பார்கின்சன் நோய்ப்பாதிப்பைக் குறைக்கும் உடற்பயிற்சிகள்
பார்கின்சன் நோய்ப்பாதிப்பு என்பது மூளையின் செயல்பாடுகள் தொடர்பான ஒரு நரம்பியல் பாதிப்பு ஆகும். இது பொதுவாக மூளையின் ஒரு பகுதியில் உள்ள நரம்பு மண்டல செல்களின் (நியூரான்கள்) செயல்பாட்டைச் சீர்குலைத்துப் பாதிப்பை உண்டாக்குகிறது. தசைகளின் கட்டுப்பாடு, சமநிலை மற்றும் இயக்கம் தொடர்பான அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் பார்கின்சன் நோய்ப்பாதிப்பைக் கண்டறிகின்றனர்.
பார்கின்சன் நோய்ப்பாதிப்பு சிந்தனைத் திறன் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட உடல் செயல்பாட்டின் பிற அம்சங்களையும் வெகுவாகப் பாதிக்கின்றது. இந்த நோய்ப்பாதிப்பிற்குள்ளானவர்களின் உடலில், டோபமைன் வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் நியூரான்கள் செயலற்றதாக மாறத் தொடங்குகின்றன. இதனால், மூளையின் நரம்பு செல்கள் (நியூரான்கள்) இடையேயான சமிக்ஞைகள் (signals) சீராக ஒருங்கிணைக்கப்படுவதில்லை.
நரம்புகளின் செயல்பாடுகள் குறைதல், நடைப்பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுதல், தசைகளில் ஏற்படும் விறைப்பு உணர்வு, நடுக்கம், கிளர்ச்சி போன்றவை, பார்கின்சன் நோய்ப்பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். பார்கின்சன் நோய்ப்பாதிப்பிற்கான உண்மையான காரணம் இன்னும் அறியப்படவில்லை எனினும், மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளினாலும் ஏற்படுகிறது.
பார்கின்சன் நோய்ப்பாதிப்பிற்கான சிகிச்சைத் திட்டங்களில் உடற்பயிற்சி, ஆழ்ந்த மூளைத் தூண்டுதல் போன்றவற்றின் கட்டமைக்கப்பட்ட திட்டங்கள் அடங்கும். இந்நோயாளிகளுக்கு, அவர்களின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப பயிற்சிகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கான உடற்பயிற்சிகள், நோய்ப்பாதிப்பின் வகை, அதன் நிலை, தீவிரத்தன்மைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. இது பார்கின்சன் நோய்ப்பாதிப்பை நிர்வகிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகின்றன.
பார்கின்சன் நோயாளிகளுக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் இன்றியமையாத பகுதியாக உள்ளது. பார்கின்சன் நோயாளிகளுக்கு, சிகிச்சையைப் போலவே, உடற்பயிற்சியும் மிக முக்கியமானது ஆகும். இந்நோயாளிகளுக்கு உடல் வலிமை, நெகிழ்வுத்தன்மை, சமநிலை, அறிவாற்றல் நிலை உள்ளிட்டவற்றைப் பராமரிக்க, உடற்பயிற்சி உதவுகிறது.
பார்கின்சன் நோயாளிகள் உடற்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
பார்கின்சன் பாதிப்பு நோயாளிகளால், அதன் அறிகுறிகளைத் திறம்பட நிர்வகிப்பது கடினம் ஆகும். பார்கின்சன் நோய்க்கான பயிற்சிகள், தற்போது பார்கின்சன் நோய்ப்பாதிப்பிற்கான ஆழ்ந்த மூளைத் தூண்டுதல் சிகிச்சையின் இணைப்பாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.
பார்கின்சன் நோயாளிகள் உடற்பயிற்சி மேற்கொள்வதனால்
- மேம்பட்ட சமநிலை
- உடலின் ஒருங்கிணைப்பு
- தசைகளின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பு
- மனநிலை மேம்பாடு
- மனநலன்
- மனச்சோர்வு, பதட்டம் உள்ளிட்ட பாதிப்புகளை நீக்குகிறது.
உடலின் இயக்கங்கள் மற்றும் மோட்டார்த் திறன்களை மேம்படுத்துகிறது.
உடல் உறுப்புகளின் மேம்பட்ட செயல்பாடுகள் மற்றும் மோட்டார்த் திறன்களை ஊக்குவிக்க, நரம்பு மண்டலம், தசைகள், மூளை என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவது இன்றியமையாததாக உள்ளது. மோட்டார்த் திறன்கள், தசைச் செயல்பாடுகளை உள்ளடக்கியது ஆகும். இது உடல் உறுப்புகளின் இயக்கங்களில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேம்பட்ட செயல்பாடுகள் மற்றும் மோட்டார்த் திறன்களின் ஒருங்கிணைப்பு நிகழ்வுகளானது, பார்கின்சன் நோயாளிகளுக்கு மிகவும் சவாலான நடவடிக்கைகளாக மாறிவிடுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், பார்கின்சன் நோயாளிகளுக்கு ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலைப் பயிற்சிகள் ஒரு முக்கியமான படிகளாகத் திகழ்கின்றன.
உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொள்வதன் மூலம், உடலில் ரத்த ஓட்ட விகிதம் அதிகரித்து, தசைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், தசைகள் வலுப்பெறுகின்றன மற்றும் வலி மற்றும் விறைப்பு உணர்வு கட்டுப்படுவது உறுதிப்படுத்தப்படுகிறது. பார்கின்சன் நோயாளிகள், செயல்பாடுகள் அதிகரிக்க, சிறப்பு வகைப் பயிற்சிகளுடன், தசை வளர்ச்சியிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உடலின் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பில் மேம்பாடு
உடலின் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது இன்றியமையாதது ஆகும். பார்கின்சன் நோய்ப்பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மற்றும் வயதானவர்களுக்குச் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பின் செயல்முறை, மூளையின் சிறுமூளைப் பகுதியால் வழிநடத்தப்படுகிறது. இது சரியான செயலை அடைய, இயக்கத்துடன் சிந்திக்கும் திறனை ஒருங்கிணைக்கிறது. இது சரியான தசை நடவடிக்கைக்கும் வழிவகுக்கிறது.
பார்கின்சன் நோய்ப்பாதிப்பிற்கான வலிமைப் பயிற்சி, மூளைக்கும், உடல் செயல்பாடுகளுக்கும் இடையிலான தொடர்பை ஊக்குவிக்கும். பொதுவாக, பார்கின்சன் நோயாளிகளுக்கு உடற்பயிற்சியின் நன்மைகள், உடல் தோரணையைப் பராமரிப்பதோடு, தசைகளை நெகிழ்வானதாக மாற்றுகிறது.
தசைகளின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
நரம்பு மண்டலத்தில் உள்ள சுழல் செல்கள் மற்றும் கோல்ஜி தசைநார் ஏற்பிகள், தசைகளின் வலிமையை அதிகரிப்பதோடு, நெகிழ்வுத்தன்மையின் ஒருங்கிணைப்பைக் கட்டுப்படுத்துகின்றன. பார்கின்சன் நோயாளிகளில், சாத்தியமான எதிர்வினைகள், தசை வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையின் வளர்ச்சியைத் தொடர்ந்து பாதிக்கின்றன. இது தசை விறைப்பு மற்றும் நடுக்க உணர்விற்கு வழிவகுக்கிறது.
பார்கின்சன் நோயாளிகளுக்கு. நெகிழ்வுத்தன்மை அதிகரிக்க யோகா மற்றும் வலிமைப் பயிற்சிகளின் மூலம் போதிய நன்மைகளைப் பெற இயலும். பார்கின்சன் நோய்ப்பாதிப்பின் அனைத்து நிலைகளிலும் உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ், நீட்சி மற்றும் யோகா உள்ளிட்ட பிசியோதெரபி விருப்பங்கள், திறம்பட நிர்வகிக்க உதவுகின்றன. இது தசைகளின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பது மட்டுமல்லாது, மனநிலையை மேம்படுத்துகிறது. விறைப்பு, வலி மற்றும் நடுக்க உணர்வானது கணிசமாகக் குறைக்க உதவுகிறது.
மனநல வாழ்வு மற்றும் மனநிலை மேம்பாடு
உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனநிலை மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்தும் நிகழ்வானது, பார்கின்சன் நோயாளிகளுக்கு ஏற்ற சக்திவாய்ந்த மற்றும் முழுமையான அணுகுமுறையாக உள்ளது. யோகா, உடற்பயிற்சி, நீட்சி நுட்பங்கள் உள்ளிட்ட நடைமுறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், பார்கின்சன் நோயாளிகளின் மனநிலையும், மன ஆரோக்கியமும் மேம்படும் என்று ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த உடற்பயிற்சி நுட்பங்களுடன் ஆழ்ந்த மூளைத் தூண்டுதல் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நோயாளிகளுக்கு நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டது தெளிவாகத் தெரிந்தது.
பார்கின்சன் நோயாளிகளுக்கான சிறந்த உடற்பயிற்சிகள்
ஏரோபிக் உடற்பயிற்சிகள்
பார்கின்சன் நோயாளிகளுக்கு, ஏரோபிக் உடற்பயிற்சிகள், மிகவும் பாதுகாப்பானதாக விளங்குகின்றன. நடைப்பயிற்சி, சைக்கிளிங் செய்தல், ஜாகிங் உள்ளிட்ட பயிற்சிகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
பார்கின்சன் நோயாளிகளுக்கு உகந்த வகையிலான சில ஏரோபிக்ஸ் பயிற்சிகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.
நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங்
நடைப்பயிற்சி மற்றும் விறுவிறுப்பான நடைப்பயிற்சி (ஜாகிங் பயிற்சி)யானது, பார்கின்சன் பாதிப்பு நோயாளிகளுக்குச் சிறந்த பலன்களை வழங்குவனவாக உள்ளது. இது அவர்களின் உடல் செயல்பாடுகளை மேம்படுத்தவும், சமநிலையைப் பராமரிக்கவும் உதவுகின்றன. நடைப்பயிற்சியை, யாருடைய துணையுமின்றி, சுதந்திரமாக மேற்கொள்ளவும், மாடிப்படிகளில் ஏறி, இறங்கவும், உடலின் பிற செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகிறது.
உடலின் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் சைக்கிளிங் பயிற்சி
பார்கின்சன் நோயாளிகளுக்கு, சைக்கிள் ஓட்டுதல் பயிற்சியானது, சகிப்புத்தன்மையை அதிகரிக்கவல்லச் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது. இந்தப் பயிற்சியானது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், சிந்தனைச் செயல்பாட்டை நெறிமுறைப்படுத்தவும் உதவும். சைக்கிள் ஓட்டுவதன் மூலம், பிட்டம், தொடைகள், வயிற்றுப் பகுதியின் தசைகளை வலுப்படுத்துகிறது. இது சகிப்புத்தன்மையை அதிகரிப்பதோடு, எடை நிர்வாகத்திற்கும் உதவுகிறது.
பார்கின்சன் நோயாளிகள், ஏரோபிக் பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன், நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். அவர்கள், எத்தகைய ஏரோபிக் பயிற்சிகள், உங்களுக்குப் பலனளிப்பதோடு, பாதுகாப்பானதாக உணர வைக்கும் என்பதைக் கண்டறிந்து அதைப் பரிந்துரைச் செய்வர்.
வலிமைப் பயிற்சிகள்
பார்கின்சன் பாதிப்பு நோயாளிகள், வலிமைப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், அவர்களின் தசைகள் வலுவடைவதுடன், நெகிழ்வுத்தன்மையுடன் விளங்குகிறது. எழுந்திருத்தல், நடைப்பயிற்சி, வளைத்தல் உள்ளிட்ட நோயாளிகளின் வழக்கமான இயக்கங்களை மேம்படுத்தவும் உதவுகிறது.
உடல் எடையை நிர்வகிக்கும் பயிற்சிகள்
பார்கின்சன் நோயாளிகள் மேற்கொள்ளும் வலிமைப் பயிற்சிகள், உடல் எடையை நிர்வகிப்பில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்தப் பயிற்சியில், கூடுதல் உபகரணங்கள் அல்லது எடைச் சாதனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடலின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதற்கும், சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வதற்கும், உடல் எடைப் பயிற்சிகள் உதவுகின்றன. இந்தப் பயிற்சிகளை, எங்கு வேண்டும் என்றாலும் மேற்கொள்ள இயலும். புஷ் அப்கள், புல் அப்கள், சின் அப்கள், ஸ்குவாட்கள் சைக்கிளிங் போன்ற பயிற்சிகள், உடல் எடைப் பயிற்சிகளாக விளங்குகின்றன. நோயாளியின் நிலைக்கு ஏற்ப, இந்தப் பயிற்சிகளை மாற்றி அமைக்க இயலும்.
நெகிழ்வுத்தன்மை மற்றும் நீட்சிப் பயிற்சிகள்
பார்கின்சன் நோயாளிகளுக்கு ஏற்படும் தசை விறைப்பைப் போக்கவும், உடலின் செயல்பாடுகளைப் பராமரிக்கவும், நெகிழ்வுத்தன்மைப் பயிற்சிகள், மிகவும் பயனுள்ளதாக உள்ளன. தசைகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், காயங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு, இயக்க வரம்பை மேம்படுத்த நீட்சிப் பயிற்சிகள் உதவுகின்றன. நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த, யோகாப் பயிற்சி உடன் சில சிறப்பு நீட்சி பழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
நீட்சி நுட்பங்கள்
பார்கின்சன் நோய்க்கான நெகிழ்வுத்தன்மைப் பயிற்சிகளில், சில நீட்சி நுட்பங்கள் பார்கின்சன் நோயாளிகளுக்கு மிகுந்த நன்மைப் பயப்பனவாக உள்ளன. ஏனெனில் அவை இயக்க வரம்பை மேம்படுத்தவும், தசை விறைப்பைக் குறைக்கவும், உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
மேலும் வாசிக்க : பார்கின்சன் நோய்க்கான உறக்க வழிமுறைகள் அறிவோமா?
உடலின் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பிற்கான பயிற்சிகள்
உடல் நடுக்கம், சமநிலை அற்ற தன்மை, ஒருங்கிணைப்பு இல்லாத நிலை உள்ளிட்டவை, பார்கின்சன் நோய்ப்பாதிப்பிற்கான முக்கியமான அறிகுறிகள் ஆகும். இதற்கான பயிற்சியை, அவர்கள் முறையாக மேற்கொள்வதன் மூலம், நிலைத்தன்மை அதிகரிப்பிற்கும், வீழ்ச்சி அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. டை சி உள்ளிட்ட பயிற்சிகள், நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.
மனம் – உடல் நடைமுறைகளை இணைத்தல்
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் அன்றாட வாழ்க்கையில், மனம் – உடல் நடைமுறைகளை இணைப்பது என்பது, உடல் மற்றும் மன நல்வாழ்வை நிர்வகிப்பதற்கான முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது. பார்கின்சன் நோய் என்பது ஒரு நரம்பியக்கடத்தல் கோளாறு ஆகும். இது இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு, தளர்வு, நினைவாற்றல் மற்றும் உடலின் செயல்பாடுகளைப் பாதிக்கிறது. மனம் – உடல் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் யோகா, பார்கின்சனுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலைப் பயிற்சிகளுக்கு ஒரு முக்கியமான அணுகுமுறையாகத் திகழ்கிறது.
நினைவாற்றல் மற்றும் தளர்வு நுட்பங்கள்
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் நினைவாற்றல் மற்றும் தளர்வு நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயக்கம், சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பைப் பாதிக்கும் இந்த நரம்பியல் பாதிப்பு, பெரும்பாலும் பல்வேறு உடல் மற்றும் உணர்ச்சி சவால்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, அன்றாட நடைமுறைகளில் நினைவாற்றல் நடைமுறைகளை இணைப்பதன் மூலம், பார்கின்சன் பாதிப்பு நோயாளிகளுக்கு மன அமைதியையும் சுயமரியாதையையும் ஊக்குவிக்க இயலும். இதனால் அவர்களின் மன ஆரோக்கியம் மேம்படும். கூடுதலாக, ஆழமான மூளைத் தூண்டுதல் சிகிச்சையின் மூலம், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியும். பார்கின்சன் நோயாளிகளுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் நிலைமையின் உணர்ச்சி தாக்கத்தை நிர்வகிக்கப் பரந்த அளவிலான வழக்கமான தியான அமர்வுகளை வழங்குகிறது. தியானத்தின் மூலம் நினைவாற்றலை வளர்ப்பது, அமைதிக்கான ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டப்பட்ட காட்சிப்படுத்தல் போன்ற நுட்பங்கள் இதில் அடங்குகின்றன.
மேற்குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டு, பார்கின்சன் நோய்ப்பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்று, வளமான மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ வழிசெய்வோமாக…