Top view of of different high protein foods kept in a plate and few spread on a blue cloth spread on a wooden table.

உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் உணவு வகைகள்

நம் உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளான புதிய செல்கள் உற்பத்தி, ஹார்மோன் மற்றும் வைட்டமின்கள் தயாரித்தல் நிகழ்வுகளில் கொழுப்புகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நம் உடல், அதற்குத் தேவையான கொழுப்பைக் கல்லிரலில் இருந்து மட்டுமல்லாது பால் பொருட்கள், கோழிக்கறி, மாட்டுக்கறி உள்ளிட்ட உணவுவகைகளில் இருந்தும் பெறுகின்றன.

அனைவரின் உடலிலும் தேவையான அளவு கொழுப்புகள் உற்பத்தியாகின்றன. இது அதிகமாகும்போது, உடலுக்கு நன்மைப் பயக்கும் நிலையிலிருந்து தீங்கு விளைவிப்பனவாக மாறுகின்றன.

உடலின் ரத்த ஓட்டத்தில் கொழுப்பும் இருப்பதால், அது நமது உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்கிறது. அதிகப்படியான கொழுப்பானது, இதய நோய்ப் பாதிப்புகள் மற்றும் பக்கவாத பாதிப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. இதன்காரணமாக, உடலின் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

கொழுப்புகளை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

நல்ல கொழுப்பை, HDL என்றும் அதிக அடர்த்தி கொழுப்புப் புரதம் என்றும் அழைக்கிறோம். இது உடலின் ஆரோக்கியத்திற்கும் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கும் முக்கியப்பங்கு வகிக்கின்றது.

LDL – கெட்ட கொழுப்பு அல்லது குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம் என்று அழைக்கிறோம். இது பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானதாக உள்ளது. இதய நோய்கள், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்குக் காரணமாக உள்ளன.

கெட்ட கொழுப்பு என்றால் என்ன?

உடலுக்கு ஊறு விளைவிக்கவல்லக் கெட்ட கொழுப்பானது, ரத்தக்குழாய்களின் உள்ளே படிகிறது. இந்தப் படலத்தின் அளவு பெரியதாகும் நிலையில், ரத்த ஓட்டமானது தடைப்படுகின்றது. இதன்காரணமாக, இதயத்திற்குப் போதுமான அளவிலான ரத்தம் செல்லாததால், இதயம் சீராக இயங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்ப் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும் காரணிகள்

உணவுமுறை

அதிகக் கொழுப்புகள் கொண்ட இறைச்சி, வெண்ணெய் உள்ளிட்ட உணவுவகைகளை அதிகம் உட்கொள்வது, இதயப் பாதிப்புகளை, நாமே வேண்டி விரும்பி வரவழைத்துக் கொள்வதற்குச் சமம் ஆகும். அதிகச் செறிவு கொண்ட கொழுப்பு, உணவுவகைகளால் கிடைக்கும் கொழுப்பு உள்ளிட்டவை, கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன.

புகைப்பிடித்தல்

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பிற்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. புகையிலைப் பொருட்களின் பயன்பாடு நல்ல கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதனால், கல்லீரலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. இது இதயத்திற்குச் செல்லும் தமனிகளில் படிந்து, ரத்த ஓட்டத்தைத் தடுத்து, இதய நோய்களுக்குக் காரணமாகிறது.

போதிய உடற்பயிற்சியின்மை

இன்றைய அவசர உலகம், உடற்பயிற்சிக்குக்கூட நேரம் இல்லாத வகையினதாக உள்ளது. இதன்காரணமாக, பெரும்பாலானோர் உடற்பருமன் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். உடற்பருமன் பாதிப்பு, உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பாலேயே நிகழ்கின்றது.

மரபியல் காரணிகள்

உடலில் கொழுப்பு படிதல் நிகழ்வின் பின்னணியில் மரபியலும் உள்ளது. உங்கள் உடலில் எந்த வகையான கொழுப்பு அதிகமாக உள்ளது என்பதை நிர்ணயிக்கும் காரணியாக மரபியலும் உள்ளது.

வயது

வயது அதிகரிக்க, அதிகரிக்க, உடலில் கெட்ட கொழுப்பின் சேகரமும் அதிகரிக்கின்றது.

A vector image of an overweight man eating burger and soft drink, and images of tiny people aroung him giving him fast food.

அதிக உடல் எடை

உடலில் நல்ல கொழுப்பின் அளவு குறைந்து, கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிப்பதாலேயே,உடல் எடை அதிகரிக்கின்றது

பாலினம்

பெண்கள், மாதவிடாய் சுழற்சிக்கு முன்னதாக, குறைந்த அளவிலான கெட்ட கொழுப்பையே கொண்டிருப்பர். ஆனால், மாதவிடாய் சுழற்சி முடிவுற்ற பிறகு, அவர்களின் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்துக் காணப்படும். இதன்காரணமாகவே, அவர்கள் நடுத்தர வயதில் அதிக உடல் எடையுடன் காணப்படுகின்றனர்.

ஆண்களுக்கு, அவர்கள் மேற்கொள்ளும் உணவுமுறை உள்ளிட்ட பழக்கவழக்கங்களினாலேயே, உடலின் கெட்ட கொழுப்பானது அதிகரிக்கின்றது.

இணைநோய்கள்

நீரிழிவு, எய்ட்ஸ், சிறுநீரக நோய்கள் உள்ளிட்டவை, உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிப்பால் மட்டுமே ஏற்படுகின்றது.

ஸ்டீராய்டுகள்

ஸ்டீராய்டுகளின் அதீதப் பயன்பாடு, உடலில் கெட்ட கொழுப்பு படிதலை அதிகரிக்கின்றது.

உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும் உணவுகள்

இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரிக்கும் போது, செயற்கையான நிலைநிறுத்திகளும், பாதுகாப்பு பொருட்களும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.இதன்காரணமாக, இதில் கெட்ட கொழுப்பானது அதிகம் காணப்படுகின்றன. இறைச்சி உணவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கக் குளிர்பதனப் பெட்டியில் வைக்கிறோம். தேவைப்படும்போது சமைத்து உண்பதால், இது புற்றுநோய் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.கொழுப்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்படாமல் காக்க வேண்டும் என்றால், உடனடியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதை நிறுத்திக் கொள்வது நல்லது.

இறைச்சி உணவில் எந்தளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளதோ, அந்தளவிற்குக் கொழுப்பு தொடர்பான பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளன. எனவே, இறைச்சியை, மாதத்திற்கு 2 முறை என்ற அளவிலேயே சாப்பிட்டு வருவது நல்லது.

பால் பொருட்கள்

பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்றவை இந்தியாவில் பெரும்பாலான வீடுகளின் சமையலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்த உணவுப் பொருட்களில், அதிகளவிலான கொழுப்புகள் உள்ளதால், இதைப் பயன்படுத்துபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பேக்கரி உணவு வகைகள்

பிஸ்கட், கேக், பஃப்ஸ், கிரீம் ரோல்கள் உள்ளிட்டவைகள் தயாரிப்பு நிகழ்வில் தாவரக் கொழுப்புகளான வனஸ்பதி அல்லது மார்கரைன் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ள டிராஸ்ஸ் கொழுப்புகள், நமது உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் கணிசமான அளவிற்கு அதிகரித்து விடுகின்றன.

துரித உணவுகள்

சமோசா, பாவ் பாஜி, பீஸ்ஸா, பர்கர் உள்ளிட்ட துரித உணவு வகைகளில்,கெட்ட கொழுப்பானது மிக அதிக அளவில் உள்ளது. இத்தகைய உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், நீரிழிவுப் பாதிப்பு, உடல் பருமன், பெண்களுக்கு PCOS பாதிப்பு ஏற்படவும் முக்கிய காரணமாக உள்ளன.

மேலும் வாசிக்க : மருத்துவ முறையில் மரபணுச் சோதனையின் நன்மைகள்

உணவுமுறையில் குறைந்த அளவிலான காய்கறிகள்,பழ வகைகள்

பழ வகைகள் மற்றும் காய்கறிகளில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் இருப்பதால், அவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிகளவில் தாவரப் புரதங்களும், ஆன்டி ஆக்சிடண்ட்களும் உள்ளதால், அவை உடலில் உள்ள நச்சுகளை அகற்றி, உடலின் முக்கியப் பாகங்களான கல்லீரல், குடல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் சீராக இயங்க உதவுகின்றன. நாம் சாப்பிடும் உணவுமுறையில், காய்கறி வகைகள் மற்றும் பழங்கள் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள்

கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவு வகைகள், குடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சி மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. ஓட்ஸ், பட்டாணி, ஆப்பிள், கொய்யாப்பழம், கேரட், சிட்ரஸ் பழ வகைகள் உள்ளிட்டவைகளில், கரையக்கூடிய நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளன. இந்த உணவுவகைகளை, நாம் அதிகளவு சாப்பிட்டு வருவது அவசியமாகும்.

அதிகச் சர்க்கரைக் கொண்ட உணவு வகைகள்

பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்டு விற்பனைச் செய்யப்படும் பழச்சாறு வகைகள், டெசர்ட்கள் உள்ளிட்டவைகளில் அதிகக் கொழுப்பு மட்டுமல்லாது, அதிகளவிலான சர்க்கரையும் உள்ளது. இந்தப் பழச்சாறு வகைகளை அதிகம் அருந்திவந்தால், இந்த அதிகளவிலான சர்க்கரை, உடலில் கொழுப்பாக மாற்றப்பட்டு, கெட்ட கொழுப்பாகப் படிந்து, பல்வேறு பாதிப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன.

இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்குக் காரணமான கெட்ட கொழுப்புகள் உள்ள உணவு வகைகளின் பயன்பாட்டைக் குறைத்து, அதன் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் பெறுவோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.