உணர்ச்சிப்பூர்வ உணவுமுறையை அறிவோமா?
இன்றைய நிலையில், உடல் பசிக்காகச் சாப்பிடாமல் சிலர் உணர்ச்சிகளை அடக்க அல்லது அதிலிருந்து மனதைத் திசை மாற்ற சாப்பிடுகின்றனர். இந்த உணவுமுறையானது, உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறையாக வரையறுக்கப்படுகிறது. இந்த நடத்தையானது ஆரோக்கியமற்ற உணவுமுறைகள், உடல் எடை அதிகரிப்பு மற்றும் உணர்ச்சி சோகத்திற்கு வழிவகுக்கின்றன.
உணவுமுறையுடன் நேர்மறையான உறவை வளர்த்தல், ஆரோக்கியமான சமாளிக்கும் உத்திகளை உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளின் மூலம், உணர்ச்சிபூர்வமான உணவுமுறையில் இருந்து நாம் விடுபட இயலும். இந்தக் கட்டுரையில், உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறைக்கான காரணங்கள், அதன் பாதிப்புகள், அதைச் சமாளிப்பதற்கான உத்திகள் உள்ளிட்டவற்றை விரிவாகக் காண உள்ளோம்.
உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறை
உண்மையான பசி உணர்வைத் தவிர, வேறு உணர்வுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், உணவைச் சாப்பிடும் நிகழ்வே, உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த உணவுமுறையில், அதிகக் கலோரிகள் கொண்ட உணவு வகைகள், இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளே அதிகம் இடம்பெறுகின்றன. இந்த உணவு வகைகள், நீங்கள் தற்போது இருக்கும் எதிர்மறை உணர்வுகளில் இருந்து கவனச்சிதறலை உருவாக்கி, உங்களுக்குத் தற்காலிகமான ஆறுதலை வழங்குகின்றன. மன அழுத்தம், சலிப்பு, தனிமை உணர்வு, பதட்டம், சோகம் உள்ளிட்ட எதிர்மறை உணர்வுகளால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள், இந்த உணவுமுறையை நாடுகின்றனர். இந்த உணவுமுறைத் தற்காலிக ஆறுதலை மட்டுமே அளிக்கிறது. மேலும் இது குற்ற உணர்வு, அவமானம் போன்ற உணர்வுகளையும், ஆரோக்கியமற்ற நிலையையும் ஏற்படுத்துகிறது.
இது சாதாரண பசி உணர்வில் இருந்து வேறுபடுகிறது. வழக்கமான பசி உணர்வு என்பது படிப்படியாக நிகழும் நிகழ்வு ஆகும். இது உணவுவகைகளைச் சாப்பிட்டவுடன், திருப்தி உணர்வை ஏற்படுத்துவதுடன், முழுமையடைகிறது.
ஆனால் உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறையில், ஆறுதல் உணர்விற்காக, பசியைத் தூண்டுகிறது. இது பசி உணர்வைக் கட்டுப்படுத்துவதில்லை.
உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறைக்கான காரணங்கள்
உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறைக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளபோதிலும், மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் உள்ளிட்ட உளவியல் காரணிகள் முதன்மையானவைகளாக உள்ளன. தனிநபர்கள் சோக நிலையில் இருக்கும்போது, அவர்கள் அதிலிருந்து விடுபடவும், தற்காலிக ஆறுதலைப் பெறவும், உணவு புசிப்பதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். சலிப்பு மற்றும் தனிமை உணர்வில் இருப்பவர்களும், வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு, சாப்பிடத் துவங்குகின்றனர்.
சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் சார்ந்த காரணிகளால், உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறையானது பெரிதும் பாதிப்படைகின்றன. சுவையான உணவுகள், மகிழ்ச்சி நிறைந்த பண்டிகைகள் உள்ளிட்ட நிகழ்வுகள், உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறையை ஊக்குவிக்கிறது. இந்த உணவுமுறையானது, பெரும்பாலும் இளமைப்பருவத்திலேயே தோன்றுகின்றன. மேலும், இந்தச் சுழற்சியை நிறுத்துவது என்பது சவாலான நிகழ்வாக மாறி உள்ளது.
உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறையின் தாக்கங்கள்
கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கும், உளவியல் பிரச்சினைகளுக்கும் உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறை முக்கியக் காரணமாக அமைகிறது. இந்த உணவுமுறையின் உடனடி பாதிப்பாக, உடல் எடை அதிகரிப்பு நிகழ்வு உள்ளது. இந்த உணவுமுறையில் பெரும்பாலும் அதிகக் கலோரி கொண்ட உணவு வகைகளே இடம்பெற்று உள்ளன. இந்த உடல் எடை அதிகரிப்பு நிகழ்வானது, உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்பு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.
இந்த உணவுமுறையானது, உறவில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இது குற்ற உணர்வு, அவமானம், கட்டுப்பாடற்ற பசி உள்ளிட்ட உணர்வுகளை, மக்களிடையே ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வானது அவர்களின் சுயமரியாதையைக் குறைப்பதாகவும் அமைந்துவிடுகிறது.
மீள்வதற்கான உத்திகள்
உணவுகளுடன் நேர்மறையான உறவை வளர்த்தல் மற்றும் ஆரோக்கியமான சமாளிக்கும் வழிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றின் மூலம், உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறையில் இருந்து விடுபட முடியும். சில முதன்மையான மற்றும் பயனுள்ள உத்திகள் இங்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.
தூண்டுதல்களை அடையாளம் காணுதல்
உணர்ச்சிப்பூர்வமான உணவுமுறை நடத்தையைத் தூண்டும் வழிமுறைகளை அடையாளம் காண்பதே, இந்தப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கான முதன்மையான நடவடிக்கை ஆகும். நீங்கள் எப்போது, என்ன, ஏன் சாப்பிடுகிறீர்கள் என்ற விவரங்கள் அடங்கிய குறிப்பைப் பராமரிப்பதன் மூலம், அதைக் கண்காணிக்க இயலும்.
சமாளிக்கும் உத்திகளை உருவாக்குதல்
உணர்ச்சிகளைச் சமாளிக்க, உணவு வகைகளைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, அந்த உணர்வுகளில் இருந்து திசைதிருப்பும் வகையில் கவனச்சிதறல் மற்றும் தற்காலிக ஆறுதலை வழங்கும் விதமான மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடலாம். யோகா, நடைப்பயிற்சி போன்றவை மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்தும். தியானம், நண்பர்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழித்தல், புத்தகங்களை வாசித்தில் உள்ளிட்ட செயல்பாடுகளும், உங்களுக்கு நிவாரணத்தை அளிப்பனவையாக உள்ளன.
கவனத்துடன் சாப்பிடுதல்
கவனத்துடன் சாப்பிடுதல் வழிமுறையானது, உங்களை உணவு அனுபவத்தில் முழுக்கவனம் செலுத்த உதவும். இந்த நடைமுறையானது, உங்கள் உணவை முழுமையாகவும், மெதுவாகச் சாப்பிட வைக்கவும், உணவின் சுவையை ருசிப்பதற்கும் ஊக்குவிக்கிறது. இதன்மூலம், உணவுடன் நேர்மறையான உறவு மலருகிறது.
தொழில்முறை நிபுணரின் உதவி
உணவுமுறையானது, உங்களுக்கு நிர்வகிக்க மிகக் கடுமையானதாக இருப்பின், அதில் இருந்து மீள சிறந்த உளவியலாளர் அல்லது உணவியல் நிபுணரின் வழிகாட்டுதலின்படி செயல்படுவது நல்லது. CBT எனப்படும் அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சைமுறையானது, எதிர்மறைச் சிந்தனைகள் மற்றும் நடத்தைகளை அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாது, அதனை மாற்றவும் உதவுகிறது.
ஆதரவு அமைப்பை உருவாக்கவும்
உணர்வுப்பூர்வமான உணவுமுறையில் இருந்து மீள்வதற்கு, வலுவான ஆதரவு அமைப்பை உருவாக்குங்கள். உங்கள் இலக்குகளைப் புரிந்துகொண்டு, அதற்கு ஆதரவு அளிக்கும்வகையில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்திருங்கள். இதுபோன்ற சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு, மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும், பகிரப்பட்ட அனுபவங்களையும் பெற உதவுகிறது.
மேலும் வாசிக்க : ஆர்கானிக் உணவுகள் வாழ்க்கைமுறைக்குச் சரியான தேர்வா?
ஆரோக்கியமான உணவுமுறை
வழக்கமான உணவுமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் சத்தான உணவுத் தேர்வுகளைச் செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகள், உணர்வுப்பூர்வமான உணவுமுறையில் இருந்து மீள உதவுகிறது. சீரான இடைவெளிகளில், உணவை உட்கொள்வதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கலாம். தீவிரப் பசி உணர்வு தடுக்கப்படுகிறது.
உணர்ச்சி சிக்கல்களைப் புரிந்துகொள்ளுதல்
உணர்வுப்பூர்வமான உணவுமுறையானது, தீவிரமான உணர்ச்சிச் சிக்கல்களைக் குறிக்கிறது. இந்த அடிப்படைச் சிக்கல்களைக் கவனித்து நிவர்த்தி செய்வதன்மூலம், இந்த உணவுமுறையின் சுழற்சியை உடைக்க முடியும். உணர்ச்சி பாதிப்பின் மூலக் காரணங்களைப் புரிந்து கொள்வதற்கும், அதைச் சமாளிப்பதற்கான ஆரோக்கியமான வழிகளை உருவாக்குவதற்கும் உதவுகிறது.
உணர்வுப்பூர்வமான உணவுமுறைக்கான காரணங்கள், பாதிப்புகள், அதிலிருந்து மீள்வதற்கான உத்திகளை அறிந்துகொண்ட நீங்கள், முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…