத்தக்கசிவு
- மூட்டு இணைப்புகளில் வீக்கம்
- தோல்களில் புள்ளிகள் தோன்றுதல்
ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோமலேசியா
வைட்டமின் D அல்லது கால்சிஃபெரால் பற்றாக்குறையினால் ஏற்படுகின்றன/
அறிகுறிகள்:
பற்களில் சிதைவு
எலும்புகள் பலவீனம் அடைதல்
பலவீனமான மூட்டு இணைப்புகள்
மோசமான இரத்த உறைதல் நோய்
வைட்டமின் K பற்றாக்குறையினால் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
- ஈறுகளில் ரத்தக்கசிவு
- மூக்கில் ரத்தம் வடிதல்
- கடுமையான மாதவிடாய் வலி உணர்வு
தாது உப்புகள் / மினரல்கள் குறைபாடு நோய்கள்
இரத்தசோகைப் பாதிப்பு
இரும்புச்சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
வெளிறிய தோல்
உடல் பலவீனம்
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக் குறைதல்
தலைச்சுற்றல்
காய்ட்டர் மற்றும் ஹைப்போதைரய்டிசம்
அயோடின் குறைபாட்டால் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
- மலச்சிக்கல்
- முகம் வீங்குதல்
- வறண்ட சருமம்
- உடல் எடைத் திடீரென அதிகரித்தல்
- தசைப்பகுதிகளில் வலி உணர்வு
ஹைப்போகால்சீமியா
கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
வழுக்கை
எளிதில் உடையும் வகையிலான நகங்கள்
கரடுமுரடான தோல் மற்றும் முடி
உடல் பலவீனம்
ஹைபோமெக்னீசீமியா
மெக்னீசியம் பற்றாக்குறையினால் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
- வாந்தி உணர்வு
- பசி இல்லாத நிலை
- கூச்ச உணர்வு
மேலும் வாசிக்க : உணர்ச்சிப்பூர்வ உணவுமுறையை அறிவோமா?
புரதங்கள் குறைபாடு நோய்கள்
குவாஷியோர்கர் நோய்
அறிகுறிகள்:
வயிறு வீங்குதல்
எதிலும் ஈடுபாடு இல்லாத நிலை
எரிச்சல் உணர்வு
கலோரிகள் குறைபாடு நோய்கள்
மராஸ்மஸ் நோய்
அறிகுறிகள்:
- தசைகளின் அளவில் மாற்றங்கள்
- ஹைபோடெர்மிக் கொழுப்பு இழப்பு
ஆபத்துக் காரணிகள்
கீழ்க்கண்ட நிலைகளில் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. இவர்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துப் பற்றாக்குறையினால் குறைபாடு நோய்கள் எளிதில் ஏற்படலாம்.
- கர்ப்பிணிகள்
- குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டும் பெண்கள்
- விடலைப் பருவத்தினர்
- வயதானவர்கள்
- ஆரோக்கியமற்ற உணவுமுறையை மேற்கொள்பவர்கள்
- மது மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்
- சிறுநீரக டயாலிசிஸ் பிரச்சினை உள்ளவர்கள்
- உடல் பருமன் கொண்டவர்கள்
- குடல் பிரச்சினைகளைக் கொண்டவர்கள்
- மாதவிடாய் சுழற்சி நிற்கும் நிலையில் உள்ள பெண்கள் உள்ளிட்டோருக்கு, இந்தக் குறைபாடு நோய்ப்பாதிப்புகள், அதீதப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகள்
குறைபாடு நோய்ப்பாதிப்புகளை, தோல், இரத்தம் மற்றும் சிறுநீர்ச் சோதனைகளின் மூலம் நோய்ப்பாதிப்புகளைக் கண்டறிய இயலும்.
எத்தகைய ஊட்டச்சத்துப் பற்றாக்குறை நிலவுகிறது என்பதை மருத்துவ நிபுணரின் உதவியுடன் கண்டறிந்து. அந்தக் குறைபாட்டைக் களைய வேண்டும்.
குறைபாடு நோய்களைத் தவிர்க்க
- இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
- உங்கள் உடல்நலம் குறித்த அறிக்கையை, ஊட்டச்சத்து நிபுணரிடம் காண்பித்து, அவர்ப் பரிந்துரைக்கும் வகையிலான உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
- தினசரி ஒருவேளை உணவாகப் பழங்களைச் சாப்பிடவும்.
- உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
குறைபாடு நோய்களின் மூலத்தைக் கண்டறிவோம். உரிய நேரத்தில் சரியான சிகிச்சையைப் பெற்று, பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோமாக…